Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Tuesday, March 26, 2019

இந்திய ரூபாய் சர்வதேச நாணயம் ஆக எப்போது மாறும்?

ரு காகிதம் அல்லது உலோகத் துண்டு எப்போது பணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது?
  • கட்டிடத் தொழிலாளி ஒருவர் வார இறுதியில் தனது ஒருவார உழைப்புக்குக் கூலியாக ரூபாய் நோட்டுகளை ஏன் வாங்கிக் கொள்ள சம்மதிக்கிறார்?
  • தனது ஒரு மாத உழைப்புக்கு ஊதியமாக மாத இறுதியில் வங்கிக் கணக்கில் ரூபாய் வரவு வைக்கப்படுவதை ஒரு ஐ.டி ஊழியர் ஏன் ஏற்றுக் கொள்கிறார். 
அவர்கள் தமக்குக் கிடைக்கும் ரூபாயை எப்படி பயன்படுத்துகின்றனர்? அந்தப் பணத்தை பயன்படுத்தி அவர்கள் தமக்குத் தேவையான பொருட்களையும், சேவைகளையும் வாங்க வேண்டும்; சக குடிமக்களும், நிறுவனங்களும் தாம் உற்பத்தி செய்த பொருட்களையும், சேவைகளையும் (கூலியாக/சம்பளமாக ஈட்டிய) ரூபாயை பெற்றுக் கொண்டு விற்பதற்கு  தயாராக இருப்பார்கள் என்ற நம்பிக்கைதான் அவர்களை ரூபாயை பணமாக ஏற்றுக் கொள்ள வைக்கிறது.

இந்த நம்பிக்கை நாடு தழுவிய அளவில் செயல்படுவதற்கு நாட்டு அரசின் அங்கீகாரமும், அரசின் நம்பகத்தன்மையும், வலிமையும் அவசியம். போலி ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படாமல் தடுப்பதற்கான போலீஸ் வலிமை, தேவைக்கு அதிகமாக நோட்டுகளை வெளியிட்டு விடாத பொறுப்பு இவை அரசுக்கு இருக்க வேண்டும்.

அது இல்லாமல் போகும் போது ஜிம்பாப்வேயில் 2000-2009 வரையிலும், சீனாவில் 1940-களிலும், ஜெர்மனியில் 1920களிலும், இப்போது சமீபத்தில் வெனிசுலாவிலும் நிகழ்ந்தது போல நாட்டின் பணம் மதிப்பை இழந்து விடும். இறுதியில் அந்தப் பழைய பணத்தை கைவிட்டு புதிய பணத்தை நாட்டு அரசு வெளியிடுவதாகவோ, அல்லது முற்றிலும் வெளிநாட்டு நாணயம் ஒன்றை பயன்படுத்த ஆரம்பிப்பதாகவோ முடிகிறது.

இந்தப் பின்னணியில் ஒரு நாட்டின் நாணயம் சர்வதேச நாணயமாக எப்படி ஆக முடியும் என்று பார்க்கலாம்.

ஒன்று, அந்தப் பணத்தை வைத்து தம் நாட்டுக்குத் தேவையான பொருட்களையும், சேவைகளையும் பிற நாடுகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் என்று எல்லா நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்வதற்கு நாணயம் வெளியிடும் நாட்டின் பொருளாதார வலிமை அடிப்படையாக இருக்கிறது.

பொருளாதார ரீதியாக உலகம் முழுவதும் காலனிய அதிகாரமாக கால் பதித்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பவுண்ட் ஸ்டெர்லிங் 19/20-ம் நூற்றாண்டுகளிலும், அதே போல உலகின் மீது ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க டாலர் 20/21-ம் நூற்றாண்டிலும் உலகப் பொதுப்பணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

உலகப் பொதுப்பணத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாட்டு அரசுக்கு அதன் மூலம் பல ஆதாயங்கள் கிடைக்கின்றன. ஆனால் அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கான பொறுப்பும் அந்த நாட்டுக்கு இருக்கிறது.
  • போலி டாலர்கள் அச்சிடப்படாமல் தடுக்க வேண்டும்.
  • வங்கித் துறையை நம்பகமானதாக கட்டிக் காக்க வேண்டும்.
  • டாலரின் முதன்மை இடத்தைத் தக்க வைப்பதற்கு ஏற்ற பொருளாதார நடவடிக்கைகளை உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் எடுக்க வேண்டும்.
  • அது மட்டும் போதாது, சர்வதேச நாணயமாக தக்க வைத்துக் கொள்வதற்கான சர்வதேச அரசியல் ராணுவ நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதற்கேற்ற அரசியல், ராணுவ வலிமை இருக்க வேண்டும்.
ஆனால், இறுதிக் கணக்கில் தீர்மானகரமானதாக அமைவது அந்த நாட்டுக்குள் நடக்கும் பொருளாதார உற்பத்தி, மதிப்பு சேர்க்கும் நடவடிக்கைதான்.

அதனால்தான் சுமார் 40 ஆண்டுகள் உலகின் உற்பத்திக் களமாக செயல்பட்ட சீனாவின் யுவான் இப்போது பல நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படும் சர்வதேச நாணயமாக உருவெடுத்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு சவால் விட முயற்சிக்கிறது.

இது போல இந்திய ரூபாய் சர்வதேச அரங்கில் ஏற்றுக் கொள்ளப்படுவதாக மாற வேண்டுமானால், இந்தியாவின் பொருளாதாரம் மனித சக்தி ரீதியாகவும் சரி, தொழில்நுட்ப ரீதியாகவும் சரி, இயற்கை வளங்களை பயன்படுத்துவதிலும் சரி சுயேச்சையாக செயல்பட வேண்டும். நமது பொருளாதார செயல்பாடு நம் உள்நாட்டு பொருளாதாரத்தை வளப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.

மாறாக, வெளிநாட்டு முதலீடு, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி என்ற சார்பு நிலை முதன்மையாக இருந்தால் இந்திய நாணயம் பிற நாட்டு நாணயங்களுக்குக் கீழ்ப்பட்ட இரண்டாம் நிலையிலேயே இருந்து வரும்.

ஆங்கிலத்தில் இந்தக் கேள்விக்கு விடை

Wednesday, February 27, 2019

இன்றைய பிரச்சனைகளை புரிந்து கொள்ள உலகம் ஏன் மார்க்சியத்தை நாடுகிறது?

ஒரு கோட்பாடு மூலதனம் நூலில் முன் வைக்கப்படும் மார்க்சின் மதிப்பு பற்றிய கோட்பாட்டுக்கும் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய கோட்பாட்டுக்கும் இடையே உள்ள வரலாற்று ரீதியில் தவிர்க்க இயலாத இடைவெளியை நிரப்ப வேண்டும்.
ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்
 
- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010
 

7

ந்த ஆய்வறிக்கை மூன்றாம் உலக தொழிலாளர்கள் மீது தனது கவனத்தை செலுத்துகிறது. ‘உலகளாவிய உழைப்பு ஆதாயம்' ஏகாதிபத்திய நாட்டு தொழிலாளர்கள் மீது செலுத்தும் சிக்கலான, ஒன்றுக்கொன்று முரணான தாக்கங்கள் இந்த ஆய்வறிக்கையில் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. மாறாக, ஏகாதிபத்திய நாட்டு பொருளாதாரங்களில் ஏற்படும் சிக்கலான தாக்கங்களை துலக்கமாக வெளிப்படுத்தும் இரண்டு முக்கியமான பரிமாணங்கள் அடுத்த அத்தியாயத்தில் சுருக்கமாக மட்டும் பரிசீலிக்கப்படுகின்றன.

  • முதலாவதாக, பெருவீத அயலக பணி முறை ஏகாதிபத்திய நாட்டு முதலாளிகள் லாபத்தை அதிகரிப்பதற்கு உள்நாட்டு தொழிலாளர்களின் நிஜக் கூலியை நேரடியாக குறைப்பதற்கு மாற்றாக உள்ளதால், ஏகாதிபத்திய நாடுகளில் வர்க்கப் போராட்டத்தின் தீவிரத்தை அது மட்டுப்படுத்துகிறது. நுகர்வு பொருட்களின் விலை மலிவாக்கப்பட்டு வாங்கும் திறன் அதிகமாவதன் மூலமாகவும் முதலாளிகளின் லாபத்தின் மீது அயலகப் பணி செலுத்தும் நேர்மறை தாக்கத்தினாலும் இது நிகழ்கிறது. முதலாளிகள் ஈட்டும் கூடுதல் லாபம் 'சமூக ஒப்பந்தத்துக்கு' அடிப்படையாக விளங்கும் அதிக செலவு பிடிக்கும் சலுகைகளுக்கு நிதி ஒதுக்குவதை சாத்தியமாக்குகிறது. இவற்றில் அடிப்படை மருத்துவம், கல்வி ஆகியவற்றை பெறுவதற்கான உரிமை, அடிப்படை சமூக பாதுகாப்பு (வேலையின்மை உதவித் தொகை முதலியன) ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்குவதும் அடங்கும்.
  • இரண்டாவதாக, அயலக பணி முறை ஏகாதிபத்திய நாட்டு தொழிலாளர்களுக்கும், மூன்றாம் உலகத் தொழிலாளர்களுக்கும் இடையே மேலும் மேலும் அதிகரித்த அளவில் நேரடி போட்டியை உருவாக்குகிறது. அதே நேரம் உலகளாவிய உற்பத்தி நிகழ்முறைகளுக்குள் அவர்களுக்கிடையேயான பரஸ்பர சார்பு நிலையை அதிகரிக்கிறது. 
உலக அளவில் தொழிலாளர்களுக்கிடையேயான பரஸ்பர சார்புநிலை அதிகரித்து வருவது, தொழிலாளர்களின் கல்வி அறிவும் கலாச்சார வாய்ப்புகளும் அதிகரிப்பது, பெண்கள் பெருமளவில் கூலி உழைப்புக்குள் சேர்க்கப்படுவது, ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மேலும் அதிக அளவில் ஏகாதிபத்திய நாடுகளின் உள்நாட்டு தொழிலாளர் படையில் இணைவது ஆகியவை தொழிலாளி ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான புறநிலை மாற்றங்கள். அவை உலக வங்கித் துறை நெருக்கடியைத் தொடர்ந்து வரவிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்களில் தொழிலாளி வர்க்கம் வெற்றியடைவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கின்றன.

ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளி வர்க்கம் சர்வதேச தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது என்ற வகையில் அது புரட்சிகர சக்தியாக உள்ளது. சமூக ஜனநாயக தலைவர்கள் முன் வைக்கும் ‘பிரிட்டிஷ் வேலை வாய்ப்புகள் பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கே' என்பன போன்ற தேசியவாத தீர்வுகளும், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளின் தொழிலாளர் தலைவர்கள் முன் வைக்கும் தேசியவாத, காப்புவாத கருத்துக்களும் மேலும் மேலும் நம்பகத்தன்மை இழந்து வருகின்றன. தொழிலாளி வர்க்க இயக்கத்தை முடக்கி விடவும், இனவெறியை நியாயப்படுத்தவும், பாசிசத்தின் வளர்ச்சியை தூண்டி விடவும் மட்டும்தான் அவை பயன்படுகின்றன. அமெரிக்க அல்லது பிரிட்டிஷ் தொழிலாளர்கள் அவர்களது சக மெக்சிகன் அல்லது சீன தொழிலாளர்களுடன் போட்டி போட விரும்பா விட்டால் அவர்களுடன் ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் இணைந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆய்வறிக்கையின் நோக்கமும் ஆய்வு திட்டமும்

“மார்க்சின் படைப்புகளின் சிறப்புத் தன்மையும், சிரமும் இரண்டுமே என்னவென்றால், ஒவ்வொன்றும் மற்ற எல்லாவற்றோடும் இணைந்துள்ளது என்பதுதான். கோட்பாட்டின் அனைத்து பிற அம்சங்களையும் ஒரே நேரத்தில் ஆய்வு செய்யாமல் ஒரு 'வெற்றிடத்தில்' மட்டும் ஆய்வு செய்வது சாத்தியமற்றதாக உள்ளது”32 என்கிறார் டேவிட் ஹார்வி. இந்தக் கருத்தில் பெருமளவு உண்மை இருக்கிறது. ஆனால், இந்தக் கருத்து சொல்லப்பட்டிருக்கும் விதம் சமூக யதார்த்தத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்ட ஆய்வுக்கான முறையியலை வரையறுத்துக் கொள்வதற்கு உதவியாக இல்லை . முழுமையான கட்டமைவு பற்றிய ஒரு கோட்பாட்டு கருதுகோளின் அடிப்படையில் அதன் குறிப்பிட்ட பரிமாணங்கள் அல்லது வெளிப்பாடுகளில் ஏதாவது ஒன்றை ஆய்வு செய்ய முடியும் என்று அவரது கருத்தை புரிந்து கொள்ளலாம். மேலும், அத்தகைய ஒரு ஆய்வின் முடிவுகள் முழுமையான கட்டமைவு பற்றிய கோட்பாட்டில் இணைக்கப்பட்டு அதை மேலும் செழுமைப்படுத்தும் என்பதையும் சொல்ல வேண்டும். இது மார்க்சிய இயக்கவியலை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளுக்கு மட்டுமின்றி அனைத்து ஆய்வுகளுக்கும் பொருந்துகிறது.

தான் முன் முடிவுகள் இல்லாமல் திறந்த மனதுடன் தொடங்குவதாக நேர்மறைவாத சமூக அறிவியலாளர் எவ்வளவுதான் நம்பிக் கொண்டிருந்தாலும், ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் நிகழ்வு பற்றிய ஆரம்ப புரிதல்கள், ஆய்வு செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட முறையியல் அணுகுமுறை, ஏன் மற்ற பிரச்சனைகளிலிருந்து இந்த பிரச்சனையை ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தோம் என்பது அனைத்தும் ஆய்வாளரின் மனதில் உணர்வுரீதியாகவோ உள்உணர்வு ரீதியாகவோ ஏற்கனவே உருவாகியிருக்கும் கோட்பாட்டு கருத்துக்களால் தீர்மானிக்கப்படுகின்றன.33 மார்க்சிய அணுகுமுறை பிற அணுகுமுறைகளிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்றால, பகுதிக்கும் முழுமைக்கும் இடையேயான இந்த தவிர்க்க இயலாத இணைப்பை மார்க்சியம் உணர்வு ரீதியாகவும் வெளிப்படையாகவும் அங்கீகரிக்கிறது.

இந்த வகையில் டேவிட் ஹார்வியின் கருத்தை விட இவால்ட் இல்யன்கோவின் அறிவுரை உதவியாக உள்ளது. “எடுத்துக் கொண்ட பருண்மையான விஷயம் [இங்கு, புதிய தாராளவாத உலகமயமாக்கல்][...] மிகவும் சிக்கலான, உள் இணைப்புகள் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான வளர்ச்சி நிகழ்முறைகளை கொண்டுள்ளது. அவை பரஸ்பரம் உறவாடி, தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் வடிவங்களை மாற்றிக் கொண்டே இருக்கின்றன.. நடைமுறையில் நம் முன் இருக்கும் ஒட்டு மொத்த வரலாற்று நிகழ்முறையில் இந்தக் […] குறிப்பிட்ட பருண்மையான உறவாடல் கட்டமைவு வளர்ந்து செல்வதில் அடங்கியிருக்கும்  மிக முக்கியமான அம்சங்களை அடையாளம் காண்பதில்தான் ஒட்டு மொத்த சிக்கலும் அடங்கியுள்ளது.” என்று அவர் கூறுகிறார். ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள பிரச்சனையுடன் தற்செயலான உறவு கொண்டவையாக இல்லாமல் பிரச்சனையின் சாராம்சத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கும் அம்சங்களை அடையாளம் காண வேண்டும்.

இந்த ஆய்வுரை தனது வழிகாட்டியாக எடுத்துக் கொண்டிருக்கும் கோட்பாட்டின்படி புதிய தாராளவாத உலகமயமாக்கல் முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சியின் ஒரு உயர் கட்டமாக உள்ளது. இது தொடர்பான தற்செயல் நிகழ்வுகளையும், இரண்டாம் நிலை அம்சங்களையும் ஒதுக்கி விட்டு எடுத்துக் கொண்ட பிரச்சனைக்கு சாராம்சமானதை தேர்ந்தெடுக்க வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டிய பணி ஆகும். ஏகாதிபத்திய முதலாளிகள் ஒடுக்கப்படும் நாடுகளின் உழைப்பை அதீத சுரண்டலுக்கு உட்படுத்துவதை பெரும் அளவில் அதிகரிப்பதற்கான முயற்சிதான் இந்த சாராம்சமான விஷயம் என்று இந்த ஆய்வறிக்கை முன் வைக்கிறது.

