Monday, January 22, 2007

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ??

எனக்குக் கிடைக்கும் வருமானத்தை நான் செலவளிக்கிறேன். எப்படிச் சம்பாதிப்பது எப்படி செலவளிப்பது என்று படிப்பது அலசுவது பொருளாதரத்தின் ஒரு பிரிவு - microeconomics.
  • நான் செலவளிக்கும் காசு இன்னொருவருக்கு வருமானம். நான் சேமிக்கும் காசு இன்னொருவருக்கு முதலீடு என்று கூட்டாக வாழும் சமூகங்களில் ஒவ்வொரு பொருளாதாரச் செயலும் சுற்றியிருப்பவர்களைப் பாதிக்கிறது.
  • அது பரவிக் கொண்டே போய் பல ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது. அதே போல பல்லாயிரக்கணக்கான மக்களின் நடவடிக்கைகள் நம் வாழ்வை பாதிக்கின்றன.
  1. அரசு இலவச தொலைக் காட்சி பெட்டி வழங்கும் திட்டத்தினால் எனக்கு என்ன குறைவு, என்ன நன்மை?
  2. கணினித் துறையில் பட்டம் பெற்றால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்?
  3. இந்தியாவின் நூறு கோடி மக்கள் அமெரிக்காவின் முப்பது கோடி மக்களை விட ஏன் வறியவர்களாக இருக்கிறார்கள்?
  4. உலக மயமாக்கல் ஏன் வயிற்றில் புளியைக் கரைக்கிறது?
இவை எல்லாவற்றையும் இன்னும் பல நூறு கேள்விகளுக்கு விடைகளைப் புரிந்து கொள்ள மேக்ரோ எகனாமிக்ஸ் (macroeconomics) என்ற பொருளாதாரப் பிரிவு முயல்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி 1930கள் வரை, தனி மனிதன், நிறுவனங்கள், அரசுகள் தமது வேலையைப் பார்த்துக் கொண்டு போனால் போதும். ஆதம் ஸ்மித்தின் மந்திரக் கோல் தன் மாயத்தைக் காட்டி எல்லோருக்கும் வேலை வாய்ப்பு, சரியான உற்பத்தி, நியாயமான விலை என்று சரி செய்து கொள்ளும் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

'வேலையில்லாத் திண்டாட்டம் உற்பத்திப் பற்றாக் குறை, பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டு விட்டால் பல ஆண்டுகளுக்கு அந்தத் தேக்கம் நீடிக்கக் கூடும். நீண்ட கால நோக்கில் அது சரியாகி விடும் என்றாலும், இடைப்பட்ட காலத்தில் அவற்றைச் சரி செய்யத் தேவையான நடவடிக்கைகளை அரசுகள் எடுக்க வேண்டும். வெறும் நீண்ட கால நோக்கில் இருந்து விட்டால் போதாது. நீண்ட காலத்தில் நாம் எல்லோரும் இறந்து விடுவது மட்டும்தான் நிச்சயம்' என்று ஒட்டு மொத்தமான பொருளாதார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த அரசுகள் செயல்பட வேண்டிய தேவையை வலியுறுத்தி மேக்ரோ எகனாமிக்சு என்ற துறை தலையெடுத்தது.

17 comments:

K.R.அதியமான் said...

Keynesian concepts of aggregate demand and employment, have been
thoroughly disporved. And UK suffered heavily (and India) too
by following Keynes until the 80s.

there are no free lunches in this
world. and someone has to bear the bill for free lunches.

One important quote :
"there is no surer way of undermining a nation's character than by undermining her currecy.."

Our rupee has depreciated by nearly
1500 % since 1947 causing misery
and more poverty coupled with loss
of morals and public ethics...

மா சிவகுமார் said...

