Saturday, May 5, 2007

எங்கு பயன்படும்? (தோலின் கதை - 11)

எஃகுத் தொழில், எண்ணெய் சுத்திகரிப்பு, உணவுப் பொருள் பதப்படுத்துதல், துணித் துறை போன்றவை போல இயற்கை விளைபொருளை எடுத்து, வேதியியல், உயிரியியல், இயந்திர மாற்றங்களின் மூலம் ஒரு பயனுள்ள பொருளாக மாற்றும் முறைகளை (processing) பயன்படுத்துகிறது தோல் பதனிடுதல்.

தோலை எடுத்து பல்வேறு பொருட்களைச் செய்யும் பணி, இரும்புத் தகடுகளை அடிப்படையாகக் கொண்டு ஊர்தி செய்தல், துணியை வெட்டி ஆடை தைத்தல், பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து பொம்மைகள் செய்தல் போன்ற பல பகுதிகளை ஒன்று சேர்த்து மக்களுக்குப் பயன்படும் பொருளை உருவாக்குவதான (assembling) முறை உற்பத்தி பாணியைப் பின்பற்றுகிறது.

தோல் எங்கெங்கு பயன்படுகிறது?

  • காலணிகள் செய்வதற்கு,
  • குளிர் காலங்களில் அணியப்படும் தோல் மேலாடைகள் செய்ய
  • தோல் பை, பணப்பை, இடுப்புப் பட்டை, செல்பேசி உறை, பயணப் பெட்டிகள் என்று சிறு பொருட்கள் செய்ய

  • வீட்டு பயன்படு பொருட்களான சொகுசு இருக்கைகளின் மேல் உறையாக,
  • கார்களின் உட்புறத்தில் இருக்கைகள், பக்க கதவுகள், ஓட்டும் வளையம் போன்றவற்றின் மேல் உறையாக

  • பிளாஸ்டிக் பொருட்களின் வளர்ச்சிக்கு முன்பு, இயந்திரங்களில் உராய்வைத் தடுக்கும் வளையங்களாக,
  • சுற்றும் சக்கரங்களை இணைக்கும் பட்டிகளாகத் தோல் பயன்பட்டது.

  • குதிரையின் மீது உட்கார சேணங்கள்,
  • பெட்ரோலிலிருந்து நீரை முற்றிலும் உறிந்து நீக்க உதவும் சிறப்பு வகை தோல் என்று சிறிதளவு பயன்பாடுகளும் உண்டு.

2 comments:

வடுவூர் குமார் said...

பட்டியல் நன்றாக இருக்கு,ஆனால் நீளம் குறைவாக இருக்கு.

மா சிவகுமார் said...

அவ்வளவுதான் தோல் கிடைக்கிறது. பழைய காலத்தில் பயன்பட்ட பல இடங்களில் பிளாஸ்டிக் புகுந்து கொண்டிருக்கிறது. :-)

அன்புடன்,

மா சிவகுமார்