எடுத்துக் கொண்ட பிரச்சனையின் சாராம்சமான விஷயங்களை அடையாளம் கண்டு அவற்றின் மீது கவனத்தை குவிப்பது எந்த ஒரு அறிவியல் ஆய்வுக்கும் இன்றியமையாத ஒன்றாகும். எந்த அம்சத்தை சிறப்பு கவனம் கொடுக்க வேண்டிய ஒன்றாக தேர்ந்தெடுப்பது என்பதற்கு இன்னொரு நிபந்தனையும் உள்ளது. ஏற்கனவே உள்ள கருத்துக்கள் பருண்மையான யதார்த்தத்தை பிரதிபலிக்க தவறும் இடம் எது என்பதை பார்க்க வேண்டும். இன்றைய உலகப் பொருளாதாரம் பற்றிய இப்போதைய கருத்தாக்கங்களில், ஏகாதிபத்தியம் என்பது இருப்பதையும், அதன் முக்கியத்துவத்தையும், குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை சுரண்டுவதையும் மறுக்கப்படுவதாக உள்ளது. இதுதான் அதன் மிகப்பெரிய குறைபாடு. எனவே, ஒரு எளிமையான, இன்னும் வரையறுக்கப்பட்ட ஒரு விஷயத்திலிருந்து தொடங்குவதை விட சிக்கலானதாக இருந்தாலும், இந்த மையப் புள்ளியில் இருந்து தொடங்கி ஆய்வை நடத்துவது என்று முடிவு செய்தேன்.

இல்யன்கோவ் தான் சுட்டிக் காட்டும் “வளர்ச்சிப் போக்கின் மையமான அம்சங்களை கண்டறிவதில்” இருக்கும் சிக்கல்களை கையாள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார். நடைமுறை உண்மைகளையும், நிகழ்முறைகளையும் முந்தைய கோட்பாட்டு அடிப்படையில் ஆய்வு செய்வதன் மூலம் அவற்றை கண்டறியலாம். “கம்யூனிசம் என்பது ஒரு வறட்டு கோட்பாடு இல்லை, அது ஒரு இயக்கம்; அதன் ஆய்வுகள் முன்பே வரையறுக்கப்பட்ட கொள்கை நிலைப்பாடுகளிலிருந்து இல்லாமல் நடைமுறை யதார்த்தங்களில் உண்மைகளிலிருந்து தொடங்க வேண்டும்" என்று மார்க்சியம் பற்றி எங்கெல்ஸ் சொன்னதை இங்கு நினைவு கூரலாம்.35

இந்த நடைமுறை யதார்த்தத்தை பரிசீலித்ததன் விளைவாக, புதிய தாராளவாத உலகமயமாக்கலின் 'வளர்ச்சிப் பாதையின் முக்கியமான புள்ளிகள்' மூன்றாம் உலக நாடுகளின் உழைப்பாளர்களை விரிவாக 'பயன்படுத்துவதற்காக' ஏகாதிபத்திய முதலாளிகளின் அமல்படுத்தி வரும் உற்பத்தி உலமயமாதலும், முன்னணி ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆலை பொருட்களை உற்பத்தி செய்யும் மூன்றாம் உலக தொழில்துறை பாட்டாளிகளின் எண்ணிக்கை பெருமளவு விரிவடைவதும் என்ற முடிவுக்கு வருகிறோம்.36 எனவே, இந்த ஆய்வறிக்கை மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையேயான உறவு உலகமயமாவதன் புதிய கட்டத்தின் மீது தனது கவனத்தை குவிக்கிறது.

இந்த ஆய்வறிக்கையின் நோக்கம், மூலதன உறவுகளின் ஏகாதிபத்திய வடிவம் பற்றிய முழுமையான கோட்பாட்டுக்கு அடித்தளம் இடுவதற்கான ஒரு பகுதியை பங்களிப்பு செய்வதாகும். இதில் சர்வதேச பாட்டாளி வர்க்கத்துக்கிடையே சமத்துவம் இல்லாமல் இருப்பதும், வெவ்வேறு நாடுகளில் சுரண்டல் வீதம் பெருமளவு வேறுபடுவதும் அடங்கும். அத்தகைய ஒரு கோட்பாடு மூலதனம் நூலில் முன் வைக்கப்படும் மார்க்சின் மதிப்பு பற்றிய கோட்பாட்டுக்கும் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய கோட்பாட்டுக்கும் இடையே உள்ள வரலாற்று ரீதியில் தவிர்க்க இயலாத இடைவெளியை நிரப்ப வேண்டும். இந்த இடைவெளி வரலாற்று ரீதியில் ஏன் தவிர்க்க இயலாதது என்றால், மேலே சொன்னது போல உற்பத்தி உலகமயமாதலுக்குப் பிறகுதான் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் ஒடுக்கப்படும் நாடுகளுக்கும் இடையேயான உறவு மதிப்பு உறவின் வரம்புக்குள் உட்பட்டதாக மாறியுள்ளது.

இந்த மிகப்பெரிய கோட்பாட்டு இடைவெளியை முழுமையாக நிரப்புவதற்கு இந்த ஆய்வறிக்கை முயற்சிக்கவில்லை. அந்த பணி பல ஆய்வாளர்களின் கூட்டு முயற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.

(தொடரும்)
  1. நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

  2. ஏகாதிபத்திய உலகமயமாதலில் மூன்றாம் உலக உழைப்பின் பாத்திரம்

  3. பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் - உலகம் எப்படி உள்ளது?

  4. நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு உள்ளதா? அது மட்டும்தான் உள்ளதா?

  5. முதலாளித்துவம் : கொள்ளை, படுகொலை, அடிமைத்தனம் - தொடக்கமும், தொடர்ச்சியும் 

  6. வக்கிரமாக்கப்பட்ட உலகமயமாதல்

  7. சீனா, இந்தியா, வங்கதேச தொழிலாளர்கள் இல்லாமல் உலக முதலாளித்துவம் இல்லை

Sunday, February 24, 2019

சீனா, இந்தியா, வங்கதேச தொழிலாளர்கள் இல்லாமல் உலக முதலாளித்துவம் இல்லை

சர்வதேச ரீதியில் உழைப்பாளர்கள் சுதந்திரமாக இடம் பெயர்ந்து செல்வதை தடுத்து நிறுத்துவது இனவாதம், தேசிய ஒடுக்குமுறை, கலாச்சார ரீதியான இழிவுபடுத்துதல்கள், இராணுவவாதம், அரச வன்முறை இவற்றை உள்ளடங்கிய ஒரு பரந்து விரிந்த கட்டமைவின் முக்கியமான அடிப்படையாக உள்ளது

ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்
 
- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010
 

7

தன் விளைவாக, முதலாளித்துவ வளர்ச்சியின் சமீபத்திய கட்டம் மூன்றாம் உலக நாடுகள் ‘முன்னேறிய’ நாடுகளின் நிலையை எட்டிப் பிடிப்பதாகவும், ஏகாதிபத்தியங்களுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஏற்றத் தாழ்வை குறைப்பதாகவும் இல்லை. மாறாக ஏகாதிபத்திய நிறுவனங்களின் அதீத சுரண்டலுக்கு உள்ளாகும் உழைப்பாளர் சேமப் படைகளாக மூன்றாம் உலக நாடுகள் மாற்றப்பட்டுள்ளன. இதன் விளைவாக நாடுகளுக்கிடையே ஒரு உலகளாவிய பிரிவினை உருவாகியுள்ளது.

சர்வதேச ரீதியில் உழைப்பாளர்கள் சுதந்திரமாக இடம் பெயர்ந்து செல்வதை தடுத்து நிறுத்துவது  இனவாதம், தேசிய ஒடுக்குமுறை, கலாச்சார ரீதியான இழிவுபடுத்துதல்கள், இராணுவவாதம், அரச வன்முறை இவற்றை உள்ளடங்கிய ஒரு பரந்து விரிந்த கட்டமைவின் முக்கியமான அடிப்படையாக உள்ளது. ஏகாதிபத்தியம் இந்த ஒடுக்குமுறை கட்டமைவை பாட்டாளி மயமாக்கப்பட்ட உலக மக்கள் மீது சுமத்துகிறது. இது வர்க்கப் போர் தொடுப்பதற்கான ஒரு ஆயுதம். இதை பயன்படுத்தி ஆக சாத்தியமான உயர் வீத சுரண்டலை உறுதி செய்வதோடு மட்டுமின்றி அரசியல் ரீதியான எதிர்ப்புரட்சிகளையும், பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் கட்டவிழ்த்து விட்டு சர்வதேச தொழிலாளர் வர்க்கம் ஒரு சுயேச்சையான அரசியல் சக்தியாக மாறி தனது சொந்த மேலாதிக்கத்தை நிறுவுவதை ஏகாதிபத்திய நிறுவனங்கள் தடுத்து நிறுத்துகின்றன

இது முற்றிலும் முதலாளித்துவ அடிப்படையிலான ஏகாதிபத்தியம். ஏகாதிபத்தியத்தின் மிக முன்னேறிய வளர்ச்சி கட்டத்தில், ஒட்டு மொத்த உலகமும் காலனிய அடிப்படையில் பிரிக்கப்பட்டிருப்பதை முதலாளித்துவமும் மதிப்பு விதியும் தமக்குள் முழுமையாக உள்வாங்கிக் கொண்டுள்ளன. முதலாளித்துவம் அதன் நோக்கத்துக்கு விரோதமான அனைத்தையும் உதளி விட்டு, தனது ஆதிக்கத்தை தொடருவதற்கு பலனளிப்பதாக இருப்பவை அனைத்தையும் பாதுகாத்து தன்னுடையதாக மாற்றிக் கொண்டுள்ளது. எனவே, இந்த மாற்றங்களோடு தொடர்புடையதாக கிடைக்கும் நடைமுறை தரவுகளின் பெரும் தொகுப்பை நாம் பகுத்தாய வேண்டியுள்ளது. உண்மைகளை கோட்பாட்டு ரீதியாக விமர்சித்தும், கோட்பாடுகளை உண்மைகளின் ஒளியில் விமர்சித்தும் முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சி கட்டத்தின் சாராம்சம் பண்புரீதியான பரிணாம மாற்றத்தை அடைந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மதிப்பு உறவின் ஏகாதிபத்திய வடிவம் பற்றிய ஒரு கோட்பாட்டை உருவாக்குவது இன்றைய அவசிய தேவையாக உள்ளது.

இன்றைய புதிய தாராளவாத உலகமயமாக்கலில் ஏகாதிபத்திய நாட்டு அரசுகளின் பொதுநலன் அடங்கியுள்ளது. மூன்றாம் உலக நாடுகளை புதிய தாராளவாத உலகமயமாக்கல் பாதையில் செலுத்துவதற்கு ஏகாதிபத்திய நாடுகள் கூட்டாக செயல்பட்டன. கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வரும் ‘ஏற்றுமதி சார் தொழில் மயமாக்க' வளர்ச்சி பாணியின் முறையின் விளைவாக மூன்றாம் உலக தொழிலாளர்களின் எண்ணிக்கையும் சிறு உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்துள்ளன. அது மட்டுமில்லை, இந்த வளர்ச்சி பாணி ஏகாதிபத்திய நாடுகளில் கார்ப்பரேட் லாபத்தையும், தொழில் வளத்தையும், சமூக அமைதியையும் பாதுகாப்பதற்கு மேலும் மேலும் முக்கியமான ஆதாரமாக மாறியுள்ளது. எனவே, இன்றைய முதலாளித்துவ உலகமயமாதலைப் பற்றி விளக்குவதற்கு பரவலாக பயன்படுத்தப்படும் 'மைய நாடுகள்', ‘விளிம்பு நாடுகள்' என்ற கருத்தாக்கம் தவறான பொருள் தருபவதாக உள்ளது. ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகளுக்கு 'மைய' முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது மூன்றாம் உலக குறை-கூலி தொழிலாளர்கள் மீதான அதீத சுரண்டல்.

எனவே, 'அதீத சுரண்டல்’ பற்றிய பருண்மையான ஒரு கோட்பாட்டை வளர்த்தெடுப்பது இந்த ஆய்வறிக்கை முழுவதும் ஊடாடி நிற்கும் ஒரு மையமான பணியாகும். இது பற்றிய ஒரு பொதுவான வரையறை இந்த அத்தியாயத்தின் அடுத்த பிரிவில் தரப்படுகிறது. இப்போதைக்கு சுரண்டல் என்பதை எளிமையாக வரையறுக்கலாம். ஒரு வேலை நாளில் தொழிலாளி தான் உயிர் வாழ்வதற்கு தேவையானபொருட்களின் மதிப்புக்கு சமமான மதிப்பை படைக்கும் அவசிய உழைப்பு நேரம், முதலாளிக்கு உபரி மதிப்பை உற்பத்தி செய்வதற்காக உழைக்கும் உபரி உழைப்பு நேரம் என இரண்டு பகுதிகள் உள்ளன. இவற்றுக்கிடையேயான விகிதம் சுரண்டல் வீதமாகும்.

அதீத சுரண்டல் என்பது ஏகாதிபத்திய நாடுகளில் நிலவும் சராசரி சுரண்டல் வீதத்தை விட அதிக சுரண்டல் வீதத்தை குறிக்கிறது. நாடுகளுக்கிடையேயான கூலி ஏற்றத் தாழ்வுகள், சர்வதேச ரீதியில் சுரண்டல் வீதத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள் பற்றிய ஒரு உருத்திரிந்த சித்திரத்தை தருகின்றன என்று இந்த ஆய்வறிக்கையில் பேசப்படுகிறது. இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படாத முறைகளை பயன்படுத்தி சராசரியை விட அதிக சுரண்டல் வீதத்தை கொண்ட, அதாவது உயிருள்ள உழைப்பை அதீத சுரண்டலுக்கு உட்படுத்தக் கூடிய நாடுகளுக்கு உற்பத்தியை மாற்றுவதன் மூலம் ஏகாதிபத்திய நிறுவனங்கள் தமது லாபத்தை அதிகரிக்க முடிவது பற்றி இந்த ஆய்வறிக்கை பரிசீலிக்கிறது.

எனவே, இந்த ஒட்டு மொத்த ஆய்வறிக்கையும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு கேள்விகளுக்கு விடை காண முயற்சிக்கிறது : அதீத சுரண்டல் என்பதை பருண்மையாக எப்படி பொருள் கொள்கிறோம்? ஏகாதிபத்தியம் என்பதை பருண்மையாக எப்படி பொருள் கொள்கிறோம்? நடைமுறையில் நிலவும் சமூக உறவுகள் பற்றிய பருண்மையான கருதுகோள்களை கோட்பாடுகளிலிருந்து மட்டுமோ, தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் மட்டுமோ உருவாக்க முடியாது. இரண்டையும் சேர்த்து செய்ய வேண்டும்.27

ஏகாதிபத்திய நிறுவனங்கள் மூன்றாம் உலக குறைகூலி தொழிலாளர்களை அதீத சுரண்டலுக்கு உட்படுத்துவதன் மூலம் கிடைக்கும் வருவாயை சார்ந்திருப்பது மேலும் மேலும் அதிகரித்து வருவதை இந்த ஆய்வறிக்கையின் மையமான வாதம் சுட்டிக் காட்டுகிறது. இதை 'உலக உழைப்பு ஆதாயம்' என்று குறிப்பிடலாம். இதன்படி, தம் நாட்டில் ஒப்பீட்டளவில் அதிக கூலி பெறும் தொழிலாளர்களுக்கு பதிலாக மூன்றாம் உலக குறை கூலி தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றன.28 இது உற்பத்தியையே குறைகூலி நாடுகளுக்கு மாற்றுவதன் மூலமோ, குறை கூலி நாடுகளிலிருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்து அவர்களை தம்நாட்டில் தீவிரமான சுரண்டலுக்கு உட்படுத்துவதன் மூலமோ நிறைவேற்றப்படுகிறது.29 உற்பத்தியையே மூன்றாம் உலக நாடுகளுக்கு இடம் மாற்றம் செய்வது மேலும் மேலும் "அதிக முக்கியத்துவம் வாய்ந்ததும் வேகமாக விரிடைவதுமான வழிமுறையாக உள்ளது என்கிறது ஐ.எம்.எஃப். அதீத சுரண்டலுக்கான இன்னொரு வழிமுறையான மூன்றாம் உலக நாட்டு தொழிலாளர்களை இறக்குமதி செய்வதற்கு தொழிலாளர்கள் குடியேறுவதற்கு பல நாடுகளில் உள்ள கட்டுப்பாடுகள் தடையாக உள்ளன".30

வெளிநாட்டில் அயலக பணி முறையில் உற்பத்தி செய்வதற்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை உள்நாட்டில் பயன்படுத்தி உற்பத்தி செய்வதற்கும் இடையேயான உறவை காரல் மார்க்ஸ் 1867-லேயே குறிப்பிட்டிருக்கிறார்.  சர்வதேச தொழிலாளர் கழகத்தின் பொதுக்குழுவின் சார்பாக லசான்யே காங்கிரசுக்கு அவர் எழுதிய ஒரு உரையில் அதற்கு முக்கிய இடம் வழங்கப்பட்டிருக்கிறது: “இங்கிலாந்து தொழிலாளி வர்க்கம் நடத்திய போராட்டங்களை ஆய்வு செய்யும் போது, தொழிலாளர்களை முறியடிப்பதற்காக முதலாளிகள் வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை கொண்டு வருகிறார்கள் அல்லது உற்பத்தியை மலிவான தொழிலாளர் உள்ள நாடுகளுக்கு மாற்றி விடுகிறார்கள் என்பது தெரிய வருகிறது. நிலைமை இவ்வாறு இருக்கும் போது வெற்றிக்கு சிறிதளவாவது வாய்ப்பு இருக்கும் வகையில் தனது போராட்டத்தை தொழிலாளி வர்க்கம் தொடர வேண்டுமானால், தேசிய சங்கங்கள் சர்வதேச சங்கமாக மாற வேண்டும்."31

நமது சம காலத்தில்தான் ஆதிக்கம் செலுத்துவதாகவும் உலகை மாற்றியமைப்பதாகவும் உருவெடுத்திருக்கும் ஒரு போக்கின் ஆரம்ப வடிவம் பற்றிய சித்திரத்தை மார்க்ஸ் இங்கு தருகிறார். இந்த மேற்கோளில் இருந்து முதலாளித்துவம் குறை கூலி தொழிலாளர்களை அதீத சுரண்டலுக்கு உட்படுத்துவதும் அது பாட்டாளி வர்க்க இயக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் மார்க்ஸ் தெளிவாக உணர்ந்திருந்தார் என்பது தெரிகிறது. ஆனால், பருண்மையான யதார்த்தத்தின் இந்த அம்சத்தை மார்க்ஸ் மூலதனம் நூலின் 3 பாகங்களில் 'பொதுவான மூலதனம்' பற்றிய பகுப்பாய்வில் சேர்த்துக் கொள்ளவில்லை. இது பற்றி இந்த அத்தியாயத்தின் பிற் பகுதியில் இதே விஷயங்களை நாம் மறுபடியும் பரிசீலிக்கும் போது நாம் பார்க்கப் போகிறோம்.