அதிமான்,

பணம் குறித்து Jay என்ற நண்பர் எழுதிய கருத்துக்களையும் என்னுடைய பதில்களையும் பார்த்து விடுங்கள்.

http://porulsey.blogspot.com/2007/04/economics-48.html

சுருக்கமாகச் சொன்னால் உங்கள் கருத்துக்கள் தீவிர monetarist கருத்துக்கள். அவற்றில் முழு உண்மை இல்லை என்பது எனது புரிதல். நீங்கள் சொல்வது போல உண்மை எங்கோ இடையில் ஒழிந்து கொண்டிருக்கிறது :-)

அன்புடன்,

மா சிவகுமார்

K.R.அதியமான் said...

Pls read the chapter cures for
inflation in the famous book
Free to Choose by Friedman.
also i leafed thru his monumental
work "A Monetary History of the United States, 1867-1960." at the USIS. Too technical for us ; but
is a very important book about moneterism. Keynes has been discredited. anyway he advocated only 2 or less % of deficts ; never this 10 % deficts (of Central and State govts combined)..

In the 50s and 60s govt defict financing produced double digit inflation. there is ample proof for this.

Well, if we still refuse to understand this, then the poor have to pay the worst price in the form of more inflation and higher
kandu vatti. Interest rates are directly proportional to inflation.
and in 1930 Gandhiji was able to borrrow at 5 % from banks for Khadar movement ! inflation and interst rates were so low.

And Winston Churchill records in his memoirs, of borrowing at 24 % from Marwadi moneylenders to buy polo horses in 1890s at Bangalore..

now kandu vatti is some 120 % or more...

and my grandfather said about interst rates in bazar ar 9% in early 50s (before 'socialism')..

monetoerism is no joke and results
speak for themselves...

and i am more concerned about the license raj that still exists in
bus tranport sector in India. While there is an acute shortage of
buses, esp in peak hours everywhere, no new 'routes' are
sanctioned ; and pvt bus owners lobby is well entrenched. routes are sold for croroes of rupess in our area. compare the picture with
lorry transport where free competition is keeping up with the
growing demand...

K.R.அதியமான் said...

And i am not advocating a gold standard for rupee. it is not practical. but the Fiscal Rsponsiblity Act is a must and all
state govts should follow it.
Our TN govt is squandering (borrowed) money on false polulist
freebies. We may be bankrupt soon
like Maharastra. See the condition of its EB..

and gross fiscal deficts should be
reduced drastically by pruning fat
and defence expenditures. or our
future is being morataged more recklessly...

Pls see :
http://fecolumnists.expressindia.com/full_column.php?content_id=159207

மா சிவகுமார் said...

விளக்கமான பின்னூட்டங்களுக்கு நன்றி அதியமான்.

Free to Choose கல்லூரியில் படிக்கும் போது அமெரிக்கன் நூலகத்தில் படித்திருக்கிறேன். கீய்ன்சின் கோட்பாடு, பிரீட்மேன் கோட்பாடு இரண்டுக்கும் நடுவில்தான் நடைமுறை உண்மை இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

கீய்ன்சின் தத்துவங்களைக் கடைப்பிடிக்காத சந்தைப் பொருளாதார நாடுகள் இல்லை என்று சொல்லலாம். அதன் அளவு வேண்டுமானால் மாறுபடலாம். அதனால் விளைவது நன்மையா, தீமையா என்பதிலும் நாம் வேறுபடுகிறோம் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

Jay said...

//'நீண்ட காலத்தில் நாம் எல்லோரும் இறந்து விடுவது மட்டும்தான் நிச்சயம்'//


"கீய்ன்ஸ் இறந்துவிட்டார், நாம் நீண்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" - முர்ரேய் ராத்போர்ட்.

Keynes is dead and we're living in the long-run - Murray Rothbard

உண்மைத்தமிழன் said...

மா.சி. ஸார்.. ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன என்ற பலரும் அறிந்த வார்த்தையை தலைப்பாக வைத்துக் கொண்டு இப்படி macro econimics பத்தி கிளாஸ் எடுத்தீங்கன்னா எப்படி?

