Tuesday, May 1, 2007

இயற்கையை மாற்றுதல் (தோலின் கதை - 3)

பச்சைத் தோலை சந்தையிலிருந்து திரட்டி வருவதுதான் தோல் துறையில் முதல் வேலை என்று பார்த்தோம். பச்சைத் தோலை அப்படியே காலணியோ, தோல் சட்டையோ, தோல் பையோ செய்ய ஏன் பயன்படுத்த முடியாது?
  • பச்சைத் தோல் நீர் நிறைந்தது (ஏறக்குறைய எழுபது சதவீதம்). காய வைத்து இந்த நீரை நீக்கி விட்டால் தோல் விறைப்பாகவும் மொடமொடப்பாகவும் ஆகி விடும்.
  • அப்படியே விட்டு விட்டால், பாக்டீரியா முதலான நுண்ணுயிரிகள் பச்சைத் தோலைத் தாக்கி அழுகச் செய்கின்றன. தோலை குளிர்பதனப் படுத்தியோ, காய வைத்தோதான் இதைத் தடுக்க முடியும். இந்த நிலையில் பொருட்கள் செய்வது முடிந்த மாதிரிதான்!!
  • விலங்கு இறந்த பிறகு அதன் உடலில் இருந்து நீக்கப்பட்ட தோலில் இரத்தம், நிணம், சாணம் போன்ற மாசுப் பொருட்களும் முடி, சதை போன்ற தேவையில்லாத பொருட்களும் ஒட்டி உள்ளன.
பொருள்கள் செய்ய பயன்படுத்த்ப்பட வேண்டுமானால் தோல்
  • உலர்ந்ததாகவும் வளையும்படியுமாகவும் இருக்க வேண்டும்.
  • நுண்ணுயிர்களால் தாக்கப்படக் கூடாது.
  • தேவைப்படும், நிறம், மென்மைத் தன்மை மற்றும் பிற குணங்கள் கொண்டிருக்க வேண்டும்.
தோல் பதனிடுதல் மேற்சொன்ன மாற்றங்களை கொண்டு வருகிறது. தோல் பதனிடும் தொழிலின் முதல் பதப்படுத்தல் தோலை பாக்டீரியா தாக்குதலுக்கு தடுப்பு ஏற்படுத்துகிறது.

10 comments:

Unknown said...

தோல் உபயோகிப்பாளர்களுக்கும் சாதாரண வாசகனுக்கும் பயனுள்ள தகவல்கள்.
நன்றி சிவா!

மா சிவகுமார் said...

நன்றி பலூன் மாமா,

இனிமேல் இன்னும் கரடுமுரடான தகவல்கள் காத்திருக்கின்றன. :-)

அன்புடன்,

மா சிவகுமார்

தென்றல் said...

'தோலை உரிக்கிறது தான' ரொம்ப எளிது நினைச்சேன்...

'ரொம்ப' விசயங்கள் இருக்கு...!
வித்தியாசமான தொடர்தான், சிவகுமார்!!

மா சிவகுமார் said...

வணக்கம் தென்றல்,

நுட்பத்தையும், மேலாண்மையையும் கலந்து எழுத எண்ணம்.

எனக்குத் தெரிந்து உலகிலேயே இந்தக் கோணத்தில் எழுதப் பட்ட தோல் துறை பற்றிய முதல் படைப்பாக இருக்கும். தமிழிலிருந்தும் பிற நாட்டார் மொழி பெயர்த்துச் செல்லும்படி படைப்போமே :-)

அன்புடன்,

மா சிவகுமார்

தென்றல் said...

/எனக்குத் தெரிந்து உலகிலேயே இந்தக் கோணத்தில் எழுதப் பட்ட தோல் துறை பற்றிய முதல் படைப்பாக இருக்கும். தமிழிலிருந்தும் பிற நாட்டார் மொழி பெயர்த்துச் செல்லும்படி படைப்போமே :-)
/

வாழ்த்துக்கள், சிவகுமார்!

மா சிவகுமார் said...

தென்றல்,

கொஞ்சம் திமிரான எண்ணமதான் :-). வாழ்த்துக்கு நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

வடுவூர் குமார் said...

இதையெல்லாம் படிக்க அல்லது தேவைப்படுபவர்கள் பக்கம் கொண்டு செல்ல ஏதாவது செய்யவேண்டும்.

மா சிவகுமார் said...

//இதையெல்லாம் படிக்க அல்லது தேவைப்படுபவர்கள் பக்கம் கொண்டு செல்ல ஏதாவது செய்யவேண்டும்.//

வளர்தொழில் மாத இதழில் வெளியிட அனுமதி கேட்டிருக்கிறார்கள். அடுத்த மாத இதழிலிருந்து தொடராக வெளி வரலாம்.

முழுவதும் முடித்த பிறகு புத்தகமாக வெளியிடும் திட்டமும் இருக்கிறது. பிடிஎஃப் ஆக மாற்றி மின்நூலாகவும் வினியோகிப்போம்.

அன்புடன்,

மா சிவகுமார்

தென்றல் said...

/வளர்தொழில் மாத இதழில் வெளியிட அனுமதி கேட்டிருக்கிறார்கள். அடுத்த மாத இதழிலிருந்து தொடராக வெளி வரலாம்.
/

(மீண்டும் ஒரு முறை) வாழ்த்துக்கள், சிவக்குமார்!

மா சிவகுமார் said...

மீண்டும் நன்றி தென்றல் :-))

அன்புடன்,

மா சிவகுமார்