மார்க்சுக்குப் பிறகு இந்த பொருளாதாரவியல் ஆய்வாளர்களால் இந்த அம்சம் பெருமளவு புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது. எனவே, இந்த ஆய்வறிக்கை அயலகப் பணி அல்லது "உற்பத்தியை மலிவான உழைப்பு சக்தி உடைய நாடுகளுக்கு இடம் மாற்றுவது" என்று மார்க்ஸ் குறிப்பிடுவதன் மீது கவனம் செலுத்துகிறது. ‘உலக கூலி ஆதாயத்தின்' இன்னொரு வடிவமான குறை கூலி உழைப்பாளர்களை இறக்குமதி செய்வது தேவைப்படும் இடத்தில், தேவைப்படும் அளவில் மட்டுமே (அத்தியாயங்கள் 2&3) கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மார்க்ஸ் லசான்யே காங்கிரசில் இந்த நடைமுறை பற்றி பேசிய 100 ஆண்டுகளுக்குப் பிறகு, தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், உலகெங்கிலும் சரக்கு போக்குவரத்தின் வேகம் பெருமளவு அதிகரித்திருப்பதும், அயலகப் பணியை அனைத்து வழிகளிலும் பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்கியுள்ளன. இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏகாதிபத்திய முதலாளிகள் குறை கூலி தொழிலாளர்களை பயன்படுத்துவதை அதிகரிப்பதை சாத்தியமாக்கின. ஆனால், ஏகாதிபத்திய நாடுகளில் நிலவிய வர்க்க போராட்டங்கள்தான் இதை செய்தே தீர வேண்டிய அவசியத்தை ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு ஏற்படுத்தின என்பது இறுதி பகுப்பாய்வில் தெரிய வருகிறது. தம் நாடுகளில் லாபவீதம் குறைந்து செல்லும் போக்கை தடுத்து நிறுத்தி லாப வீதத்தை உயர்த்துவதற்கு செய்ய வேண்டியிருந்த காட்டுமிராண்டித்தனமான செலவு குறைப்பு நடவடிக்கைகள் அந்த நாடுகளின் 'சொந்த' தொழிலாளர்கள் மீதே சுமத்தப்பட்டிருந்தால் அது ஏகாதிபத்திய நாடுகளில் மிகப்பெரிய சமூக, அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். உலகின் பிற பகுதி மக்களுக்கு எதிராக ஏகாதிபத்திய நாட்டு தொழிலாளர்களையும் அவர்களது ஆட்சியாளர்களையும் பிணைக்கும் 'சமூக ஒப்பந்தம்' உடைக்கப்பட்டிருக்கும்.
  1. நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

  2. ஏகாதிபத்திய உலகமயமாதலில் மூன்றாம் உலக உழைப்பின் பாத்திரம்

  3. பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் - உலகம் எப்படி உள்ளது?

  4. நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு உள்ளதா? அது மட்டும்தான் உள்ளதா?

  5. முதலாளித்துவம் : கொள்ளை, படுகொலை, அடிமைத்தனம் - தொடக்கமும், தொடர்ச்சியும் 

  6. வக்கிரமாக்கப்பட்ட உலகமயமாதல்

Friday, February 15, 2019

முதலாளித்துவம் : கொள்ளை, படுகொலை, அடிமைத்தனம் - தொடக்கமும், தொடர்ச்சியும்

“அநியாயம் எங்கிருந்து தோன்றுகிறது? ஏற்றத் தாழ்வு எங்கிருந்து பிறக்கிறது? வறுமை எங்கிருந்து தோன்றுகிறது? குறை வளர்ச்சி எங்கிருந்து உருவாகிறது? நவ காலனியமும் ஏகாதிபத்தியமும் எங்கிருந்து வருகின்றன? முதலாளித்துவத்திலிருந்து இல்லாமல் வேறு எங்கிருந்து இவை அனைத்தும் தோன்றுகின்றன?

'வானத்தையும் பூமியையும் படைத்தவர்கள்தான் ஏழ்மைக்கு பொறுப்பு, இந்த சமூகக் கட்டமைவு அதற்கு எந்த விதத்திலும் காரணம் இல்லை, முதலாளித்துவம் அதற்கு எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை' என்று கூட பேச முடியும் என்பதை நம்ப முடியவில்லை!” - பிடல் காஸ்ட்ரோ

ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010 5

ஐக்கிய நாடுகள் பல்கலைக் கழகம் நடத்திய குடும்பங்களின் சொத்துக் கணக்கெடுப்பு ஒன்றில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி, “ஒருவரிடம் $2161 [இன்றைய மதிப்பில் ரூ 1.5 லட்சம்] மதிப்பிலான சொத்து இருந்தாலே அவர் உலகின்வசதியான 50%- பேரில் சேர்ந்து விடுவார்.” ஆனால், மேல்மட்ட 1% பணக்காரர்கள் பட்டியலில் சேர்வதற்கு உங்களிடம் $5 லட்சம் [இன்றைய மதிப்பில் ரூ 3.5 கோடி]  சொத்து இருக்க வேண்டும். உலக மக்கள் தொகையில் ஏழ்மையான 50% பேரை விட 40 மடங்கு அதிக சொத்து 3.7 கோடி பணக்காரர்களிடம் உள்ளது.11

ஏகாதிபத்திய நாடுகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்குமிடையே சொத்து வினியோக ஏற்றத் தாழ்வு இன்னும் மோசமாக ஆவதற்கு காரணம் மூன்றாம் உலக நாடுகளிலேயே உள்ளது. மூன்றாம் உலக நாடுகளின் முதலாளிகள் தமது சொத்துக்களில் பெரும்பகுதியை டாலராக மாற்றி அவற்றை தமது நாட்டுக்கு வெளியே ஏகாதிபத்திய மையங்களுக்கு (அல்லது ஏகாதிபத்தியங்களால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு மையங்களுக்கு) கடத்தி பதுக்குகின்றனர். இந்த மையங்கள் இந்த மூன்றாம் உலக நாட்டு அரசுகளின் வரி விதிப்புக்கு அப்பால் இருப்பதோடு ஜி-7 நாடுகளாலும், அவர்களால் கட்டுப்படுத்தப்படும் சர்வதேச நிதி நிறுவனங்களாலும் (எனவே, இறுதிக் கணக்கில் அவர்களது இராணுவ பலத்தாலும் ) பாதுகாக்கப்படுகின்றன. இதை கேப்ஜெமினி, “2003-ம் ஆண்டு ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் உள்ள அதி உயர் மதிப்பு கொண்ட தனிநபர்கள் [$10 லட்சம் - ரூ 7.5 கோடி அல்லது அதற்கு மேல் முதலீடு செய்வதற்கான சொத்து இருப்பவர்கள்] தமது சொத்துக்களில் பாதியை வெளிநாடுகளுக்கு அனுப்பினார்கள். தென் அமெரிக்காவின் அதி உயர் மதிப்பு கொண்ட தனிநபர்களில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் தமது நிதித்துறை சொத்துக்களை வெளிநாட்டு வரியில்லா சொர்க்கங்களில் வைத்திருக்கின்றனர். அவற்றிலிருந்து வட அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய சந்தைகளில் முதலீடு செய்கின்றனர்."12 என்றது

காலனிய ஆட்சி முடிவுக்கு வந்து, இறையாண்மையை பெற்றது மூன்றாம் உலக நாட்டு தேசிய முதலாளிகளுக்கு அதிகாரபூர்வமாக சுதந்திரம் வழங்கினாலும், அந்த நாடுகளின் ஆகப் பெரும்பான்மையினர் தமது உழைப்பு சக்தியை தவிர விற்பதற்கு ஏதும் இல்லாதவர்களாக முதலாளித்துவத்தால் மாற்றப்பட்டுள்ளனர். சுருக்கமாக சொல்லப் போனால், இந்த நாடுகளின் மக்கள் இன்னும் தமது விடுதலைக்காக காத்திருக்கின்றனர். இதை இந்த ஆய்வறிக்கையில் பயன்படுத்தப்படும் 'ஒடுக்கப்படும் மற்றும் ஒடுக்கும் நாடுகள்' என்ற பதம் அங்கீகரிக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளுக்கும் - மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான ஏற்றத் தாழ்வு என்ற கருத்துருவில் நாடுகளுக்கு இடையேயும், நாடுகளுக்கு உள்ளேயும் பொருளாதார வளர்ச்சியிலும் சமூக முன்னேற்றத்திலும் காணப்படும் அதி தீவிர ஏற்றத் தாழ்வு அடங்கியுள்ளது. இது இயல்பானதோ, இறைவன் விதித்ததோ இல்லை. இது முதலாளித்துவ வளர்ச்சியின் விளைபொருள். முதலாளித்துவம் வளர வளர ஆழமாகிச் சென்றிருக்கிறது.

இந்த எளிமையான, மறுக்கமுடியாத உண்மை எவ்வளவு தூரம் புறக்கணிக்கப்படுகிறது என்ற பலரது ஆச்சரியத்தை பிடல் கேஸ்ட்ரோ வெளிப்படுத்தினார்.

“அநியாயம் எங்கிருந்து தோன்றுகிறது? ஏற்றத் தாழ்வு எங்கிருந்து பிறக்கிறது? வறுமை எங்கிருந்து தோன்றுகிறது? குறை வளர்ச்சி எங்கிருந்து உருவாகிறது? நவ காலனியமும் ஏகாதிபத்தியமும் எங்கிருந்து வருகின்றன? முதலாளித்துவத்திலிருந்து இல்லாமல் வேறு எங்கிருந்து இவை அனைத்தும் தோன்றுகின்றன? 'வானத்தையும் பூமியையும் படைத்தவர்கள்தான் ஏழ்மைக்கு பொறுப்பு, இந்த சமூகக் கட்டமைவு அதற்கு எந்த விதத்திலும் காரணம் இல்லை, முதலாளித்துவம் அதற்கு எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை' என்று கூட பேச முடியும் என்பதை நம்ப முடியவில்லை!” - .13

கடற்கொள்ளை, சூறையாடல், காலனிய நாடு பிடித்தல் ஆகியவை முதலாளித்துவத்தின் தோற்றத்தில் முக்கியமான பங்களிப்பு செய்தன. முதலாளித்துவம் முதலில் இங்கிலாந்திலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் வேர் பிடித்து வளர்வதற்கு ஐரோப்பாவின் உள்நாட்டு பரிணாம மாற்றங்களுக்கு நிகராக உலகளாவிய வேட்டையாடல்கள் அடிப்படையாக இருந்தன. இது மூலதனம் நூலில் ஒரு புகழ்பெற்ற பத்தியில் கார்ல் மார்க்சால் சுட்டிக் காட்டப்படுகிறது.

“ஐரோப்பாவில் கூலி உழைப்பாளர்களின் திரையிடப்பட்டு மூடப்பட்ட அடிமைத்தனத்துக்கு புதிய உலகத்தில் (அமெரிக்கா) நிலவிய ஒளிவு மறைவில்லாத அடிமைத்தனம் அடித்தளமாக இருந்தது. அமெரிக்காவில் தங்கமும், வெள்ளியும் கண்டுபிடிக்கப்பட்டது, அந்தக் கண்டத்தின் மண்ணின் மைந்தர்களின் அடையாளத்தை அழித்து, அவர்களை அடிமைகளாக்கி, சுரங்கங்களில் சமாதி கட்டியது, இந்தியாவை கைப்பற்றவும் கொள்ளையிடவும் தொடங்கியது, ஆப்பிரிக்காவை கருப்பின மக்களை வணிக ரீதியாக வேட்டையாடுவதற்கான களமாக மாற்றியது இவைதான் முதலாளித்துவ சகாப்தத்தின் விடியலை சித்தரித்து காட்டுகின்றன […] ஒளிவு மறைவற்ற கொள்ளை, அடிமையாக்கல், படுகொலைகள் ஆகியவற்றின் மூலம் கைப்பற்றப்பட்ட பொக்கிஷங்கள் தாய் நாட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கு அவை மூலதனமாக மாற்றப்பட்டன." 14

முதலாளித்துவம் எவ்வாறு தொடங்கியதோ அவ்வாறே தொடர்கிறது. அதன் இரண்டு நூற்றாண்டு உலக ஆதிக்கத்தின் போது ஒரு சில முதலாளித்துவ நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை பொறுத்தவரையில் வேட்டையாடுபவையாகவும் ஏகாதிபத்தியத் தன்மை உடையனவாகவும் இருந்திருக்கின்றன. ‘மைய' நாடுகளின் இந்த சிறிய பட்டியல் "கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளாக மாறாமல் இருந்திருக்கிறது. இதற்கு ஒரே விதி விலக்கு ஜப்பான் மட்டுமே" என்று ஃபிரெட் ஹால்லிடே நமக்கு நினைவூட்டுகிறார்".15

இந்த ஆய்வறிக்கையில் இந்த நாடுகள் சில இடங்களில் - வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் அடங்கிய முக்கூட்டு என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாடுகள் '2008 உலக வரைபடம்' என்று அத்தியாயத்தின் ஆரம்பத்தில் தரப்பட்டிருந்த பெரும் ஏற்றத் தாழ்வின் ஏற்றமான பக்கத்தில் உள்ளன. அவை உலகை இரண்டு முறை உலகப் போருக்குள் தள்ளின. தாம் ஆதிக்கம் செலுத்திய நாடுகளின் மீதான உரிமை பாராட்டலில் ஏற்பட்ட போட்டியை தீர்த்துக் கொள்வதே இந்த போர்களின் முக்கிய காரணமாக இருந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், குறிப்பாக 1979அக்டோபர் மாதம் ‘வோல்கர் அதிர்ச்சி’ தொடங்கி வைத்த புதிய தாராளவாத உலகமயமாதலின் போது வட அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகள் மூன்றாம் உலக நாடுகள் மீதான தமது பொருளாதார, அரசியல் ஆதிக்கத்தின் வடிவங்களை மாற்றியமைத்திருக்கின்றனர். அந்நாடுகளின் மனித வளத்தையும், இயற்கை வளங்களையும் கொள்ளையிடுவதற்கு புதிய வழிகளை உருவாக்கியுள்ளன. முதல் பெரிய மாற்றமாக இரண்டாம் உலகப் போருக்குப் பின் காலனிய சாம்ராஜ்யங்கள் உடைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்த நாடுகள் அதிகாரபூர்வமாக இறையாண்மை பெற்ற நாடுகளாக மாறின. இந்த முன்னேற்றம் தேசிய விடுதலைக்கான கடுமையான போராட்டங்களில் இணைந்து கொண்ட பெரும் திரளான மக்கள் மூலம் சாத்தியமானது. இந்த இயக்கங்கள் மேலும் மேலும் புரட்சிகர சோசலிச பாதையில் பயணிக்கும் போக்கை பார்த்த ஏகாதிபத்தியவாதிகளின் மிகப்பெரிய பயமும் இவற்றுக்கு காரணமாக இருந்தது. இந்த புதிய சக்திகளின் உறவுகள், தமது அடிமை நாடுகளில் தோன்றி வரும் முதலாளித்து மேட்டுக்குடியினருடனான தமது உறவை மாற்றியமைத்து அவர்களது சீடர்கள் ஆட்சி அதிகாரத்தில் உட்காருவதை நோக்கி மறு சீரமைத்துக் கொள்ளத் தூண்டின. அதே நேரம் ஏகாதிபத்திய நாடுகள் தமது அதிகாரத்தை விட்டுக் கொடுக்கவேயில்லை. இந்த புதிய ஏற்பாடு ஒரு விஷயத்தை திறமையுடன் சாதித்தது. ஏகாதிபத்திய நாடுகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான உறவுகளின் ஏகாதிபத்திய, சுரண்டல் தன்மையை அது மூடுதிரை போட்டு மறைத்தது.