நீங்க ரெண்டு பேரும் பேசுறதை பார்த்தா, இது என்னமோ உங்க ரெண்டு பேருக்குமுள்ள அடிதடி மேட்டர் மாதிரி போகுது..

//அரசு இலவச தொலைக் காட்சி பெட்டி வழங்கும் திட்டத்தினால் எனக்கு என்ன குறைவு, என்ன நன்மை?

கணினித் துறையில் பட்டம் பெற்றால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்?

இந்தியாவின் நூறு கோடி மக்கள் அமெரிக்காவின் முப்பது கோடி மக்களை விட ஏன் வறியவர்களாக இருக்கிறார்கள்?

உலக மயமாக்கல் ஏன் வயிற்றில் புளியைக் கரைக்கிறது?//

மொதல்ல இதுக்கெல்லாம் தனித்தனியா மேட்டர் போடுங்க ஸார்.. அப்புறம் பாருங்க..

உண்மைத்தமிழனுக்கு பதில் சொல்லியே நீங்க ஓஞ்சு போகணும்..?)))))))

மா சிவகுமார் said...

JAY,

//Keynes is dead and we're living in the long-run - Murray Rothbard//

குறும்பு உங்களுக்கு :-)

உண்மைத் தமிழன்,

இந்த மானிடரிஸ்டு எனப்படும் நாணயவாதிகளுக்கும் கீய்னீசியன் எனப்படும் அரசு திட்ட வாதிகளுக்கும் நடக்கும் குடுமிப் பிடிச் சண்டைகள் அரசியல் பொருளாதார வட்டங்களில் மிகப் பிரபலம். நாங்கள் எங்களுக்குப் புரிந்த அளவில் சண்டை போட்டுக் கொள்கிறோம் :-)

//மொதல்ல இதுக்கெல்லாம் தனித்தனியா மேட்டர் போடுங்க ஸார்.. அப்புறம் பாருங்க..//

போடலையா என்ன இன்னும்! கூடிய விரைவில் போட முயற்சிக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

K.R.அதியமான் said...

Man will do the rational thing after trying all other option..
so goes an adage. Suits the Keynesianians well.

Germany suffered terribly after the
two wars and experienced hyper inlflation. They learnt a bitter lesson and are very prudent in managing their currency till date.
And hyper-inlfation destroyed the
savings of the nation and enabled
Hitler to capture power with popular support, as he promised to end the misery. Inflation is dangerous for democracy and had been proved again and again.

If money supply exceeds the output ratio, inflation results proportionately. this is the basic
concept of moneterisits. ample proof in many works. Rupee has depriciated by over 1500 % since
1947 due to this phenoenon. Supply
constraints and oil crisis provided
temporary spikes in price levels.
but the main culprit is over supply
of money...

Rothbard in his monumental work "
Man, Economy and State has disproved the Keynesian concepts
very well. more on this later.

Jay, pls mail me your id to :
athiy68@yahoo.com
i am based at Perungudi, Chennai.
cell : 98415 98733
would like to meet you very much.

Anbudan
Athiyaman
athiyaman.blogspot.com

மா சிவகுமார் said...

அதியமான்,

மானிடரிஸ்டுகளின் வாதங்களின் தத்துவ ஆதாரங்களை மறுக்கவில்லை.

நீங்கள் ஹிட்லர், ஜெர்மனி என்று நடைமுறை உதாரணங்களைக் காட்டுகிறீர்கள். அதே போல, அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டின் நியூ டீல், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான மார்ஷல் திட்டம் என்று எதிர் முகாமும் வாதாட முடியும்.

பொருளாதார வரலாற்றை அலசும் போது இதனால்தான் இப்படி நடந்தது என்று அறுயிட்டுக் கூற முடியாமல் எண்ணிலடங்கா காரணிகள் ஒன்றோடொன்று உறவாடுவதால், இத்தகைய விவாதங்களில் எதை வேண்டும் என்றாலும் நிரூபித்துக் கொள்ளலாம் அல்லவா!

