Monday, March 10, 2008

இன்றைய உலகளாவிய நிறுவனத்தின் தன்மை

இன்றைய எகனாமில் டைம்ஸ் நாளிதழில் வெளியாகியுள்ள பேட்டியின் படி

  • ஐபிஎம் - இந்தியா இந்தியாவின் நான்காவது பெரிய தகவல் தொழில் நுட்ப சேவைகள் நிறுவனம்.
  • ஐபிஎம் இந்தியாவில் 73,000 பேர் பணிபுரிகிறார்கள்
  • உலகளாவிய ஐபிஎம் வருமானத்தில் 55% சேவைகளிலிருந்து வருகிறது.
  • 65% வருமானம் அமெரிக்காவுக்கு வெளியிலிருக்கும் சந்தைகளிலிருந்து கிடைக்கிறது

மனித வளம், வாடிக்கையாளர் உறவு, சிறப்பான சேவைகள் இந்த மூன்றும்தான் ஐபிஎம் இந்தியாவுக்கு வழிகாட்டும் நெறிகளாக பின்பற்றப்படுகின்றனவாம்.

“யாரும் தொழில்நுட்பத்தை மட்டும் வாங்குவதில்லை. வாடிக்கையாளர்கள் தொழில் முறை ஆதாயங்களை கணக்கிட்டுப் பார்க்கிறார்கள்.”

(ஐபிஎம் இந்திய துணைத் தலைவர் ராஜேஷ் நம்பியார்).

ஐந்தாவது பக்கத்துக்குப் போகவும

5 comments:

KARTHIK said...

imm

மா சிவகுமார் said...

வணக்கம் கார்த்திக்,
தினமும் பொருளாதார நாளிதழ் ஏதாவது படிக்கிறீர்களா?
அன்புடன், மா சிவகுமார்

KARTHIK said...

வணக்கம் அண்ணா
இப்போது பொருளாதார நாளிதழ்கள் என்று தனியாக ஏதும் படிப்பதில்லை.தினத்தந்தி யில்
வரும் பொருளாதாரம் பகுதியை படிப்பதோடு சரி.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.

நேரமிருந்தால் இந்த புத்தகத்தை வாசித்து விட்டு உங்கள் பார்வையில் ஒரு பதிவிடுங்கள்.

மா சிவகுமார் said...

கார்த்திக்,
தினத்தந்தியில் எகனாமிக் டைம்சின் செய்திகளை மொழி மாற்றி வெளியிடுகிறார்கள். நல்ல தரமான எளிமையான மொழிபெயர்ப்பு. முடிந்தால் ஆங்கிப் பத்திரிகைகளையும் புரட்ட ஆரம்பியுங்கள்.

அந்தப் புத்தகம் எதைப்பற்றியது. கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

KARTHIK said...

//முடிந்தால் ஆங்கிப் பத்திரிகைகளையும் புரட்ட ஆரம்பியுங்கள். //

முயற்சிக்கிறேன்.


//அந்தப் புத்தகம் எதைப்பற்றியது. கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.//

அடுத்தவாரம் அனுப்பி வைக்கிறேன் அண்ணா