இருந்தாலும், அது மறைந்து விட்டதாக ஒரு போதும் சொல்ல முடியாது. ஏகாதிபத்திய நாடுகள்-மூன்றாம் உலக நாடுகளை சுரண்டுவதற்கான வழிகளில் நிதித்துறை பரிவர்த்தனை தரவுகளில் பதிவாகின்றவற்றை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், குறிப்பாக அன்னிய நேரடி முதலீடுகளிலிருந்து அனுப்பப்படும் லாபமும் வெளிநாட்டுக் கடன்கள் மீதான வட்டியையும் மட்டும் எடுத்துக் கொண்டால் அவற்றின் மொத்தக் கூட்டுத் தொகை ஆண்டுக்கு ஏறக்குறைய $50,000 கோடி ஆகும். இது இந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% அல்லது சுமார் 15,000 டன் தங்கத்துக்கு நிகராகும். இந்த அளவு பணம் ஒவ்வொரு ஆண்டும் மிக ஏழை நாடுகளிலிருந்து மிகப் பணக்கார நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. இது கொலம்பஸ் பஹாமா தீவில் இறங்கியதற்கு பிந்தைய 350 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவிலிருந்தும் அமெரிக்கக் கண்டத்திலிருந்தும் தோண்டப்பட்ட தங்கத்தின் ஒட்டு மொத்த அளவை விட இரண்டு மடங்கு ஆகும்.16

'புதிய தாராளவாத உலகமயமாக்கல்' ஏகாதிபத்திய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை சுரண்டுவது பெருமளவு விரிவடைவதையும் பண்புரீதியாக ஆழமாவதையும் ஒரு பகுதியாகக் கொண்டிருக்கிறது என்று இந்த ஆய்வறிக்கை வாதிடுகிறது. ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் பரிணாம வளர்ச்சியில் இந்த மிகச் சமீபத்திய கட்டத்தில் எது புதியதாக உள்ளது என்றால் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளுக்கும் ஆளப்படும் நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் "முதலாளித்துவத்துக்கு உள்ளார்ந்ததாகவும், முதலாளித்துவ கட்டாயங்களால் ஆளப்படுபவையாகவும் உள்ளன" (எலன் வுட் - ன் மேற்கோள்).17

ஏகாதிபத்திய நாடுகளுக்கும் ஒடுக்கப்படும் நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவுகளை ஒழுங்குபடுத்துவதில் முதன்மையானதாக ராணுவ வலிமை இல்லை. மாறாக, சந்தை வலிமை இதை ஒழுங்குபடுத்துகிறது. இது முதலாளித்துவம் ஏற்கனவே நிலவும், வரித்துக் கொண்ட ஆதிக்க வடிவங்களை தனக்குள் உள் வாங்கிக் கொள்வதில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. அதாவது, இது மதிப்பு விதியின் வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது.18

(தொடரும்)
  1. நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

  2. ஏகாதிபத்திய உலகமயமாதலில் மூன்றாம் உலக உழைப்பின் பாத்திரம்

  3. பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் - உலகம் எப்படி உள்ளது?

  4. நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு உள்ளதா? அது மட்டும்தான் உள்ளதா?

Thursday, February 14, 2019

நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு உள்ளதா? அது மட்டும்தான் உள்ளதா?

ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்
 
- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010

4

அத்தியாயம் 1 - உலகமயமாதலும், 'புதிய' ஏகாதிபத்தியமும்

"அனைத்து சர்வதேச உறவுகளும் முதலாளித்துவத்துக்கு உட்பட்டதாகவும், முதலாளித்துவத்தின் அதிகாரத்தால் ஆளப்படுவதாகவும் இருக்கும் உலகத்துக்கான ஏகாதிபத்தியம் பற்றி முறையான ஒரு கோட்பாட்டை நாம் இன்னும் உருவாக்கவில்லை. இதற்கான காரணம், ஏறக்குறைய உலகளாவிய முதலாளித்துவம் என்பது மிகச் சமீபத்திய நிகழ்வாக இருப்பதே ஆகும்." 1 – எல்லன் மெய்க்சின்ஸ் வுட்.

உலக அளவு பெரிதான இந்தக் கோட்பாட்டு இடைவெளியை இந்த ஆய்வறிக்கை நிரப்ப முயல்கிறது. “ஏறக்குறைய உலகளாவிய முதலாளித்துவ உலகத்துக்கான முறையான ஏகாதிபத்திய கொள்கை” இல்லாத நிலையை சரி செய்ய முயற்சிக்கிறது. இந்த ஒட்டு மொத்தப் பணியையும் ஒரே ஆய்வறிக்கை நிறைவேற்ற முடியாது என்பது உண்மை. எனவே, ஒரு முனைவர் பட்ட ஆய்வறிக்கைக்குள் கையாளப்படக் கூடிய அளவில், ஆனால் ஒட்டு மொத்த கட்டமைப்புக்கும் மையமான பரிமாணத்தை, அல்லது கூறு ஒன்றை அடையாளம் காண்பதை தனது பணியாக எடுத்துக் கொள்கிறது. இந்தப் பணி எவ்வாறு செய்யப்படுகிறது என்று இந்த அத்தியாயத்தின் முதல் பிரிவு விளக்குகிறது.

இரண்டாவது பிரிவில், சுரண்டலின் தன்மை பற்றிய சில முக்கியமான கருதுகோள்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. முதலாளித்துவ உற்பத்தி தனியார் அடிப்படையில் நடப்பதாலும், மாய்மாலமான, மாயத் தோற்றங்களை ஏற்படுத்தும், மேற்பார்வையில் ஏமாற்றங்களை தரக்கூடிய சந்தையை ஆதாரமாகக் கொண்டிருப்பதாலும் திரை போட்டு மறைக்கப்படும் ஆனால், தவிர்க்க முடியாத சுரண்டலின் இருத்தலையும் இருத்தலையும் அறிமுகப்படுத்துகிறது.

இறுதிப் பிரிவில், இந்த ஆய்வறிக்கையை வழிநடத்தும் கோட்பாட்டு சட்டகம் வளர்த்தெடுக்கப்படுகிறது. முதலாளித்துவம் ஏகாதிபத்தியம் பற்றிய நான்கு கோட்பாட்டு பாரம்பரியங்களை மீளாய்வு செய்து, அவற்றுக்கிடையே இணைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் இத்தகைய சட்டகம் உருவாக்கப்படுகிறது. கார்ல் மார்க்சின் மூலதனம், லெனினின் ஏகாதிபத்தியம், சார்புநிலை கோட்பாடு இவற்றோடு 'உலகளாவிய முதலாளித்துவம்’, 'புதிய ஏகாதிபத்தியம்' ஆகியவை பற்றிய தற்கால கோட்பாடுகள் இந்த ஆய்வு பாரம்பரியங்கள் ஆகும்.

ஆய்வறிக்கையின் எஞ்சிய பகுதிகள் பற்றிய விளக்கத்தோடு இந்த அத்தியாயம் நிறைவடைகிறது.

1.1 புதிய தாராளவாத உலகமயமாதலும் ஏகாதிபத்திய/மூன்றாம் உலக வேறுபாடுகள் தொடர்தலும்

இந்த அறிமுகப் பிரிவு 5 பணிகளை நிறைவேற்றுகிறது.

  • முதலாவதாக, இந்த அத்தியாயத்திலும், இந்த ஆய்வறிக்கையின் பிற பகுதிகளிலும் விரிவாக பேசப்படவிருக்கிற குறிச்சொற்களுக்கும், கருதுகோள்களுக்கும் ஆரம்ப வரையறையை தருகிறது.
  • இரண்டாவதாக, இந்த ஆய்வறிக்கைக்கு காரணமாக அமைந்து, அதன் வடிவமைப்புக்கு வழிகாட்டிய பரந்துபட்ட கோட்பாட்டு அடித்தளத்தை விளக்குகிறது. 
  • ஆய்வு செய்யப்பட வேண்டிய களத்தை வரையறுப்பதற்கான குறிப்பான செயல்முறைகளையும், உறவாடல் கட்டமைவுகளையும் அடையாளம் காண்கிறது. 
  • நான்காவதாக, இந்த ஆய்வறிக்கைக்கு அடிப்படையாக அமையும் வாதங்களையும், கூற்றுகளையும் தெளிவாக முன்வைக்கிறது. 
  • ஐந்தாவதாக, இந்த வாதங்களை வளர்த்தெடுக்கவும், இந்தக் கூற்றுகளை உறுதிப்படுத்தவும் தேவையான ஆய்வு அணுகுமுறைகளை விளக்குகிறது.
உலக அரசியல் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாக ஏகாதிபத்திய நாடுகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வான, சுரண்டும், ஒடுக்கும், எதிர்மறையான, மனிதத்தன்மையற்ற உறவு முதன்மையானதாக உள்ளது. ஆனால்,  இதை மையநீரோட்ட சமூகவியல் மட்டுமின்றி, மார்க்சிய மையநீரோட்டமும்  அங்கீகரிக்கத் தவறுகின்றது. இந்த ஆய்வறிக்கை இந்த இடைவெளியை இட்டு நிரப்பும் நோக்கத்தில் திட்டமிடப்பட்டது. மார்க்சிய மையநீரோட்டத்தில் மிகவும் செல்வாக்கு செலுத்தும் சிந்தனையாளர்கள் பற்றிய மீள்ஆய்வில் இது தொடர்பான விபரங்களை நாம் பார்ப்போம். நாடு பிடித்தல், கொள்ளை அடித்தல் ஆகியவற்றின் அடிப்படையிலான முதலாளித்துவத்தின் முந்தைய நூற்றாண்டுகளுக்கும் இன்றைய உலகுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை இந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது. பெரும்பான்மையான மையநீரோட்ட தாராளவாத அணுகுமுறைகளும், மார்க்சிய அணுகுமுறைகளும் இதைச் செய்யத் தவறியிருக்கின்றன.

'வளர்ந்த', அதிக தனிநபர் உற்பத்தி (ஜி.டி.பி) கொண்ட, அதிக அளவு கனிம வளங்களை பயன்படுத்தும் பகுதிகளுக்கும் பிற பகுதிகளுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வு, அதாவது ஏகாதிபத்திய-மூன்றாம் உலக ஏற்றத் தாழ்வு, விண்வெளியிலிருந்து பார்க்கும் போது தெளிவாக தெரிகிறது. உலக மக்கள் தொகையில் 14% மட்டும் கொண்ட ஐரோப்பா, வட அமெரிக்கா, ஜப்பான்  உலகின் பிற பகுதிகளை காட்டிலும் பல மடங்கு அதிக ஒளியை இரவில் வெளியிடுகின்றன. இதை இந்த ஆய்வுரையின் தொடக்கத்தில் தரப்பட்டுள்ள விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தில் காணலாம். 2


இந்த அத்தியாயத்தில் ஆரம்பத்தில் தரப்பட்டுள்ள, '2008-ம் ஆண்டு உலக வரைபடம்' உலகம் இரண்டாக பிளவுபட்டிருப்பதை இன்னும் தெளிவாகக் சித்தரிக்கிறது.


2008-ம் ஆண்டில் 90% மனிதர்கள் சராசரி ஜி.டி.பி $11,000-க்கு குறைவாகவோ $33,000-க்கு அதிகமாகவோ உள்ள நாடுகளில் வசிக்கின்றனர்;3 இந்த 90% மக்கள் தொகையில் பாதிப் பேர் $11,000-க்கும் $15,000-க்கும் இடையே தனிநபர் ஜி.டி.பி கொண்ட பகுதிகளில் வசிக்கின்றனர்.4 இதே போன்ற தரவுகளை ஆய்வு செய்த அந்தோனி பாய்னே, “இதில் வெளிப்படும் விஷயம் மிகவும் தீவிரமானது; இன்றைய உலகப் பொருளாதாரத்தின் மீது ஏகாதிபத்திய நாடுகள் செலுத்தும் ஆதிக்கம் பற்றிய மிகவும் மறுக்கமுடியாத ஆதாரத்தை இது வழங்குகிறது”5 என்று கூறுகிறார்.

மைய கருதுகோள்கள்
'ஏகாதிபத்திய நாடுகள்-மூன்றாம் உலக நாடுகள்' என்ற சொல் புரிந்து கொள்ள சிரமமானதாக இருக்கலாம். ஏனென்றால், அளவில்லா சிக்கல்கள் நிரம்பிய உலகத்தை அளவுக்கதிகமாக எளிமைப்படுத்துவதாக இது உள்ளது. இருப்பினும், இந்த உலகைப் பற்றிய இரண்டு வரைபடங்களில் தெரிவது போல, இந்த எளிமைப்படுத்தல் பருண்மையானதும், யதார்த்தமானதுமாகும். ஏகாதிபத்திய நாடுகளுக்கும்-மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வு பரிணாம வளர்ச்சி அடைவதோடு திடீர் திடீர் என மாற்றங்கள் அடைகிறது. அதற்கு தீவிரமான எதிர்ப்பு உள்ளது. அது ஆழமான நெருக்கடியில் உள்ளது - இருப்பினும் இன்னும் நம்மிடையே தொடர்கிறது.

உலகை விளக்குவதற்கான சொற்றொடர் என்ற அளவில் 'ஏகாதிபத்திய நாடுகள்-மூன்றாம் உலக நாடுகள்' என்பது இரண்டு வலிமைகளை பெற்றிருக்கிறது : அது உலக அரசியல், சமூக, பொருளாதார பிரிவினையின் புவிசார் தன்மையையும், நிலப்பரப்பு சார் தன்மையையும் துலக்கமாக காட்டுகிறது. இந்த பிரிவினை கடகரேகையை ஒட்டிய ஒரு மாபெரும், வளைந்து நெளிந்து செல்லும், உலகளாவிய பிளவு ஆகும்6. இது இப்போதைய உலகநிலைமை காலனியாதிக்க ஏகாதிபத்திய முந்தைய நூற்றாண்டுகளின் தொடர்ச்சியாக இருப்பதை குறிக்கிறது.

2000-ம் ஆண்டு தென் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு சராசரி மனிதரின் ஆண்டு வருவாய் ஏகாதிபத்திய நாட்டின் ஒரு சராசரி மனிதரின் வருவாயில் 13-ல் ஒரு பங்குதான் என்று சுட்டிக் காட்டுகிறார். பெய்ன். ஆசியாவின் மூன்றாம் உலக நாடுகளின் மக்களுக்கு இது 24-ல் ஒரு பங்காகவும், சராசரி ஆப்பிரிக்க மனிதருக்கு 60ல் ஒரு பங்காகவும் உள்ளது.
வளர்ந்த/வளரும், மைய/விளிம்பு, ஏகாதிபத்திய/மூன்றாம் உலக நாடுகள் என உலகம் பிளவுபட்டுள்ளது என்ற கருத்து இன்றைய உலகின் நாடுகளுக்கிடையேயான உறவுகளின் பல நுணுக்கங்களையும், யதார்த்த நிகழ்வுகளுக்கும் நிலைமைகளுக்கும் உள்ள சிக்கலான இயக்க உறவையும் சித்தரிக்கிறது. ஆனால், இவற்றில் எதுவும் புதிய உலகமய சகாப்தத்தின் விரிந்து செல்லும் எல்லைகளை விளக்குவதற்கு போதுமானதாக இல்லை என்று பெய்ன் கருதுகிறார்.7

இருப்பினும், தனது கண்ணோட்டத்தை முன் வைப்பதற்கு பெய்ன் பயன்படுத்தும் 'பணக்கார' நாடுகள், 'ஏழை' நாடுகள் என்ற சொற்றொடர் ஏகாதிபத்திய நாடுகள்/மூன்றாம் உலக நாடுகள் என்பதில் உள்ள அதே வரம்புகளை கொண்டுள்ளது.

'ஏகாதிபத்திய நாடுகள்-மூன்றாம் உலக நாடுகள்' போன்ற உலகை இரண்டாக பிரிக்கும் கோட்பாடுகள், அளவுக்கு அதிகமாக எளிமைப்படுத்துகின்றன : ஒவ்வொரு நிலையிலும் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் தமக்குள் சமூக வர்க்கங்களாக பிரிந்திருப்பதை அவை வெளிப்படுத்துவதில்லை. அதாவது, ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் உள்ள விகாரமான ஏற்றத் தாழ்வுகள் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட துணைக்கோள் புகைப்படத்திலோ, '2008 உலக செல்வ பரவல் வரைபடத்திலோ' பிரதிபலிக்கப்படவில்லை.

அதாவது, சொத்து வினியோகம் பரவல் தொடர்பாக உலக வரைபடத்தில் வெளிப்படுத்தப்படும் நாடுகளுக்கு இடையேயான ஏற்றத் தாழ்வுகளுக்கு இணையான ஏற்றத் தாழ்வு ஒவ்வொரு நாட்டு எல்லைகளுக்குள்ளும் நிலவுகிறது8. நாடுகளுக்கு இடையேயான ஏற்றத் தாழ்வு அதிகரித்திருக்கிறதா என்பது பற்றிய சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் அதே நேரம் ஒவ்வொரு நாட்டின் உள்ளே ஏற்றத் தாழ்வு சமீபத்திய பல ஆண்டுகளில் வேகமாக அதிகரித்திருக்கிறது.9

ஏகாதிபத்திய நாடுகள்-மூன்றாம் உலக நாடுகளுக்கு இடையேயான உறவை சமூக வர்க்க பிரிவினையை ஒதுக்கி விட்டு பார்க்காமல், ஏகாதிபத்திய நாடுகளுக்கும்-மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான ஏற்றத் தாழ்வு பற்றிய வர்க்க பகுப்பாய்வு செய்ய வேண்டிய பணி உள்ளது. அத்தகைய வர்க்க பகுப்பாய்வு வருமான வினியோகத்தின் மீதே தனிச்சிறப்பாக கவனம் செலுத்துவதோடு மட்டுமின்றி அதை விட வேகமாக அதிகரித்து வரும் சொத்துக்களின் வினியோகத்தின் மீதும் கவனம் செலுத்துவதை கோருகிறது. நாடுகளுக்கிடையேயும் நாடுகளுக்குள்ளேயும் சொத்து வினியோகத்தின் ஒரு பக்க சார்பு வருமான வினியோகத்தின் ஒரு பக்கச் சார்பை விட மேலும் தெளிவாக வெளிப்படுகிறது.10

(தொடரும்)
  1. நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

  2. ஏகாதிபத்திய உலகமயமாதலில் மூன்றாம் உலக உழைப்பின் பாத்திரம்

  3. பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் - உலகம் எப்படி உள்ளது?

