Wednesday, January 24, 2007

கூட்டுக் கடமைகள் - economics 39

சரி, ஒரு அரசு என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை அளவிட வேண்டும்

ஒரு சமூகத்துக்குத் தேவையான உணவு, உடை, நகை, கலைப்படைப்புகள் எவ்வளவு உருவாக்க முடிகிறதோ அவ்வளவுக்கு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
  • மொத்த சமூகம் குறிப்பிட்ட ஆண்டில் எவ்வளவு உற்பத்தி செய்தது?
  • நாட்டு மக்கள் எவ்வளவு பயன்படுத்தினார்கள்?
  • உற்பத்தித் திறனுக்கு ஏற்றவாறு உள்ளதா, குறைவாக உள்ளதா?
  • வேலை செய்ய விரும்பும் திறமையுடைய எல்லோருக்கும் வேலை வாய்ப்புகள் உள்ளதா?
  • விலைவாசி நிலையாக உள்ளதா?
இந்த அளவுகளை கண்காணித்து வருவது சமூகத்தின் கடமை. பழைய மன்னராட்சியாகவிருந்தாலும் சரி, இன்றைய குடியரசாக இருந்தாலும் சரி மக்களின் நலவாழ்வைக் கருததில் கொண்டு அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது ஒரு அரசின் கடமையாக இருந்து வருகிறது.

கண்காணித்து அளந்து பார்த்ததில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியிருப்பதாகத் தெரிகிறது? விலைவாசி ஏறிக் கொண்டே போகிறது? அரசு என்ன செய்ய முடியும்?

No comments: