Thursday, February 7, 2008

வளரும் வழி

புதிதாக ஆரம்பித்த நிறுவனத்தின் வளர்ச்சி இலக்குகள் ஒவ்வொரு ஆண்டும் பல மடங்குகளாக அதிகரிக்க வேண்டும். என்னென்ன செய்கிறோம், எங்கெங்கு வாய்ப்புகள் இருக்கின்றன. என்னென்ன பலங்கள், என்னென்ன பலவீனங்கள், எங்கெங்கு ஆபத்துகள் வரலாம் என்று அலசிக் கொள்ள வேண்டும்.

சேவை நிறுவனம் ஒன்றில், ஆண்டு 0ல் X அளவு விற்பனை இருந்தால், 1ல் 5X, இரண்டாம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட மூன்று மடங்கு, 4ம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு, 5ம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்காக விற்பனை அதிகரிக்க வேண்டும்.

இப்படி எண்களில் சிந்திப்பது, இலக்குகளை நிர்ணயிப்பது, அதை முறைப்படி தினமும் கண்காணிப்பது, நிர்ணயித்த இலக்குகளை எட்டுவது என்பது எல்லோருக்கும் வந்து விடாது. குறிப்பாக சம்பளத்துக்கு வேலைபார்க்கும் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்களுக்கு இப்படி கோடிகளைத் துரத்துவது மனதளவில் பொருந்தாத ஒன்று.

பலரைச் சேர்த்து நிறுவனம் நடத்துபவர்களுக்கு அந்த மதிப்பு உருவாக்கும் பொறுப்பு இருக்கிறது. ஒவ்வொரும் திறம்பட செயல்பட வழி வகுத்து, முயற்சிகளின் வெளிப்பாட்டை பலனுள்ள சேவையாக மாற்றி, மாற்றிய சேவையை வாடிக்கையாளருக்கு உருப்படியாகப் போய்ச் சேர வைத்து, அந்த விபரங்களை தெளிவாக எடுத்துரைத்து, வாடிக்கையாளர் பெற்ற பலன்களில் ஒரு பகுதியை கட்டணமாக பெற்று வருமானம் பெருக்க வேண்டும்.

அதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, வசதிகளைப் பெருக்க வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

இன்போசிஸ் நிறுவனத்தில் ஆரம்பத்தில் வேலை பார்த்த நூற்றுக் கணக்கான பேரின் சொத்து மதிப்பு இப்போது கோடிக் கணக்கில். முதல் நூறு எண்களுக்குள் ஒருவராக சேர்ந்தவரின் பங்குகளின் மதிப்பு நூற்று முப்பது கோடி ரூபாயாம்.

அதன் பொருள் என்ன?

ஒவ்வொருவரின் திறமையை/வேலையை வாடிக்கையாளருக்கு பயனுள்ள சேவையாக மாற்றியிருக்கிறது அந்த நிறுவனம். வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த சேவையின் மதிப்பு பல கோடி ரூபாய்கள், அதில் ஒரு பகுதி நிறுவனத்துக்கு கட்டணமாக வந்திருக்கிறது. அதில் ஒரு பகுதி வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளமாக, பங்குகளாக போய்ச் சேருகிறது.

3 comments:

வால்பையன் said...

உண்மையிலும் உண்மை,
இம்மாதிரியான நிறுவனங்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி,
சொன்னால் யார் கேக்றாங்க,
எவ்ளோ பெரிய சண்டை இங்கே வந்து பாருங்க

வால்பையன்

KARTHIK said...

//சேவை நிறுவனம் ஒன்றில், ஆண்டு 0ல் X அளவு விற்பனை இருந்தால், 1ல் 5X, இரண்டாம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட மூன்று மடங்கு//

வணக்கம் அண்ணா.
எங்களதும் சேவை நிறுவனம் தான்.நீங்கள் சொல்லும் இந்த கணக்கை விட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்துவது அல்லது தக்கவைப்பது.
சக போட்டியாளர்களை சமாளிப்பது.இப்படியே ஆண்டு கடக்கிறது.லாபக்கணக்கை காட்டிலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையே முக்கியமாக படுகிறது.

//இப்படி எண்களில் சிந்திப்பது, இலக்குகளை நிர்ணயிப்பது, அதை முறைப்படி தினமும் கண்காணிப்பது, நிர்ணயித்த இலக்குகளை எட்டுவது என்பது எல்லோருக்கும் வந்து விடாது.//

உண்மைதான்.

//குறிப்பாக சம்பளத்துக்கு வேலைபார்க்கும் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்களுக்கு இப்படி கோடிகளைத் துரத்துவது மனதளவில் பொருந்தாத ஒன்று.//

இந்த கலாச்சாரத்திலிருந்து வெளி வந்தவர்கள் தான் பெருமளவில் கோடிகளை குவித்துள்ளனர்.

//ஒவ்வொருவரின் திறமையை/வேலையை வாடிக்கையாளருக்கு பயனுள்ள சேவையாக மாற்றியிருக்கிறது அந்த நிறுவனம்.//

சரிதான்

அண்ணா முடிந்தளவு வாரம் ஒருபதிவேனும் இட முயற்சி செய்யுங்கள்.
நன்றி.

மா சிவகுமார் said...

நன்றி வால்பையன்.

கார்த்திக்,

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுடன் விற்பனை மதிப்பையும் கவனிக்க வேண்டும். இல்லை என்றால் நாம் சரியான சேவையை சரியான செலவில் கொடுக்கிறோமா என்று எப்படி மதிப்பிடுவது?

அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன், கார்த்திக். நன்றி.

அன்புடன்,
மா சிவகுமார்