Tuesday, February 12, 2019

ஏகாதிபத்திய உலகமயமாதலில் மூன்றாம் உலக உழைப்பின் பாத்திரம்


ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்
 
- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010




 2. உள்ளடக்கம்
சொற்பட்டியல்
படங்களும் அட்டவணைகளும்
நன்றியுரை
சாராம்ச உரை

அத்தியாயம் 1 - உலகமயமாதலும், 'புதிய' ஏகாதிபத்தியமும்
1.1 புதிய தாராளவாத உலகமயமாதலும் ஏகாதிபத்திய/மூன்றாம் உலக வேறுபாடுகள் நீடித்தலும்
    மைய கருதுகோள்கள்
    கருதுகோள்களை கோட்பாட்டு ரீதியாக வளர்த்தெடுத்தல்: புதிய தாராளவாத     உலகமயமாக்கம் - முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சியில் ஒரு புதிய கட்டம்
    ஆய்வறிக்கையின் நோக்கமும் ஆய்வுத் திட்டமும்

1.2 சுரண்டலை திரையிட்டு மறைத்தல்
    சுரண்டலும் அதிதீவிர சுரண்டலும்
    சுரண்டலை புறக்கணிப்பதை பொருளாதாரவியல் நிபுணர்கள் கோட்பாட்டுரீதியாக எப்படி நியாயப்படுத்துகிறார்கள்?
    GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மாயை

1.3 ஏகாதிபத்தியம் பற்றிய மார்க்சிய கோட்பாடுகளும் “புதிய ஏகாதிபத்தியமும்”
    மார்க்ஸ், லெனின், முதலாளித்துவ உற்பத்தி உலகமயமாக்கம்
    சார்பு கோட்பாடும் அதன் மறைவும்
    'புதிய ஏகாதிபத்தியம்' பற்றிய கோட்பாடுகள் 

1.4 ஆய்வறிக்கை வடிவமைப்பு

அத்தியாயம் 2 : அயல்நாட்டு உற்பத்தி, அயலக உற்பத்தி, 'உலகளாவிய உழைப்பு ஆதாயம்'
2.1 உற்பத்தி செயல்முறைகள் உலகமயமாதல்
2.2 உலகளாவிய அயலக உற்பத்திக்கான உதாரணங்கள்
2.3 மூன்றாம் உலக நாடுகள் - இனிமேலும் விளிம்பு நிலையில் இல்லை
      ஏகாதிபத்திய-மூன்றாம் உலக அன்னிய நேரடி முதலீட்டின் அதீத சமமின்மை
    உற்பத்தித் துறை நேரடி முதலீடும், சேவைத் துறை நேரடி முதலீடும்
    இணைப்புகள், கைப்பற்றுதலும் 'புத்தம் புதிய' அன்னிய நேரடி முதலீடும்
    ஏகாதிபத்திய நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் தேசங்கடந்த தொழிற்கழக வேலை வாய்ப்பு, .
    சமனற்ற 'சந்தை கட்டமைவுகள்' - ஏகாதிபத்திய நாடுகளில் ஏகபோக 'பெரு நிறுவனங்கள்', மூன்றாம் உலக நாடுகளில் கழுத்தை அறுக்கும் போட்டி
2.4 சேவைத்துறை அயலக உற்பத்தி
2.5 உயிருள்ள உழைப்பு - மையத்தில்
    அயலக உற்பத்தியும் முக்கூட்டு ஏகாதிபத்திய நாடுகளில் உழைப்பு சக்தியின்     மறுஉற்பத்தியும்.
2.6 'உலகளாவிய உழைப்பு ஆதாயம்' - உற்பத்தி செயல்முறைகள் உலகமயமாக்கப்படுவதற்கான     முக்கிய உந்து சக்தி
'உலகளாவிய உழைப்பு ஆதாயம்' - ஒரு பயனுள்ள குறிச்சொல்லா அல்லது உண்மையை மூடி மறைக்கும் சொற்சிலம்பமா? 
2.7 புதிய மார்க்சியவாதிகளும் 'உலகளாவிய உழைப்பு ஆதாயமும்'
2.8 விரிந்த பார்வையில் உலகளாவிய உழைப்பு ஆதாயம்

அத்தியாயம் 3 – மூன்றாம் உலக உழைப்பாளர்கள், இனிமேலும் விளிம்பு நிலையில் இல்லை

3.1 சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ள மூன்றாம் உலக உழைப்பாளர்கள்
    தொழிலாளர்கள் சுதந்திரமாக இடம் பெயர்வது தடுக்கப்படுவதும், மூன்றாம் உலகத்தின் உருவாக்கமும்
    மூன்றாம் உலக நாடுகளின் தொழிலாளர் படையின் வளர்ச்சியும் பாட்டாளிமயமாதலும்

3.2 முறைசாரா பொருளாதாரம் : முதலாளித்துவத்தின் 'ஒப்பீட்டு உபரி மக்கள் தொகை'
    விவசாயம் அல்லாத வேலை வாய்ப்புகளில் முறைசாரா வேலைவாய்ப்புகளின் சதவீதம்
    முறைசாரா மயமாக்கலும் சமூக பின்னடைவும்
    'நெகிழ்வாக்கம்'
    முறைசாரா பொருளாதாரமும் முதலாளித்துவத்தின் 'ஒப்பீட்டு உபரி மக்கள்     தொகையும்' 

3.3 உழைப்பு 'பெண்மையாக்கப்படுவதும்' பெண்கள் பாட்டாளியாக்கப்படுவதும்
    'கச்சிதமான பொருத்தம்'
    'பெண்மை நீக்கம்'
    பாலின கூலி வேறுபாடு - எப்போதையும் போலவே பெரிதாக உள்ளது.
    பெண்ணியமும் வர்க்க பகுப்பாய்வும்

3.4 தொழில் துறை வேலை வாய்ப்பும் விவசாய, சேவைத் துறை வேலைவாய்ப்பும்
    தொழில் துறை உழைக்கும் வர்க்கம் மூன்றாம் உலக நாடுகளுக்கு மாறிச் செல்தல்
    ஏற்றுமதி சார்ந்த தொழில் மயமாக்கல் : பரந்து விரிந்ததா, அல்லது குறுகிய அடிப்படையிலானதா?
    ஏற்றுமதி செயல்முறை மண்டலங்கள்
    பாரம்பரியமற்ற விவசாய ஏற்றுமதிகள் 

அத்தியாயம் 4 - உலகமய காலகட்டத்தில் கூலி மாற்றப் போக்குகள்

4.1 உலகக்கூலிகள் - புள்ளிவிபர பிரச்சனைகள்
4.2 புதிய தாராளவாத கால கட்டத்தில் உலக் கூலி மாற்றப் போக்குகள்
4.3 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்து செல்லும் உழைப்பின் பங்கு
4.4 அதிகரிக்கும் கூலி ஏற்றத் தாழ்வுகள்
4.5 நெருக்கடிகளின் போது கூலிகள்
முடிவுரை

அத்தியாயம் 5 - உற்பத்தித் திறன் முரணும் வாங்கும் திறன் வேறுபாடும்

5.1 உண்மையான கூலிகளும் வாங்கும் திறன் சமநிலையும்
 வாங்கும் திறன் வேறுபாடும் ஏகாதிபத்திய/மூன்றாம் உலக பிளவும்
 வாங்கும் திறன் சமன்பாட்டின் புதைகுழிகள்
 வாங்கும் திறன் சமன்பாடு குறித்து மார்க்சிய அரசியல் பொருளாதாரவியலாளர்கள்

5.2 சந்தை நாணய மாற்று விகிதங்கள் ஏன் 'வலு குறைந்த' நாணயங்களை குறைத்து     மதிப்பிடுகின்றன?
    வாங்கும் திறன் சமன்பாடு பற்றிய அனுமானம்
    உற்பத்தித் திறன் முரண்
    உற்பத்தித் திறனும் 'ஓரலகு உழைப்பு சக்தி செலவும்'

அத்தியாயம் 6 : அயலக உற்பத்தியின் மர்மங்கள்

6.1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தக புள்ளிவிபரங்களுக்கு பொருள் கூறுதல்
6.2 உலக உற்பத்தித் துறை ஏற்றுமதியில் அதிகரித்து வரும் மூன்றாம் உலக நாடுகளின் பங்கு
6.3 உலக உற்பத்தி மதிப்பு கூட்டலில் மூன்றாம் உலக நாடுகளின் பங்கு மெதுவாக உயருதல்
    உற்பத்தி மதிப்புக் கூட்டலின் வீழ்ச்சி, நிதிமயமாக்கலின் வளர்ச்சி
6.4 அயல்நாட்டு உற்பத்தியை விட வேகமாக வளரும், அயலகஉற்பத்தி.
    அயலக உற்பத்தியின் மர்மங்கள்

அத்தியாயம் 7 - மொத்த உள்நாட்டு உற்பத்தி மாயை

7.1 மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?
7.2 மொத்த உள்நாட்டு உற்பத்தி, 'மதிப்பு கூட்டல்', நிறுவனம் பற்றிய கோட்பாடு
7.3 'மதிப்புச் சங்கிலி' கருதுகோள்
7.4 மதிப்புச் சங்கிலிகளும் மதிப்பு கோட்பாடும்
7.5 GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மாயையின் மூன்று கூறுகள்
    திறன்மிகு உழைப்பும், திறன்குறை உழைப்பும்
    சர்வதேச ரீதியில் தொழில் நுட்ப வேறுபாடுகளும் அங்கக இயைபு வேறுபாடுகளும்
    சுரண்டல் விகிதத்தில் சர்வதேச வேறுபாடுகள்
7.6 உலகளாவிய உற்பத்தி சகாப்தத்தில் GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி)

முடிவுரை
 அறிமுகம்
1 - முக்கிய கண்டுபிடிப்புகளும் பொருத்தப்பாடும்
    புதிய தாராளவாத உலகமயமாக்கம் - முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சியில்     ஒரு புதிய கட்டம்
2. விளைவுகள்
    அயலக உற்பத்தியும் நெருக்கடியும்
    உற்பத்தி சர்வதேசமயமாதலும் ஏகாதிபத்தியங்களுக்கிடையே பகைமையும்
நூல் பட்டியல்

படங்களும் அட்டவணைகளும்
படம் 2.2     புதிய அன்னிய நேரடி முதலீட்டின் உலகளாவிய பரவல்
படம் 3.1     உலக பொருளாதார ரீதியாக செயல்படு நிலை மக்கள் தொகை
படம் 3.2    ஏற்றுமதி நிறைசார்ந்த உலக தொழிலாளர் படை
படம் 3.3    கூலி பெறும், சம்பளம் பெறும் ஊழியர்கள் பொருளாதார ரீதியாக செயல்படும்             மக்கள் தொகையில் சதவீதமாக
படம் 3.4     கூலி பெறும், சம்பளம் பெறும் ஊழியர்கள் பொருளாதார ரீதியாக செயல்படும்             மக்கள் தொகையில் சதவீதமும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி                     வீதங்களும்
படம் 3.5    உலக தொழில்துறை தொழிலாளர் படை
படம் 3.6    மொத்த ஏற்றுமதி வளர்ச்சிக்கு உற்பத்தித் துறை ஏற்றுமதிகளின் பங்களிப்பு
படம் 3.7    மொத்த ஏற்றுமதியில் உற்பத்தித் துறை ஏற்றுமதிகள், 1990 & 2004
படம் 4.1    உற்பத்தித் துறை கூலிகளின் சர்வதேச ஒப்பீடு
படம் 4.2    ஜவுளித்துறை தொழிலாளர் கூலிகளின் சர்வதேச ஒப்பீடு
படம் 4.3    ஆசியா, தென் அமெரிக்கா (வாங்கும் திறன் சமன்பாடு அடிப்படையில்) வில்                 கூலிகள் அமெரிக்க கூலிகளின் சதவீதத்தில்
படம் 4.4    'முன்னேறிய' நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உழைப்பின் பங்கு
படம் 5.1    வாங்கும் திறன் வேறுபாடும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியும்
படம் 5.2    வாங்கும் திறன் வேறுபாடு - 1980 - 2006
படம் 5.3    வாங்கும் திறன் சமன்பாடு மாற்றக் குறியீடும் பொருளாதார ரீதியாக செயல்பாட்டில் உள்ள மக்கள் தொகையில் கூலித் தொழிலாளர்களின் பங்கும்
படம் 5.4    வாங்கும் திறன் மாற்ற குறியீடுகள் - ஆசியா, தென் அமெரிக்கா
படம் 5.5    உலக உணவு விலை குறியீட்டு எண், 2000-2008
படம் 5.6    வலுவான நாணய கையிருப்புகள்
படம் 5.7    உழைப்பின் உற்பத்தித் திறனும், உழைப்புக்கான செலவும்
படம் 6.1    உற்பத்திப் பொருட்கள் வர்த்தகத்தில் 'வளரும் நாடுகளின்' பங்கு
படம் 6.2    'வளரும்  நாடுகளின்' ஏற்றுமதியில் 'வளர்ந்த நாடுகளின்' பங்கு
படம் 6.3    உற்பத்தி மதிப்புக் கூடுதலில் வளர்ச்சி, 1970-79 & 1980-2003
படம் 6.4    உற்பத்தி மதிப்புக் கூடுதலும் உற்பத்திப் பொருள் ஏற்றுமதிகளும் 1990 - 2007 படம் 6.5    'வளரும் நாடுகள்' உற்பத்தி மதிப்பு கூடுதல் வளர்ச்சியும் ஏற்றுமதி                     வளர்ச்சியும்

அட்டவணை 3.1
கூலி, மற்றும் சம்பளத் தொழிலாளர்களின் பங்கு (பொருளாதார ரீதியாக செயல்பாட்டில் உள்ள மக்கள் தொகை சதவீதம்)
அட்டவணை 3.2
விவசாயம் அல்லாத வேலை வாய்ப்புகளில் முறைசார வேலைவாய்ப்பு சதவீதம்
அட்டவணை 3.3       
ஏற்றுமதி மண்டலங்களில் வேலை வாய்ப்பு, 2006 அல்லது சமீபத்திய ஆண்டு
அட்டவணை 3.4       
ஏற்றுமதியில் ஏற்றுமதி மண்டலங்களின் பங்கு - தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதாரங்களில், 2006
அட்டவணை 4.1       
ஜவுளித்துறை உற்பத்தி தொழிலாளர்களின் நேரக் கூலி, 2008
அட்டவணை 4.2       
நாடுகளுக்கிடையேயான வேலை கூலி வேறுபாடுகள்
அட்டவணை 4.3
கூலி வளர்ச்சியும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும், 2001-2007
அட்டவணை 4.4       
ஏழை, பணக்கார நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உழைப்பின் பங்கில் மாற்றங்கள்

சொற்பட்டியல்

ஆசிய வளர்ச்சி வங்கி - ADB - Asian Development Bank
தொழிலாளர் புள்ளிவிபர அலுவலகம் - BLS - Bureau of Labor Statistics
பொருளாதார ரீதியாக செயல்படும் மக்கள் தொகை - EAP - Economically Active Population
ஏற்றுமதி சார்ந்த தொழில்மயமாதல் - EOI  - Export-oriented industrialisation
ஐரோப்பிய ஒன்றியம் - EU - European Union
ஏற்றுமதி நிறைசார்ந்த உலகளாவிய தொழிலாளர் படை - EWGLF - Export-Weighted Global Labour Force
அன்னிய நேரடி முதலீடு - FDI - Foreign Direct Investment
பைனான்சியல் டைம்ஸ் - FT - Financial Times
மொத்த உள்நாட்டு உற்பத்தி - GDP - Gross Domestic Product
மொத்த உள்நாட்டு வருமானம் -GDI - Gross Domestic Income
மொத்த தேசிய வருமானம் - GNI - Gross National Income
மொத்த தேசிய உற்பத்தி - GNP - Gross National Product
வெகுவாக கடன்பட்ட ஏழை நாடு - HIPC - Heavily-Indebted Poor Country
சர்வதேச ஒப்பீட்டு திட்டம் - ICP - International Comparison Program
சர்வதேச நிதி அமைப்புகள் - IFI - International Financial Institution (IMF, World Bank etc)
சர்வதேச தொழிலாளர் கழகம் - ILO - International Labour Organisation
சர்வதேச நாணய நிதியம் - IMF - International Monetary Fund
இடம் பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு - IOM - International Organization for Migration
தகவல் தொழில் நுட்பத் துறை IT - Information Technology
இணைப்புகளும், கைப்பற்றல்களும் - M&A - Mergers and Acquisitions
புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்கு - MDG - Millennium Development Goal
உற்பத்தி மதிப்புக் கூட்டல் - MVA - Manufacturing Value Added
பொருளாதார ஆய்வுக்கான தேசிய மையம் - NBER - National Bureau for Economic Research
புதிதாக தொழில்மயமாகும் பொருளாதாரம் - NIE - Newly Industrialising Economy
நிகர நடப்பு மதிப்பு - NPV - Net Present Value
பாரம்பரியமற்ற விவசாய ஏற்றுமதிகள் - NTAE - Non-Traditional Agricultural Exports
மரம் அல்லாத வன பொருட்கள் - NTFP - Non-Timber Forest Products
பொருளாதார ஒத்துழைப்புக்கும் முன்னேற்றத்துக்குமான அமைப்பு - OECD - Organisation for Economic Co-Operation and Development
வாங்கும் திறன் சமன்பாடு - PPP - Purchasing Power Parity
மூன்றாம் உலக நாடுகளின் கடன் - TWD - Third World debt
ஐக்கிய நாடுகள் சபை - UN - United Nations
வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு - UNCTAD or Unctad - United Nations Conference on Trade and Development
ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் - UNDP - United Nations Development Programme
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு - UNESCO - United Nations Educational Scientific and Cultural Organisation
ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதி - UNICEF - United Nations Children’s Fund
ஐக்கிய நாடுகள் தொழில்துறை வளர்ச்சி அமைப்பு - UNIDO - United Nations Industrial Development Organisation
உலக வளர்ச்சி குறியீடுகள் - WDI - World Development Indicators (World Bank)
உலக பொருளாதார வழிகாட்டிகள் - WEO - World Economic Outlook
  1. நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

 

Monday, February 11, 2019

நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

ன்றைய உலகின் நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவுகள் பற்றிய அறிவியல் ரீதியான முக்கியமான ஆய்வுகளில் ஒன்று ஜான் ஸ்மித்-ன் "ஏகாதிபத்தியமும் உற்பத்தி உலகமயமாதலும்" என்ற முனைவர் பட்ட ஆய்வறிக்கை. 2010-ல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுரையைத் தொடர்ந்து ஜான் ஸ்மித் இதே விஷயத்தைப் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 21-ம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் பதிப்பித்துள்ளார்.

