Tuesday, March 11, 2008

வலைப்பதிவு மூலம் புரட்சி

இன்றைய (மார்ச்சு 11, 2008) எகனாமிக் டைம்ஸ் நாளிதழின் சென்னை பதிப்பில் 15ம் பக்கம் வெளியாகியுள்ள மைக்ரோசாப்டு நிறுவனத்தின் மனிதவளத் துறைத் தலைவர் லிசா பிரம்மலின் பேட்டிக் கட்டுரையில் தெரியும் தகவல்கள்.
  • 1987ல் மைக்ரோசாப்டு நிறுவனத்தில் 4500 பேர் பணியாற்றினார்கள். இப்போது 85,000 பேர் இருக்கிறார்கள்.

  • உலகெங்கும் இருக்கும் நிறுவன ஊழியர்களுடன் தொடர்பு வைத்திருக்க லிசா வலைப்பதிவு ஒன்றில் எழுதுகிறார்

  • தினமும் 1 மணி நேரம் எழுதவும், 3-4 நான்கு மணி நேரம் பின்னூட்டங்களுக்கு மறுமொழி அளிக்கவும் செலவிடுகிறார்.

  • மைக்ரோசாப்டு இந்தியாவில் 5000 பேர் பணிபுரிகிறார்கள்.
கூகுளின் அடித்தாடல் ஆரம்பித்த கட்டத்தில், 2005ல் பொறுப்பேற்ற பிரம்மல், ஊழியர்களை ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்க வைக்கும் forced ranking system முறையை மாற்றுவதில் ஈடுபட்டிருக்கிறார்.

4 comments:

வசந்தன் said...

உண்மைதான்.

உலகெங்கும் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் கூட தங்களுடைய உயர் அதிகாரிகளை வலைப்பூக்களை வைத்துக்கொள்ள தூண்டுகின்றன. அவர்களைப் பொருத்தவரை இதுவும் ஒரு விளம்பர யுக்தி.

ஆனால் வலைப்பூக்கள் மூலம் நிறுவனத்திற்கு முற்றிலும் தொடர்பில்லாத நபர்களிடமிருந்தும் கிடைக்கும் feedback தங்களுடைய செயல்பாட்டை கூட்டுகின்றன என்றும் இத்தகைய நிறுவனங்கள் நினைப்பதால் கார்ப்பரேட் வலைப்பூக்கள் பிரபலமடைந்து வருகின்றன.

மா சிவகுமார் said...

//நிறுவனத்திற்கு முற்றிலும் தொடர்பில்லாத நபர்களிடமிருந்தும் கிடைக்கும் feedback தங்களுடைய செயல்பாட்டை கூட்டுகின்றன //

அந்தப் பின்னூட்டங்கள் மிக முக்கியமானவை. நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கும் மற்றவர்களின் எண்ணங்கள் நிறுவனங்களுக்கும் வந்து சேர வலைப்பதிவுகள் ஒரு நல்ல ஊடகம்.

அன்புடன்,
மா சிவகுமார்

மருதநாயகம் said...

வணக்கம் தல! சம்மந்தம் இல்லாத பின்னூட்டம் போடறதுக்கு மன்னிக்கணும். நம்ம சந்தோஷ் ஒரு பதிவு எழுதி இருக்காரு. அதுல உங்களை பற்றி குறிப்பிட்டு நான் ஒரு பின்னூட்டம் போட்டிருக்கேன். கொஞ்சம் வந்து உங்கள் கருத்த சொல்லிட்டு போங்க, ப்ளீஸ்

மருதநாயகம் said...

வணக்கம் தல! சம்மந்தம் இல்லாத பின்னூட்டம் போடறதுக்கு மன்னிக்கணும். நம்ம சந்தோஷ் ஒரு பதிவு எழுதி இருக்காரு. அதுல உங்களை பற்றி குறிப்பிட்டு நான் ஒரு பின்னூட்டம் போட்டிருக்கேன். கொஞ்சம் வந்து உங்கள் கருத்த சொல்லிட்டு போங்க, ப்ளீஸ்

http://santhoshpakkangal.blogspot.com/2008/03/hr-policy.html