அன்புடன்,

மா சிவகுமார்

K.R.அதியமான் said...

As former British Prime Minister James Callaghan put it in a courageous talk to a British Labour Party conference in September 1976 : "We used to think that you could just spend your way out of a recession and increase employment by cutting taxes and
boosting government spending. I tell you, in all candour, that that option no longer exists;
and that insofar as it ever did exist, it only worked by injecting bigger doses of inflation into the economy followed by higher levels of unemployment as the next step.
and that is the histroy of the past twenty years."

New Deal and Marshal plan are one time plans under extrodinary situations. But reckless increase of fiat money without any concrete
objective or transparency (as happens here) is neither Keynesian
nor prudent.

and there are no half-ways or half-truths in economics or science.
a girl cannot be "half-pregnent" ;
only yes or no !!

மா சிவகுமார் said...

//and there are no half-ways or half-truths in economics or science.//

பொருளாதாரவியல் இயற்கை அறிவியல் இல்லையே! அதில் நடப்பதை அவதானித்து விதிகள் வகுப்பது நடக்கக் கூடிய ஒன்றா.

உலகில் கறுப்பு வெள்ளைகளை விட பல விதமான சாம்பல் நிறங்கள்தான் தெரிகின்றன எனக்கு :-)

அன்புடன்,

மா சிவகுமார்

Jay said...

JAY,

//Keynes is dead and we're living in the long-run - Murray Rothbard//

குறும்பு உங்களுக்கு :-)

சிவகுமார் ஐய்யா,
நான் சீரியஸாகதான் அந்த பின்னுட்டம் இட்டேன். மேலும்,் நான் ஒரு மானிடரிஸ்டு கிடையாது.

K.R.அதியமான் said...

Dear Shiva,

Happy to see this debate online.
These JNU professors (C.P.C and Jaythi Ghosh)
are not professional economists like Dr.Manomohan
Singh or others in fin.minstry. they are arm chair
leftisits who live in the ivory tower of govt
academics and subsidised by tax payers money.

CPC and their ilk lament about the continued
neo-liberalism policies by UPA govt which is the
same since 1991 by all govts. and fortunately
no one listens to them. You have seen the quoted
speech of UK PM to his party in 1976. basic truth
and he is no fool to say all this. and our JNU
fellows lack the intellectual honesty to accept
cold facts and about the real effects of
liberalisation since 1991. before that we had
a Hindu rate of growth of some 3 % and massive taxes
and license raj in the name of planning.

I will give you the books of Nani Palkiwallah
(We, the nation ; We the people). He was a legend
in his life time and a great visionary. You must
know about the horrible conditions that choked our
economy in the heydays of 'planning' and socialism.
N.P was the chairman of ACC for sometime and he
has described the crazy situtation in the cement
industry then. companies were not allowed to expand
due to Monopoly act (MRTP) and output was choked and
confiscated by govt ; there was a black market and
official quota for cements. you may have seen in old
movies villains smuggling and hoarding cement, sugar,
cotton yarn, rice, atc. now it looks ridiculous.
only when all were decontrolled the supply was eased
and black market vanished. these JNU economists were
oblivious of all this and were for controls and
planning all the time. and remember the bank trade
unions striking against the introduction of computers,
in the 80s.. all this is socialism and supported by
people like CPC...

Lord Keynes would be appalled and horrified by the
distortion of his ideas. he meant less then 2 %
of gross defict, that too only during optimal
situations when the economy is strong and stable.
Our total deficts of central and state govts are
approx 10 % of GDP. and central govt is pumping into
the system some 90,000 crores of legal tender p.a.
and look at our balance sheet and total debts or
all govts. ideally we should escape from this country,
as one of my economist freind warns me....!!

Pls ponder why real estate prices in Valasaravakkam
has quadripled in four years. (now min a ground will
cost some 30 lacs there) ; it is not the mere question
of demand and supply. rather too much money chasing
too few goods. While sugar prices are stagnant all
other commoditiy prices are rising. How and why ?
We are upper middle class and are capable of
withstanding price rises. but the poor are really hurt
and it is a cruel form of hidden tax on their hard
earned incomes and savings.

Prices double every few years are so while wages do
not keep up. (one reason is population explosion).
this is the main reason why parents sell their
children into child labour, begging, etc. now a days
we find too many child beggers everywhere...

i employ some labourers in our factory and i am
pained to see their plight in spite of annual wage
rises. sometimes i feel guilty (as i was once a
marxist) about expoitation, etc. But the govt rather
than we are responsible for all this. and we create
wealth and emplyment for the nation...

more later.

anbudan
Athiyaman

மா சிவகுமார் said...

Jay,

:-))

அதியமான்,

நம்முடைய அரசுகள் செய்யும் முட்டாள்தனங்கள் எல்லாவற்றையும் அழகாகச் சுட்டிக் காட்டுகிறீர்கள். 1990க்கு முன்பிருப்த உரிமம்/ஒதுக்கீடு ஆட்சி முறை ஒழித்துக் கட்டப்பட வேண்டியது என்பதில் எனக்கும் மறு கருத்தில்லை.

இன்றும் தொழில் நிறுவனங்கள் தன்னிச்சையாக செயல்படுவதில் குறுக்கிடும் அரசு நடவடிக்கைகள் தேவையில்லை என்றே நானும் நம்புகிறேன்.

ஆனால், நாட்டின் அரசுக்கும், அரசியல் தலைமைக்கும் சமூகப் பொறுப்புகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றுவதற்கு பற்றாக்குறை செலவு முறை உதவும் என்றால் அதனால் பெரிய தீங்கு இல்லை என்பது என்னுடைய புரிதல்.

அன்புடன்,

மா சிவகுமார்

K.R.அதியமான் said...

dear athi,
saw both your mails. your friend, i am have not met him so far, says that "if the deficit financing is used to augment the
> productive capacity of
> the economy, then it is beneficial. The productive
> capacity could be through
> human capital or through infrastructure building
> etc."

now, this 'productive capacity by govt' is an impossible dream. govt cannot build anything productive except civil structures like dams, roads, airports, etc. and the govt's way of building these would be about 15-20% costlier than the comparative private sector. (this is valid for all the govts, and all the times! prove me wrong!) govt cannot build and run factories, etc., without corresponding losses.
again, the dangers of overtaxation do not seem to have sunk in. india is overtaxed. do not believe anything about how only so much of gdp is taxed, etc.

and the money so taxed is not spent productively. it is wasted away in "unnatural schemes conceived in an impossible manner".

and again, it is great injustice to call 3% growth rate as "hindu rate of growth". when the hindus ran the economy, it grew at much better rates. the 3% should be rightly called "Socialist Rate of Growth". now the economy is growing at much better rates, have we all ceased to be hindus? no, only we have all ceased to be fools and believers of state capitalism.

the reason for the present "inflation" is elsewhere: the agriculture sector is trying to price its products high, to meet the rising cost of living, that is again due to the better performance of the other two sectors. as i have been saying for sometime now, 21st century will see agriculture ceasing to be an important profession. we are in a transition to the next stage: where secondary goods and services will become "essential" and food will become cheaper.

-gopalan

மா சிவகுமார் said...

Athiyaman,

I am not saying Government should run factories and operate rail services. There are public projects which would not be taken up in unfavourable business conditions by private enterprises.

In such case, it is the duty and right of the government to initiate the projects to get things going.

As the famous saying goes you can pull the strings to control growth by monetary policy but can not push the string to stimulate growth. You do need fiscal action by the government for that.

anbudan,

Ma Sivakumar