பொருளாதார விஷயங்களில் ஆய்வுள்ள தமிழ் இளைஞர்களின் தேவைக்காக அந்த ஆய்வறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து இங்கு வெளியிடுகிறேன். மொத்தம் 300 பக்கங்களைக் கொண்ட இந்த ஆய்வறிக்கையை சிறு சிறு பதிவுகளாக வெளியிட்டால் சுமார் 100 பதிவுகள் வரை நீளலாம். இதை இறுதியில் ஒரு மின் நூல் ஆக தொகுக்கலாம் என்று திட்டம்.

ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்
 
- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010

“நியாயமான வேலை நாளுக்கு நியாயமான கூலி' என்ற பழமைவாத குறிக்கோளுக்கு மாறாக, “கூலி முறையை ஒழித்துக் கட்டுவது” என்பதுதான் புரட்சிகர இலட்சியம் - கார்ல் மார்க்ஸ், 1865, மதிப்பு, விலை, லாபம்
 

1. சாராம்ச உரை
புதிய தாராளவாத உலகமயமாக்கல் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான இடைவெளியை குறைப்பதற்கு பதிலாக, ஏகாபத்திய முக்கூட்டுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான உறவின் சுரண்டல் தன்மையையும், ஒட்டுண்ணித்தன்மையையும் அதன் மூலம் அதன் ஏகாதிபத்திய தன்மையையும் பெருமளவு ஊதிப் பெருக்கியிருக்கிறது.
 

இந்த ஆய்வறிக்கையின் மிகக் கடுமையான, எனவே மிகப் பொருத்தமான சோதனை, புதிய தாராளவாத உலகமயமாக்கலின் மிகப் புதிய, பெருமளவு மாறுதல்களை கொண்டு வந்த ஒரு அம்சத்தை எடுத்துக் கொண்டு அது ஏகாதிபத்திய-மூன்றாம் உலக பிளவை பலவீனப்படுத்தியிருக்கிறதா அல்லது வலுப்படுத்தியிருக்கிறதா என்று கேட்பது ஆகும். 
உற்பத்தி செயல்முறைகள் உலகமயமாதல்தான் இந்த அம்சம் என்று இந்த ஆய்வறிக்கை முன் வைக்கிறது. மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையேயான உறவின் உலகளாவிய வளர்ச்சியின் பண்பு ரீதியான புதிய கட்டமான இந்த அம்சம், தொழில்துறை உற்பத்தி குறை கூலி நாடுகளுக்கு மாற்றப்படுவதாக வெளிப்படுகிறது.

இந்த உருமாற்றத்தை இயக்கும் பிரதான சக்தி ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகங்கள் அதிக கூலியிலான உள்நாட்டு உழைப்பின் இடத்தில், குறை கூலி மூன்றாம் உலக உழைப்பை பதிலீடு செய்வதுதான்; அதன் மூலம் அவை செலவைக் குறைத்து, லாபத்தை அதிகரிக்க முயற்சிக்கின்றன என்று பகுப்பாய்வு தெரிவிக்கிறது. இதன் விளைவாக தேசங்கடந்த தொழிற்கழகங்கள் இந்த அதீத சுரண்டலை மேலும் மேலும் சார்ந்திருக்கின்றன. இந்த சுரண்டல் தொடர்பான விபரங்களில் ஒரு சிறு பகுதி மட்டுமே நிதி பரிவர்த்தனை தொடர்பான புள்ளிவிபரங்களில் பதிவு செய்யப்படுகிறது.

இந்த ஆய்வறிக்கை உலகளாவிய தொழிலாளர் வர்க்கத்தின் மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த பிரிவுக்கு மைய இடத்தை வழங்குகிறது. மூன்றாம் உலக நாடுகளின் தொழிலாளர் வர்க்கம் புதிதாக உருவாகி, வேகமாக வளர்ந்து வருகிறது; இந்த ஆய்வறிக்கை அதன் சமூக நிலை, உலக பொருளாதாரத்தில் அது இணைக்கப்பட்டுள்ள விதம், மூன்றாம் உலக நாடுகளின் கூலி வகைகள் மற்றும் போக்குகள் பற்றி ஆய்வு செய்கிறது. மூன்றாம் உலக நாடுகளின் உயிருள்ள உழைப்பு உலக வளத்துக்கு அளிக்கும் பங்கு பெருமளவு குறைத்து மதிப்பிடப்படுகிறது. 'உலக முதலாளித்துவம்' அல்லது 'புதிய ஏகாதிபத்தியம்' குறித்து தற்போது செல்வாக்கு பெற்றுள்ள மார்க்சிய ஆய்வுரைகளிலும் இதே நிலைதான்.

இந்த ஆய்வறிக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொ.உ.உ), வர்த்தகம் ஆகியவை மூலமாக வெளிப்படும் உற்பத்தி உலகமயமாதல் பற்றி பகுப்பாய்வு செய்வதை தனது வாதத்துக்கு  அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த புள்ளிவிபரங்கள் எதை மறைக்கின்றன என்ற கேள்வியை எழுப்பி, பொதுவாக பருண்மையான புள்ளிவிபரங்கள் என்று கருதப்படுபவை தவறாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்தத் தரவுகளுக்கு அடிப்படையாக இருக்கும் புதியசெவ்வியல் கருதுகோள்கள் மீதான விமர்சனத்தை உருவாக்குகிறது. ஜி.டி.பி அளப்பது ஒரு நாடு எவ்வளவு உற்பத்தி செய்கிறது என்பதை அல்ல அது சந்தையில் எவ்வளவை கைப்பற்றுகிறது என்பதைத்தான் என்ற முடிவுக்கு இந்த ஆய்வுரை வந்தடைகிறது. மூலதனம் உழைப்பைச் சுரண்டுவதை மறைப்பது போலவே, ஏகாதிபத்திய மூலதனம் மூன்றாம் உலக நாடுகளின் உழைப்பை சுரண்டுவதையும் ஜி.டி.பி கணக்குகள் மறைக்கின்றன.

Wednesday, July 14, 2010

புதைகுழியில் அமெரிக்கா!

பொன்னியின் செல்வனில் கோடிக்கரையில் புதைகுழியில் விழும் வந்தியத் தேவன் பூங்குழலியாலும், ரவிதாஸன் ராக்கம்மாவாலும் காப்பாற்றப்படுகிறார்கள்.

அமெரிக்கப் பொருளாதாரம் நிதிநிலை புதைகுழுயில் மாட்டிக் கொண்டிருக்கிறது. கை கொடுக்க யார் வருவார்கள்? ஒரு உலக யுத்தம்???

Wednesday, June 30, 2010

பொருளாதார முடக்கம்??

நோபல் பரிசு பெற்ற பால் குரூக்மேனின் பத்தியிலிருந்து.

(நேற்றைய டெக்கான் குரோனிக்கிளில் வெளிவந்தது.)

பொருளாதாரச் சுணக்கத்திலிருந்து உலக நாடுகளின் பொருளாதாரம் இன்னும் குணமாகவில்லை. அதற்குள் செலவைக் குறைக்கிறேன் என்று அரசின் ஆதரவுத் திட்டங்களை நிறுத்தி விட்டால் அது இன்னொரு சுணக்கத்துக்கு வழி வகுத்து, பெரும் முடக்கத்தில் கொண்டு விடும்.

வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை இன்னும் பெரிதாகவே இருக்கிறது. வேலை வாய்ப்புகள் உருவாகி வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும் வரை அரசுகள் தமது செலவுக் கொள்கைகளைத் தொடர வேண்டும். இல்லை என்றால் பொருளாதாரக் கொள்கை மூலமாக 1930களில் ஏற்பட்டது போன்று பொருளாதார முடக்கத்தில் தள்ளப்பட்டு விடுவோம்.

1930களிலும் தொடர்ச்சியான வீழ்ச்சியாக இருக்கவில்லை. முதல் 2 ஆண்டுகளுக்கு சுணக்கம், அதன் பிறகு ஒரு ஆண்டு வளர்ச்சி, அதன் பிறகு அரசின் தவறான நடவடிக்கைகளால் மீண்டும் வீழ்ச்சி என்று போய் பொருளாதார முடக்கத்தில் அமெரிக்க பொருளாதாரம் கிட்டத்தட்ட 30% சுருங்கியது. வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடியது. ஃபிராங்கிளின் ரூஸ்வெல்டின் தைரியமான புதிய வாய்ப்பு திட்டங்கள் மூலமாக ஆரம்பித்த பொருளாதார மேம்பாடு இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட செலவுகள் மூலம் மீண்டும் வேகம் பிடித்தது.

இப்போதும் நாம் கிட்டத்தட்ட 1930களில் ஏற்பட்ட முதல் மேம்பாடுகளின் கட்டத்தில் இருக்கிறோம். இந்த நேரத்தில் அரசுக் கொள்கைகள் பாதகமாக செயல்படுத்தப்பட்டால், பொருளாதாரம் முடக்கத்துக்குப் போய் ஆயிரக் கணக்கான பேர் வேலையில்லாமல் பல ஆண்டுகள் கழிக்க நேரிடும். பலர் இனிமேல் வேலை செய்யும் வாய்ப்பையே தமது வாழ்க்கையில் இழந்து விடுவார்கள். நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் பேரிழப்பு ஏற்படும்.

இதனைத் தடுக்க அரசாங்கம் தொடர்ந்து பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் செலவினங்களை செய்ய வேண்டும். இப்போது போய் வரவு செலவு சமன் செய்தல், சிக்கன நடவடிக்கைகள் என்பது அரசுகளுக்குப் பொருந்ததாது. தனி நபர்களும், தொழில் நிறுவனங்களும் அந்தப் பாதையில் போகும் போது அரசாங்கம் பற்றாக்குறை நிதித் திட்டத்தின் மூலமாக பொருளாதாரத்துக்கு வளர்ச்சி ஊக்கம் அளிக்க வேண்டும்.

பொருளாதார சுணக்கம் பற்றிய முந்தைய இடுகைகள்

பொருளாதாரச் சுணக்கம் - சில பகிர்வுகள்
கலிஃபோர்னிய தங்க வேட்டையும் தகவல் தொழில் நுட்ப...
உலகப் பொருளாதார நெருக்கடி - 1

Saturday, June 19, 2010

ஒரு வங்கியின் கதை

1993ல் வங்கியாக தொடங்கப்பட்ட ஐசிஐசிஐ நிறுவனம் அடுத்த 15 ஆண்டுகளில் போட்ட ஆட்டம், மேற்கத்திய நிதி நிறுவனங்கள் கண்டு பிடித்த புதிது புதிதான உத்திகளின் மூலம் மக்களின் உழைப்பை (பணத்தை) சுரண்டி, அந்த நிறுவனங்களின் மேலாளர்களும் பங்குதாரர்களும் பெரும் பணம் எடுத்துக் கொண்ட கதையின் ஒரு சிறு வடிவம்.

இந்திய ஒழுங்கு முறை சட்டங்களுக்குள் பெரிய அளவில் தில்லுமுல்லு செய்ய முடியாமல் தப்பித்து விட்டார்கள்.

பொருளாதார சீட்டு அடுக்கு சரிந்த பிறகான சென்ற ஒன்றரை ஆண்டில் ஐசிஐசிஐ வங்கியில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கி ஜூன் 27 தேதியிட்ட பிஸினஸ் இந்தியா ஆங்கில இதழில் அட்டைப்படக் கட்டுரை எழுதியிருக்கிறார்கள்.

அந்தக் கட்டுரையிலிருந்து சில விபரங்கள்:
  • வட்டி வழியாக சம்பாதித்தது, வட்டி அல்லாத வருமானம் இரண்டும் 2009-10ல், 2008-09ஐ விடக் குறைந்து விட்டன.

  • நேரடி விற்பனையாளர்களுக்கு (அதுதான் தெருவெல்லாம் வழி மறித்து கார்டு வித்தாங்களே) செலவழித்த தொகை 2009-10ல் முந்தைய ஆண்டை விட நான்கில் ஒரு பகுதியாகக் குறைக்கப்பட்டது.

  • கடன் கொடுத்த தொகை கிட்டத்தட்ட 15% குறைக்கப்பட்டது. வைப்புத் தொகை 7% குறைந்தது.

  • வாரக்கடன்களின் சதவீதம் கடன் தொகையில் 2.09%லிருந்து 2.12 உயர்ந்தது.
கடனட்டை வியாபாரத்தைப் பற்றி:

ஒரு காலத்தில் குறைந்தது அரை டஜன் கடனட்டை விற்பனையாளர்கள் துரத்தாமல் ஒரு கடைத்தெருவுக்குப் போய் வர முடியாத நிலைமை இருந்தது. உங்களிடம் ஒரு செல்பேசி இருந்தால் கடனட்டை வாங்கும் தகுதி இருப்பதாக எடுத்துக் கொண்டார்கள்.

'இன்றைக்கு மாதத்துக்கு கிட்டத்தட்ட 1000 கடனட்டைகள் வழங்குகிறோம். ஒரு கட்டத்தில் மாதத்துக்கு 2,00,000 அட்டைகள் கூட கொடுத்துக் கொண்டிருந்தோம்.'

சில்லறைக் கடன் (கடனட்டை, தனிநபர் கடன்) கொடுப்பதை கிட்டத்தட்ட நிறுத்தி விட்டார்கள். மொத்த கடன் தொகையில் 49% ஆக இருந்த சில்லறைக் கடன்களை இப்போது 43.6% ஆக குறைத்திருக்கிறார்கள்.

விற்பனைப் பொருளை மையமாகக் கொண்ட அணுகுமுறையை மாற்றி வாடிக்கையாளரை மையமாக வைத்து சேவை வழங்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

'முன்பெல்லாம் எப்படியாவது புதிய வாடிக்கையாளரைக் கொண்டு வந்து விட வேண்டும் என்பதுதான் மந்திரமாக இருந்தது. இப்போது வாடிக்கையாளர் சேவையில் கவனம் செலுத்துகிறோம்.'

Tuesday, February 16, 2010

பொருளாதாரச் சுணக்கம் - சில பகிர்வுகள்

Decoupling என்பது நடந்து, அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் நிகழ்வது இந்திய பொருளாதாரத்தை பாதிக்கவே செய்யாது என்று இருந்தால் ஒழிய இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு கவனமாக இருப்பது மிகவும் தேவை

கலிஃபோர்னிய தங்க வேட்டை யின் வீணாக்கல்களை இன்னும் முழுவதுமாக களைந்து முடிக்காமல் 'இனி எல்லாம் சுகமே' என்று பாட்டு பாட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்க / பன்னாட்டு பெருவங்கிகள். அரசாங்கங்களின் முட்டுக் கொடுப்பால் தப்புக்கு தண்ணீர் குடிக்காமல் தவிர்த்துக் கொண்ட வங்கிகள் மீண்டும் தமது வளமையான பேராசை/சுயநல நிதி நிர்வாக முறைகளுக்கு திரும்ப முயற்சிப்பதாக செய்திகள்.

அமெரிக்கர்கள் 100 டாலர்களுக்கு உழைத்தால் 1 டாலர் கூட சேமிக்காத நிலைமை கடந்த பத்தாண்டுகளில் இருந்தது. சேமிப்பு இல்லை என்றால் புதிய முதலீடுகள் தொழில் முனைவுகள் சாத்தியமாகாது. அமெரிக்கர்களின் வாழ்க்கைக்கு சீனாவும், மற்ற வளரும் நாடுகளும் தமது சேமிப்புகளை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன. சீனாவின் கையில் குவிந்திருக்கும் டாலர் கையிருப்புகள் அதற்கு சாட்சி.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கர்களின் சேமிப்பு வீதம் அதிகரித்திருக்கிறது.
100 டாலர் வருமானத்தில் 95 டாலர்தான் செலவழிக்கிறார்கள். 5 டாலர் சேமிக்கிறார்கள். (சீனாவில் இந்த வீதம் 100க்கு 30 முதல் 40 வரை (யுவான்) சேமிப்பு, இந்தியாவில் 100க்கு 30 ரூபாய் சேமிப்பு).

1990களிலிருந்து அமெரிக்க சேமிப்பு வீதம் எப்படி மாறியிருக்கிறது என்று இங்கே பார்க்கலாம்.

இப்படி அமெரிக்கர்கள் 4% குறைவாகச் செலவழிக்கிறார்கள் என்றால், சந்தை தேவை பெரிதாக குறைந்து விட்டிருக்கும். இந்த சேமிப்பு இன்னும் வளர்ந்து 100க்கு 15 முதல் 20 வரை சேமிப்பு என்ற நிலை வரும்போதுதான் அமெரிக்காவின் பொருளாதார ஆரோக்கியம் சீரடையும். அதற்குள் பொருளாதார உலகின் திட்டங்கள், நடைமுறைகள் எல்லாம் மாறி, புதியதோர் நிதிநிர்வாக, தொழில்/வணிக முறை உருவாகியிருக்க வேண்டும்.

கிட்டத்தட்ட 10% அமெரிக்க செலவழிப்பில் குறைவை, உலகின் பிற பகுதிகள் ஈடு கட்ட வேண்டும் - இந்த செலவு நுகர் பொருட்களிலேயே இருக்க வேண்டும் என்றில்லாமல், புதிய தொழில் நுட்பங்களில் முதலீடு என்ற அளவிலும் இருக்கலாம்.

Tuesday, April 14, 2009

உலகப் பொருளாதார நெருக்கடி - 1

இப்போது நாமெல்லாம் சிக்கிக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடியின் பின்னணி என்ன?

கதையை ஆரம்பத்திலிருந்தே படித்தால்தான் தெரியும்.

பணம் என்பது எப்படி ஆரம்பித்தது?

பண்ட மாற்று முறையில் 'நான் உழைத்து செய்த பொருளை உனக்குத் தருகிறேன், நீ உழைத்து செய்த பொருளை எனக்குத் தா' என்று பரிமாறிக் கொண்டார்கள்.

நான் நெசவு செய்து துணி வைத்திருக்கிறேன். நாளைய சாப்பாட்டுக்கு நெல் வாங்கி வர வேண்டும். விவசாயம் செய்யும் நண்பரின் வீட்டுக்குப் போய் துணியைக் கொடுத்து விட்டு தேவையான நெல்லை வாங்கிக் கொண்டு வர வேண்டும்.

அவருக்கு இப்போது துணி தேவையில்லை என்றால் எனக்கு நெல் கிடைக்காது. இந்த சிக்கலைத் தீர்க்கக் கண்டுபிடித்ததுதான் பணம். துணி விற்று செலாவணியாக பொதுவில் ஏற்றுக் கொள்ளப்படும் பொருளை திரட்டிக் கொள்வேன். நெல் வாங்குவதற்கு அதைக் கொடுத்தால் போதும்.

பண்ட மாற்றும் பரிமாற்றங்களுக்காக பணம் பயன்படுதலும்

தங்கம் பணமாக புழங்க ஆரம்பிக்கிறது. தேவைக்கு மேல் தங்கம் வீட்டில் இருக்கிறது. அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் கொண்டு வைப்பது போல, ஊரின் பொற்கொல்லரிடம் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஏற்பாடுகள் இருக்கின்றன. அவரிடம் கொண்டு தங்கத்தைக் கொடுத்து ஒரு சீட்டை வாங்கிக் கொள்கிறார்கள். அவர் நாணயமானவர். எந்த நேரத்தில் போய் சீட்டைக் காட்டிக் கேட்டாலும் தங்கத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறார். அப்படி பாதுகாப்பாக பணத்தை வைத்திருப்பதற்கு கட்டணத்தை மட்டும் வசூலித்துக் கொள்கிறார்.

தங்க நகையாக இல்லாமல் நாணயமாக வரும் தங்கத்தை தனித்தனியாக வைத்திருக்கத் தேவையில்லை. எல்லா பணத்தையும் சேர்த்து வைத்து கணக்கை மட்டும் இன்னாருக்கு இவ்வளவு தர வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டால் போதும்.

இது வரை எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. பொற்கொல்லர் கொஞ்ச நாள் போக ஒன்றை கவனிக்கிறார்.

வங்கித் தொழிலின் அடிப்படை

நாட்டில் பணப் புழக்கம் அதிகரிப்பதற்கு அச்சடித்து வெளியிடும் நோட்டுகள் மட்டும் காரணம் இல்லை. பெரும்பாலான பண உருவாக்கம் வர்த்தக வங்கிகள் வைப்புத் தொகை சேகரித்து கடன் கொடுப்பதால் உருவாகிறது.

வங்கிகள் இப்படித்தான் பணப் புழக்கத்தை அதிகரிக்கின்றன.

இந்தியாவில் ரிசர்வ் வங்கி இருப்பது போல அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் எனப்படும் மத்திய வங்கி. அங்கும் வைப்புத் தொகையில் ஒரு பகுதியை பாதுகாப்பான அரசாங்க பத்திரங்கள் வாங்கி வைக்க பயன்படுத்த வேண்டும். மீதிப் பகுதியை கடன் கொடுக்க பயன்படுத்தலாம். கடனட்டைகள் மூலமாக வழங்கப்படும் கடன்களும் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் வந்து விடும்.

இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் கண்கட்டி விட்டு தமது ஆதாயத்தை உயர்த்த முற்படுபவர்கள் அதற்கான வழிகளை கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

விளையாட்டுப் பார்வை அரங்கில் எல்லோரும் உட்கார்ந்திருந்தால் வசதியாக மறைக்காமல் ஆட்டத்தைப் பார்க்கலாம். ஒரே ஒருவர் எழுந்து நின்றார் அவருக்கு மட்டும் ஆதாயம். விளையாட்டு நன்றாக தெரியும். அவரைப் பார்த்து மற்றவர்களும் எழுந்து நிற்க ஆரம்பித்து விட்டால், கடைசியில் எல்லோரும் நின்று கொண்டே பார்த்தும் எல்லோரும் இருந்து பார்க்கும் அளவுக்குத்தான் விளையாட்டுத் தெரியும். கூடவே கால் வலிதான் மிஞ்சும்.

அது போல கண்காணிப்பு நிறுவனங்களின் நெறிமுறைகளை ஒரு வங்கி தவிர்க்க முயன்று வெற்றி பெற்று விட்டால் அந்த வங்கியின் ஆதாய வீதம் மளமளவென்று ஏறும். அதில் வேலை பார்க்கும் மேலாளர்களுக்கு கோடிக் கணக்கான டாலர்கள் ஊக்கத்தொகையாக கிடைக்கும். அவர்களுடன் போட்டி போட்டு ஒவ்வொருவராக அந்த வழிகளை கண்டு கொண்டு தாமும் சுற்றிப் போக ஆரம்பிப்பார்கள். கடைசியில் மொத்த அமைப்பும் குலைந்து போவதுதான் நடக்கும்.

Friday, October 31, 2008

பொருளாதாரச் சரிவு - யாருக்கு என்ன பாதிப்பு?

அமெரிக்காவின் கண்மூடித்தனமான ஆட்டத்தின் விளைவுகளை முழு உலகமும் தாங்கிப் பிடிக்க வேண்டியிருக்கிறது. இதில் யாருக்கு எந்த வகையில் பாதிப்புகள் ஏற்படும்?

1. எவ்வளவுதான் பொருளாதார வளர்ச்சி தேக்கமடைந்தாலும், மக்கள் சாப்பிடத்தான் வேண்டும், உடுத்தத்தான் வேண்டும்.

உணவுப் பொருட்கள் மற்றும் ஆடை/அணிகலன்கள் துறையினருக்கு மற்ற சேவைத் துறைகளுடன் ஒப்பிடும் போது நல்ல தொழில் நடக்கும். விவசாயிகள், விவசாய இடுபொருட்கள் விற்பவர்கள், துணி உற்பத்தியாளர்கள், உடை தயாரிப்பவர்கள் கடந்த 10 ஆண்டுகள் பட்ட பாட்டுக்கு பரிகாரமாக நல்ல நிலைக்கு வருவார்கள்.

இந்தத் தொழிலில் இருக்கும் நிறுவனங்களுக்கும் வங்கித் துறையில் ஏற்படும் சரிவால் தொழில் செய்ய கடன் தொகை கிடைக்காமல் போனால் மட்டும் சிக்கல் உண்டாகி விடும்.

2. மதிப்புக் கூடுதல் சேவையாக, உயர்தர உணவு விடுதிகள், விலை உயர்ந்த அணிகலன்கள் கொஞ்சம் இழுத்துப் பிடிக்க ஆரம்பிக்கும்.

3. தகவல் தொழில் நுட்பத் துறையில், திறமை வாய்ந்த ஊழியர்களை கொண்டிருக்கும் பெரிய நிறுவனங்கள் (இன்போசிசு, டாடா, விப்ரோ) தமது தொழில் முறை, சந்தை அணுகல் உத்திகளை வெற்றிகரமாக மாற்றி அமைத்து ஏற்பட்டுள்ள நலிவை தாண்டி வர வாய்ப்புகள் அதிகம். ஆதாய வீதம், வளர்ச்சி வீதம் குறுகிய கால நோக்கில் வெகுவாக மட்டுப்பட்டு விடும்.

4. பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட்டு அவர்களை விடக் குறைந்த விலை என்ற ஆதாயத்தின் மூலம் மட்டும் அமெரிக்காவிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் அவர்கள் செய்யும் அதே மாதிரியான பணிகளை பெற்று நடந்து வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விழித்துக் கொள்ள வேண்டும். தமக்கென்று தனிச் சிறப்பாக சேவை அல்லது பொருளை உருவாக்கிக் கொண்டால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும்.

5. கோடிக்கணக்கான ரூபாய்கள் முதலீட்டில் பளபளக்கும் அடுக்குமாடி கடைகள், உயர்தர தங்கும் விடுதிகள், துணிச்சலான புதிய முயற்சிகளுக்கு முதலீடு கிடைக்காமல் போய் விடும். கட்டிடத் துறையைச் சார்ந்து பங்குச் சந்தையில் தமது பங்குகளை வெளியிட்டுள்ள நிறுவனங்களுக்கு பெருத்த சரிவு ஏற்படும்.

மற்ற நிறுவனங்களைப் போல விலை உயர்வது வரை சும்மா இருப்போம் என்று இருந்து விடவும் முடியாது. ஒவ்வொரு காலாண்டும் வளர்ச்சியைக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும்.

6. ஏற்றுமதித் துறை நிறுவனங்களுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் நிதி நிலைமை மோசமானால் வணிகம் நலிவடைவதை மட்டும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிப்படையில் உறுதியான உற்பத்தி திறன், உயர்ந்த தர நிர்ணயம் இருக்கும் நிறுவனங்கள் இந்த சிரமமான காலத்துக்குப் பிறகு இன்னும் சிறப்படைய முடியும். கொஞ்சம் நோஞ்சான்களான நிறுவனங்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

Tuesday, October 28, 2008

யாருக்கும் வருந்த வேண்டியதில்லை!

ஒரு சின்ன புள்ளி விபரக் கணக்கு - மும்பைப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் மாற்றங்கள்:
ஆதாரம்


1. 5000ஐத் தாண்டியது - ஜனவரி 2000
2. 3000 ஆக இறங்கியது - ஆகத்து 2002
3. மீண்டும் 5000 - டிசம்பர் 2003 (16 மாதங்களில்)
4. 10000ஐத் தாண்டியது - மார்ச்சு 2006 (27 மாதங்களில்)
5. 20000ஐத் தொட்டது - நவம்பர் 2007 (20 மாதங்களில்)

டிசம்பர் 2003லிருந்து 4 ஆண்டுகளில் குறியீட்டு எண் நான்கு மடங்காகியிருக்கிறது. ஆகத்து 2002லிருந்து ஐந்து ஆண்டுகளில் 7 மடங்காகியிருக்கிறது.

அந்த காலகட்டத்தில் "அப்படி என்ன சிறப்பாக நடந்து விட்டது" என்று கேட்டால், 'இந்திய வளர்ச்சி கதை', 'அடிப்படை வலிமை' என்று மாற்றி மாற்றி ஜல்லி அடித்துக் கொண்டிருந்தார்கள். பங்குகளின் விலை ஏற்றத்தின் காரணமாக இன்னும் பலர் வாங்குவதில் இறங்க விலை இன்னும் ஏறியது.

அடிப்படை 'நிறுவனம் ஆண்டுக்காண்டு சாதிக்கும் விற்பனையும் அதன் மூலம் ஈட்டும் உபரித் தொகையும்தான்' அதிலிருந்து வரும் பகிர்வுத் தொகையின் அடிப்படையில்தான் பங்கு விலை இருக்க முடியும். ஒரு சில வார நோக்கில் கூடுதல் குறைவு ஏற்பட்டாலும், ஓரிரு ஆண்டுகள் நோக்கில் அதுதான் ஒரே அடிப்படை. அதைத் தவிர்த்த மற்ற எல்லாம் சூடான காற்றுதான்.

பங்குச் சந்தையில் வாங்கி விற்கப்படும் பங்குகளின் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஆண்டு விற்பனையையும், ஆதாயத்தையும் இரட்டிப்பாக்கினவா? என்று கேட்டிருந்தால் கடைசி இருபது மாதங்களில் 10000 புள்ளிகள் உயர்ந்தது நடந்திருக்காது.

இது 2008ன் கதை மட்டுமல்ல. பங்குச் சந்தை ஆரம்பித்த நாட்களிலிருந்தே 19ம் நூற்றாண்டிலிருந்தே இந்த ஏற்றமும் இறக்கமும் வளமையாகத்தான் இருக்கின்றன.

2008ல் இப்போது நடப்பது நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் உருகி ஓடுதல். இறுக்கமாக பாதுகாப்புப் பட்டியை அணிந்து கொண்டு உழைத்து மட்டும் வரும் பணத்தில் வாழ தயாராகிக் கொள்ள வேண்டியதுதான்.

Tuesday, September 23, 2008

செலாவணி பரிமாற்ற தெரிவு ஒப்பந்தம்

பணம் வருவது உறுதியாக இருந்தால் முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். பணம் வருவது உறுதியில்லாமல் இருந்தால் என்ன செயவது?

ஒரு ஏற்றுமதியாளர் 3 மாதங்களுக்குள் முந்திரிப்பருப்பு ஏற்றுமதி செய்து அதற்கான பணத்தை (10000 டாலர்) டாலர்களில் பெறுவதாக எதிர்பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஏற்றுமதிக்கான உடன்பாடு இவருக்குக் கிடைப்பது 2 மாதம் கழித்துதான் உறுதியாகும். இன்றைக்கு உடன்பாட்டுக்கான விலையை அனுப்பி வைக்க வேண்டும்.

உள்ளூர் சந்தையில் முந்திரிப் பருப்பை ரூபாய்க்கு வாங்கி டாலருக்கு விற்க வேண்டும். இன்று 1 டாலர் = 46 ரூபாய்கள் செலாவணி வீதம் என்ற கணக்கில் விலை நிர்ணயிக்கிறார். இந்த ஆர்டர் கிடைத்து ஏற்றுமதி செய்து விட்டால் வருமானம் வரும், டாலரை 46 ரூபாய் வீதத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு வேளை ஆர்டர் கிடைக்கா விட்டால், மாற்றுவதற்கு டாலர் இருக்காது.

இந்த நிலையில் Forward ஒப்பந்தம் என்ற முன்பேர ஒப்பந்தம் சரிப்படாது. ஆர்டர் கிடைக்காமல் போய், டாலரின் மதிப்பு ஏறி விட்டால், (1 டாலர் = 50 ரூபாய்) இவர் ஒப்பந்தப்படி 10000 டாலர்களை 1 டாலர் = 46 ரூபாய் என்ற வீதத்தில் விற்றே தீர வேண்டும். அதற்கு சந்தையில் 50 ரூபாய் வீதத்தில் டாலர் வாங்கி 46 ரூபாய்க்கு விற்க வேண்டியிருக்கும்.

Options எனப்படும் தெரிவு ஒப்பந்தத்தில் விருப்பப்பட்டால் விற்கலாம் என்ற தெரிவு இருக்கும். 90 நாட்களுக்குப் பிறகு 1 டாலர் = 46 ரூபாய்கள் என்ற வீதத்தில் 10000 டாலர்களை விற்கும் தெரிவு, ஒப்பந்ததாரருக்குக் கிடைக்கிறது. அவர் விரும்பா விட்டால் விற்காமல் இருந்து விடலாம்.

இந்த தெரிவு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கான கட்டணங்கள் முன்பேர ஒப்பந்தங்களை விட அதிகமாக இருக்கும்.

Monday, September 22, 2008

முன்பேர ஒப்பந்தம்

forward trading என்பதை முன்பேர வணிகம் என்று வளர் தொழில் பத்திரிகையில் கையாளுகிறார்கள். எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தம் என்பதை விட முன்பேர ஒப்பந்தம் கைக்கடக்கமாக இருக்கிறது!

இது போன்று முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்வதால் என்ன நடக்கும். ஒரு நடைமுறை உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.

மாதா மாதம் 10000 டாலர்கள் வருமானம் பெறும் ஒருவர் மாதம் 5000 டாலர்களை 1 டாலர் = 46 ரூபாய்கள் என்ற வீதத்தில் விற்பதாக முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

1. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர்=46 ரூபாய்
ஒப்பந்தத்துக்கான கட்டணத் தொகை வீணாக வங்கிக்குக் கொடுத்திருக்கிறார். ஒப்பந்தமே இல்லாமல் இருந்தாலும் சந்தையில் டாலரை விற்று 46 ரூபாய் பெற்றிருக்கலாம்.

2. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர் = 48 ரூபாய்
ஒப்பந்தம் செய்து கொண்டதால் 46 ரூபாய்க்கே டாலர்களை விற்றுத் தொலைக்க வேண்டிய கட்டாயம். ஒப்பந்தம் செய்யாமல் இருந்திருந்தால் 5000 டாலர்களுக்கு, 10000 ரூபாய்கள் கூடுதலாக கிடைத்திருக்கும்.

3. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர் = 40 ரூபாய்
ஒப்பந்தம் செய்து கொண்டதால் 46 ரூபாய் கிடைத்து விடும். ஒப்பந்தம் இல்லாமல் இருந்திருந்தால் 5000 டாலர்களுக்கு 30000 ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருக்கும்.

முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு
அ. டாலர் வருமானம் வருவது உறுதியாக இருக்க வேண்டும். வருமானத்தின் அளவோ நேரமோ உறுதியின்றி இருந்தால், முன்பேர ஒப்பந்தம் ஒத்து வராது.
ஆ. நாம் எதிர்பாராத திசையில் செலாவணி வீதம் போனால், அதை நினைத்துக் குழப்பிக் கொள்ளாத மனநிலை வேண்டும்.

Friday, September 19, 2008

எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தம்

போன வாரம் ஒரு நாள். வெளி நாட்டில் வேலை பார்க்கும், தற்போது விடுமுறையில் வந்திருக்கும் உறவினர் ஒருவர் காலையில் எகனாமிக் டைம்ஸ் நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தார்.

"என்ன! டாலர் 46 ரூபாய் ஆகி விட்டதா." உடனேயே அருகிலிருந்த அவரது மனைவியிடம், "கையிலிருக்கும் டாலரை எல்லாம் இன்னைக்கே ரூபாயா மாத்திரலாம்" என்றார்.

ஒரு டாலருக்கு 43, 44 என்று கபடி ஆடிக் கொண்டிருந்த நாணய மாற்று வீதம் ஒரு வாரத்துக்குள் 5%க்கு மேல் மாறி ஒரு டாலருக்கு 46 ரூபாய், அடுத்த நாளே 46.90 ரூபாய் என்று கூட ஆகி விட்டிருந்தது.

இந்த வரைபடத்தைப் பார்த்தால் டாலர் ரூபாய் வீதத்தின் ஊசலாட்டம் புரியும்.
http://ichart.finance.yahoo.com/1y?usdinr=x

மேலே சொன்ன உரையாடலின் பின்னணி என்ன?

'திடீரென்று டாலரின் மதிப்பு ஏறியிருக்கிறது. இதே நிலையில் இன்னும் பல நாட்கள் தாக்குப் பிடிக்காது. மீண்டும் அதன் மதிப்பு இறங்குவதற்கு முன்னே நம்ம கையில் இருப்பதை ரூபாயாக மாற்றிக் கொள்ளலாம்'. அதாவது வரும் நாட்களில் டாலரின் மதிப்பு குறையும் என்று இவர் நம்புகிறார்.

பொதுவாக, டாலரில் சம்பளம் வாங்குபவர்கள், டாலருக்கு பொருள் ஏற்றுமதி செய்பவர்கள் - வருங்காலத்தில் டாலரில் வருமானம் கிடைக்க இருப்பவர்கள் - இந்தக் கோணத்தில் நினைக்கத் தலைப்படுவார்கள். 'இனி மேல் ஏறா விட்டாலும் பரவாயில்லை. இப்போ இருக்கிற மதிப்பில் இருந்தாலே நமக்கு லாபம்தான்'

இதே செய்தியைப் படிக்கும் இன்னொருவர் வேறு மாதிரி நினைக்கலாம். 'என்னடா, ஒரு டாலருக்கு 46 ரூபாய் ஆகி விட்டது. இப்படியே போனால், இன்னும் ஓரிரு மாதங்களில் ஒரு டாலருக்கு 50 ரூபாய் என்று ஆகி விடலாம்.' அதாவது வரும் நாட்களில் டாலரின் மதிப்பு தொடர்ந்து ஏறும் என்று அவர் நம்புகிறார்.

டாலரில் பணம் கொடுக்க வேண்டியிருப்பவர்கள் - இறக்குமதி செய்பவர்கள், வெளி நாட்டிலிருந்து கடன் வாங்கியிருப்பவர்கள் - இப்படி கவலைப்படுவார்கள். வரும் நாட்களில் டாலரின் மதிப்பு இன்னும் ஏறி விட்டால் நமக்கு செலவு அதிகமாகி இழப்பு ஏற்படும். இதே மதிப்பில் நமக்கு டாலர் கிடைத்தால் போதும் என்று நினைப்பார்கள்.

இப்படி டாலர் எதிர்கால வரவு இருப்பவர்கள் ஒரு புறமும் தேவை இருப்பவர்கள் மறுபுறமும் இருப்பவர்களை இணைப்பது எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தம்.

ஏற்றமதி செய்பவரைப் பொறுத்தவரை

'1 டாலருக்கு 44 ரூபாய் கணக்கில் விலை நிர்ணயித்து 10,000 டாலர் மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்கிறேன். வாடிக்கையாளரிடமிருந்து டாலர் எனக்கு வந்து சேர 1 மாதம் பிடிக்கலாம்.

அப்போது 1 டாலருக்கு 46 ரூபாய் வீதத்தில் மாற்ற முடிந்தால் 4,60,000 ரூபாய்கள் கிடைக்கும். ஒரு வேளை விலை சரிந்து 42க்கோ, 40க்கோ போனால் பேரிழப்பு (4,.4 லட்சம் ரூபாய் வர வேண்டும் என்ற கணக்கு தவறிப் போய் 4.2 லட்சம் அல்லது 4 லட்சம்தான் கையில் கிடைக்கும்).

பேசாமல், ஒரு மாதம் கழித்து 46 ரூபாய்க்கு 1 டாலர் என்று விற்பதாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்.'

யாரிடம் இவர் ஒப்பந்தம் போடுவார்?

இறக்குமதி செய்பவர்
'10,000 டாலர் மதிப்பிலான பொருளை வாங்க ஆர்டர் கொடுத்திருக்கிறேன். ஒரு மாதம் கழித்து பணம் கொடுக்கும் நேரம் வரும் போது டாலரிம் மதிப்பு 50 ரூபாய் என்று ஆகி விட்டால் 5 லட்சம் கொடுக்க வேண்டி வரும். இதே 46 ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் 4.6 லட்ச ரூபாய்களில் வேலை முடிந்து விடும்.'

இப்படி இரண்டு பேரும் 46 ரூபாய்க்கு ஒரு மாதம் கழித்து டாலர்களை பரிமாறிக் கொள்வதாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். ஆங்கிலத்தில் Forward Contract எனப்படும் எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படை இதுதான்.

நடைமுறையில் ஏற்றுமதியாளரும் இறக்குமதியாளரும் நேரடியாக ஒப்பந்தம் போடுவதில்லை. இடைத் தரகர்களாக வங்கிகள் இருப்பார்கள்.

Monday, August 4, 2008

பணமும் பொதுவுடமையும்

சரி பணம் என்றால் என்ன? என் பையில் 100 ரூபாய் இருக்கிறது என்றால் அதன் பொருள் என்ன?

பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம். உலகில் பணம் என்ற கோட்பாடே இல்லை. பணம் என்பது மனிதன் உருவாக்கியதுதானே!

ஆரம்ப உலகில் காட்டில் தனியாக ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பசித்தால் போய் மரத்தில் காய்த்துத் தொங்கும் பழங்களைப் பறித்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான். அவர் ஒரு நாள் இன்னொருவரைப் பார்க்கிறார். இரண்டாமவர் தினமும் காலையில் எழுந்து சின்ன விலங்குகளை வேட்டையாடி சாப்பிடுகிறார்.

முதலாமவருக்கு தினமும் பழம் சாப்பிட்டு சாப்பிட்டு சலிப்பாக இருக்கிறது. ஆனால் வேட்டையாடுவதற்கான நுணுக்கங்களும், திறமையும் கற்றுக் கொண்டிருக்கவில்லை. இரண்டாமவருக்கு எந்த இடத்தில் நல்ல பழம் கிடைக்கும் எப்படிப் பறிப்பது என்றெல்லாம் விபரங்கள் தெரியாது.

இருவரும் தம்மிடம் இருப்பதில் ஒரு பகுதியை அடுத்தவருக்குக் கொடுக்கிறார்கள். இரண்டு பேருக்கும் பழங்களும் கிடைத்து விட்டன, இறைச்சியும் கிடைத்து விட்டன. இப்போது கை மாறிய பொருட்கள் பழங்கள் மற்றும் இறைச்சி.

இப்போது மூன்றாவதாக ஒருவர் வருகிறார். ஒல்லியான உருவம், ஊதினால் பறந்து விடுவது போன்ற உடல் வாகு. மென்மையான முகம். அவர் கைகளில் பூங்கொத்துகள். அவர் பூக்களின் இதழ்களைச் சாப்பிட்டுதான் வாழ்ந்து வருகிறார். மூன்றாமவர் இந்தப் பகுதிக்கு வந்தவுடன் ஏற்பட்ட நறுமணத்தை உணர்ந்த முதல் இரண்டு நண்பர்கள் கொஞ்சம் பூக்களை வாங்கி வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

மூன்றாமவருக்கு அந்த நறுமணம் கமழும் பூக்கள் கிடைக்கும் இடம் தெரியும். அவரிடம் பூக்களை வாங்கிக் கொண்டு முதலாமவர் பழங்களையும் இரண்டாமவர் இறைச்சியும் கொடுக்கிறார்கள். இப்போது 3 பொருட்கள் 3 பேருக்கும் கிடைத்து விட்டன. மூன்று வகையான பரிமாற்றங்கள். பழம் - இறைச்சி, பழம் - பூ, இறைச்சி - பூ

மீண்டும் தாவி தற்காலத்துக்கு வந்து விடுவோம். இந்த மூன்று பரிமாற்றங்களுக்கும் பொதுவாக என்ன இருக்கும்? பணம். நான் பரிமாறிக் கொள்வதில் பெரும்பாலும் பணமும் இடம் பிடித்து விடுகிறது. பழம் விற்பவர் பழம் தேவைப்படுபவரிடமிருந்து பணம் பெற்றுக் கொள்கிறார். பூ தேவைப்படுபவர் தான் விற்று சம்பாதித்த பணத்தைக் கொடுத்து பூக்களைப் பெற்றுக் கொள்கிறார்.

பணம் என்றால் என்ன?

மீண்டும் ஆரம்ப கால மூன்று நண்பர்களிடம் போவோம். அவர்கள் பணம் என்று எதையும் தெரிந்திருக்க மாட்டார்கள். அவர்களும் பரிமாற்றங்கள் செய்து கொண்டார்கள். அந்த மூன்று பரிமாற்றங்களையும் பொதுப்படையாக அளக்க எதை காரணியாக வைத்துக் கொள்ளலாம்? அதுதான் பணம்.

பழம் தேவைப்படுபவர் கொஞ்சம் முனைந்தால், தேடிப்பிடித்து மரத்தில் ஏறி உராய்ந்து பழங்கள் பறித்துக் கொண்டிருக்கலாம். இறைச்சி வேண்டுபவரும் ஓடும் விலங்கு ஒன்றைத் துரத்தி ஓடி பல தோல்விகளுக்குப் பிறகு ஒன்றைப் பிடிப்பதில் வெற்றி கண்டிருக்கலாம்.

அவரிடம் பழத் தோட்டம் இருந்தது, இவரிடன் முயல் பண்ணை இருந்தது என்பதால் பரிமாற்றம் ஆரம்பிக்கவில்லை.

எளிமையான அந்தக் காலத்தில் பரிமாற்றத்தின் அடிப்படை, பொருள் அல்லது சேவையை செய்வதற்குத் தேவையான அறிவு, திறமை, உழைப்பு. மிகச் சிக்கலான ஆயிரக்கணக்கான பரிமாற்றங்களின் அடிப்படையும் மனித அறிவு, திறமை, உழைப்புதான்.

'உனக்கு இருக்கும் பழம் கிடைக்கும் இடத்தைப் பற்றிய அறிவு, பழம் பறித்துக் கொண்டு வந்த உழைப்பு இவற்றை நான் வாங்கிக் கொண்டு என்னுடைய பூக்கள் பற்றிய அறிவு, அவற்றைச் சரிவரப் பறித்து கொண்டு வந்த உழைப்பை மாற்றாகக் கொடுக்கிறேன்.'

இதுதான் மார்க்சின் கோட்பாடு. எல்லா மதிப்பும் உழைப்பிலிருந்துதான் உருவாகின்றன. இயற்கை வளங்கள் எல்லோருக்கும் பொதுவாக இருந்தால் அதிகமாக உழைப்பவர் அதிகமான மதிப்பைப் பெறுவார்கள். சோம்பேறிகள் செல்வந்தர்களாக இருப்பது அவர்கள் வளங்களை வளைத்துப் போட்டுக் கொள்வதால்தான். எல்லாவற்றையும் பொதுவில் வைத்து விடுவதுதான் இதற்குத் தீர்வு என்பது கம்யூனிசம்.

அப்படிச் சேர்த்து வைத்த சொத்துகளை வைத்துக் கொண்டு முதலாளிகள் தொழிலாளிகளை சுரண்டுகிறார்கள். தொழிலாளிகள் கொடுக்கும் உழைப்பின் முழு மதிப்பையும் கொடுக்காமல் உபரியை தாமே தக்க வைத்துக் கொண்டு இன்னும் சுரண்டுவதற்கான ஆதாயத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

Thursday, March 13, 2008

தள்ளாடுகிறதா பொருளாதாரம்

இந்தியப் பொருளாதரத்தின் தொழில் துறை வளர்ச்சி வீதம் 2008 ஜனவரி மாதத்தில் 5.3% ஆக குறைந்தது. 2007ம் ஆண்டில் இதே மாதத்தில் வளர்ச்சி வீதம் 11.6% ஆக இருந்தது.

அதாவது 2006ம் ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடும் போது 2007ல் 11.6% வளர்ச்சி இருந்தது. 2007லிருந்து 2008ல் வளர்ச்சி 5.3% ஆக இருந்தது (இது கூட வளர்ச்சிதான், ஆனால் வீதம் குறைவு).

சுரங்கத் துறை, பொது உற்பத்தி, மின் உற்பத்தி, நுகர்பொருட்கள், வீட்டு பயன்பாட்டுக் கருவிகள், முதலீட்டு இயந்திரங்கள் என்று வெவ்வேறு துறைகளின் உற்பத்தி மதிப்புக்கு குறிப்பிட்ட விகிதாச்சாரம் கொடுத்து ொழில் துறை வளர்ச்சி குறியீட்டு எண் என்பதை நிர்ணயித்துக் கொள்கிறார்கள். இந்தக் குறியீட்டு எண்ணின் வளர்ச்சி அல்லது தேய்வுதான் உற்பத்தித் துறை மாற்றம் என்று சொல்கிறார்கள்.

இந்த குறியீட்டு எண் 1993-94ம் ஆண்டில் 100 ஆக இருந்ததாக வரையறுத்துக் கொண்டார்கள்.

சுரங்கத் துறை என்பது நிலக்கரி, தாதுப் பொருட்கள் முதலான இயற்கை வளங்களைத் தோண்டி எடுக்கும் பணியைச் செய்வது

முதலீட்டு இயந்திரங்கள் உற்பத்தியில் ஏற்படும் மாற்றம் உன்னிப்பாக கவனிக்கப் படும். ஒரு மாதத்தில் இயந்திரங்களில் முதலீடு குறைகிறது என்றால் அடுத்தடுத்த மாதங்களில் மற்ற பொருட்களின் உற்பத்தி குறையும் என்று கணக்குப் போடலாம். முதலீடு அதிகமானால்தான் உற்பத்தித் திறன் அதிகமாகி உற்பத்தி அளவும் அதிகரிக்கும்.

அதனால் இயந்திரங்களின் உற்பத்திக் குறைவு அதிகமான கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்து பிசினஸ் லைன் நாளிதழில் செய்தி