Saturday, July 17, 2010

தமிழில் லினக்சு மற்றும் திறவூற்று தகவல்கள்

சென்னை லினக்சு பயனர் குழு மடற்குழுவிற்கு அனுப்பும் தொழில் நுட்ப தகவல்கள் தொடர்பான மின்னஞ்சல்களை இங்கு இடுகைகளாக தொகுக்க உத்தேசம். இதற்கு பிளாக்கரின் மின்னஞ்சல் மூலம் இடுகை வெளியிடும் வசதியைப் பயன்படுத்த உத்தேசித்துள்ளேன்.

மடற்குழுவிற்கு அனுப்பும் அஞ்சலை BCC முகவரியில் இந்த வலைப்பதிவின் இடுகை வெளியீட்டு குறியீட்டு மின்னஞ்சலை சேர்ப்பதன் மூலம் இதைச் செயல்படுத்தலாம்.

இதுதான் முதல் இடுகை. இந்த வசதியை சோதனை செய்யவும் உதவும்.

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com

Wednesday, July 14, 2010

புதைகுழியில் அமெரிக்கா!

பொன்னியின் செல்வனில் கோடிக்கரையில் புதைகுழியில் விழும் வந்தியத் தேவன் பூங்குழலியாலும், ரவிதாஸன் ராக்கம்மாவாலும் காப்பாற்றப்படுகிறார்கள்.

அமெரிக்கப் பொருளாதாரம் நிதிநிலை புதைகுழுயில் மாட்டிக் கொண்டிருக்கிறது. கை கொடுக்க யார் வருவார்கள்? ஒரு உலக யுத்தம்???