Thursday, March 13, 2008

தள்ளாடுகிறதா பொருளாதாரம்

இந்தியப் பொருளாதரத்தின் தொழில் துறை வளர்ச்சி வீதம் 2008 ஜனவரி மாதத்தில் 5.3% ஆக குறைந்தது. 2007ம் ஆண்டில் இதே மாதத்தில் வளர்ச்சி வீதம் 11.6% ஆக இருந்தது.

அதாவது 2006ம் ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடும் போது 2007ல் 11.6% வளர்ச்சி இருந்தது. 2007லிருந்து 2008ல் வளர்ச்சி 5.3% ஆக இருந்தது (இது கூட வளர்ச்சிதான், ஆனால் வீதம் குறைவு).

சுரங்கத் துறை, பொது உற்பத்தி, மின் உற்பத்தி, நுகர்பொருட்கள், வீட்டு பயன்பாட்டுக் கருவிகள், முதலீட்டு இயந்திரங்கள் என்று வெவ்வேறு துறைகளின் உற்பத்தி மதிப்புக்கு குறிப்பிட்ட விகிதாச்சாரம் கொடுத்து ொழில் துறை வளர்ச்சி குறியீட்டு எண் என்பதை நிர்ணயித்துக் கொள்கிறார்கள். இந்தக் குறியீட்டு எண்ணின் வளர்ச்சி அல்லது தேய்வுதான் உற்பத்தித் துறை மாற்றம் என்று சொல்கிறார்கள்.

இந்த குறியீட்டு எண் 1993-94ம் ஆண்டில் 100 ஆக இருந்ததாக வரையறுத்துக் கொண்டார்கள்.

சுரங்கத் துறை என்பது நிலக்கரி, தாதுப் பொருட்கள் முதலான இயற்கை வளங்களைத் தோண்டி எடுக்கும் பணியைச் செய்வது

முதலீட்டு இயந்திரங்கள் உற்பத்தியில் ஏற்படும் மாற்றம் உன்னிப்பாக கவனிக்கப் படும். ஒரு மாதத்தில் இயந்திரங்களில் முதலீடு குறைகிறது என்றால் அடுத்தடுத்த மாதங்களில் மற்ற பொருட்களின் உற்பத்தி குறையும் என்று கணக்குப் போடலாம். முதலீடு அதிகமானால்தான் உற்பத்தித் திறன் அதிகமாகி உற்பத்தி அளவும் அதிகரிக்கும்.

அதனால் இயந்திரங்களின் உற்பத்திக் குறைவு அதிகமான கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்து பிசினஸ் லைன் நாளிதழில் செய்தி

2 comments:

வவ்வால் said...

மாசி,
//அதனால் இயந்திரங்களின் உற்பத்திக் குறைவு அதிகமான கவலையை ஏற்படுத்தியுள்ளது.//

கவலையை விடுங்க , அதான் மென்பொருள் துறை(சேவைனு சொன்னா சண்டைக்கு வருவாங்க) இருக்குல்ல அவுங்க தான் இந்தியாவிலே அதிகம் வருமானம் ஈட்டித்தராங்களாம், அவங்க கட்டுர வருமான வரியை வச்சே கிராமத்துல இருக்க குப்பனும் சுப்பனும் சோறு சாப்பிடுறாங்களாம், எனவே மற்ற துறை வளரலைனாலும் மென்பொருள் ஒன்றே இந்தியாவை காப்பாத்திடும்னு நிறைய வலைப்பதிவு "பொருளாதார அறிஞர்கள்" சொல்லிக்கீறாங்கோ எனவே இந்திய பொருளாதாரம் தள்ளாடாது :-))

நீங்கதான் சரக்கடிச்சுட்டு தள்ளாடுவதாக சொன்னாலும் சொல்வாங்க :-))

மா சிவகுமார் said...

வவ்வால்,

ஐந்து விரலும் சேர்ந்துதானே ஒண்ணா செயல்பட முடியும் :-). விவசாயமும் வளரணும், தொழில் துறையும் வளரணும், சேவைத் துறையும் வளரணும். ஒன்றை ஒன்று சார்ந்துதான் எல்லாம் இருக்கின்றன.

விவசாய மற்றும் உற்பத்தித் துறைகளில் உற்பத்தித் திறன் வெகுவாக அதிகரிக்கும் போது குறைவான சதவீதத்தினர் அந்தத் துறைகளில் ஈடுபட்டே அனைவருக்கு சாப்பாடும் பொருட்களும் செய்து கொடுத்து விட முடியும். பெரும்பான்மை மக்கள் சேவைத் துறைகளில் ஈடுபடலாம்.

அப்போதும் அந்த குறைவான சதவீதத்தினரின் முக்கியத்துவம் அதிகமாகத்தான் இருக்க வேண்டும்.

உழுவார் உலகத்துக்கு ஆணி.

அன்புடன்,
மா சிவகுமார்