Wednesday, February 13, 2019

பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் - உலகம் எப்படி உள்ளது?

ஏகாதிபத்தியமும், உற்பத்தி உலகமயமாதலும்
 
- முனைவர் பட்ட ஆய்வறிக்கை , ஜான் ஸ்மித், ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம், ஜூலை 2010


3. நன்றியுரை
இங்கு நன்றி தெரிவிக்கிற முடிவதை விட பலரிடமிருந்து உதவிகளை பெற்றிருக்கிறேன். இந்த நன்றிக் குறிப்புகள் இந்த ஆய்வுரையை எழுதுவதற்கு எனக்கு நேரடியாக உதவி செய்தவர்களுக்கு சொல்லப்படுகின்றன.
  • முதலாவதாக ஐந்து ஆண்டுகள் முழு நேர படிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கிய பொருளாதார, சமூக ஆராய்ச்சி கழகத்துக்கு; இந்த ஆய்வறிக்கைக்கான பரிந்துரையை தேர்ந்தெடுத்த பொருளாதார, சமூக ஆராய்ச்சிக் கழகத்தின் முகம் தெரியாத விமர்சகர்களுக்கு
  • ஷெபீல்ட் பல்கலைக் கழகத்தின் அரசியல் துறை, அதன் கற்பிக்கும் ஊழியர்கள், நிர்வாக ஊழியர்கள், சிறப்பான கூட்டு நன்றிக்கு உரியவர்கள். என் வீட்டுக்கு மிக அருகில் அமைந்திருக்கும் அது மிகச் சிறப்பான, ஜனநாயக, நட்புரீதியான சூழலை உருவாக்கித் தந்தது. முனைவர் ஆய்வு செய்ய விரும்பும் எந்த மாணவருக்கும் நான் அதை பரிந்துரைப்பேன். முதுநிலை பட்ட செயலர் சாரா குக்கின் நட்புரீதியான அணுகுமுறையும், பணித் திறனும் சிறப்பு நன்றிக்கு பாத்திரமானவை.
  • என்னுடைய ஆய்வுப் பணி மேற்பார்வையாளர் பேராசிரியர் ஜான் எம் ஹாப்சனின் தொடர்ந்த ஆதரவுக்கும், பொறுமைக்கும், பாரபட்சமின்மைக்கும் ஒரு பெரிய, திருப்பிச் செலுத்த முடியாத கடனை நான் பெற்றிருக்கிறேன்; எனது வாதத்தை எப்படி முன் வைப்பது என்று தீர்மானிக்குமாறு தொடர்ந்து என்னை ஊக்குவித்தார் அவர்.
  • லூசியா பிராதெல்லாவுக்கு சிறப்பு நன்றிகள்: ஆய்வறிக்கையில் பொருத்தமான இடங்களில் குறிப்பிடப்பட்ட கருத்துக்கள், புரிதல்களுடன் கூடவே இந்த ஆய்வறிக்கையின் இறுதி வரைவில் கூடுதல் விளக்கமும் கருத்துரீதியான மேம்பாடும் தேவைப்படும் இடங்களை சுட்டிக் காட்டியது அவர்தான்.
  • இரண்டாவது வகை நேரடி உதவியை, கருத்துக்களை கோட்பாடு ரீதியாக வளர்ப்பதற்கு நேரடியாக தாக்கம் செலுத்தியவர்கள் வழங்கினார்கள். அவர்களது கருத்து ரீதியான பங்களிப்பு பொருத்தமான இடங்களில் மேற்கோள்கள் மூலமாகவும், சுட்டிகள் மூலமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒருவரது பங்களிப்பு சிறப்பாக குறிப்பிடப்பட வேண்டியது. முனைவர் ஆன்டி ஹிக்கின்பாட்டம். 1975ல் நாங்கள் இருவரும் ஒரே பட்டப் படிப்பில் படித்துக் கொண்டிருக்கும் போது நான் முதன் முதலில் ஆன்டியை சந்தித்தேன். அதுமுதல் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில். அத்தியாயம் 1ல் தரப்பட்டுள்ள கோட்பாட்டு ரீதியான கருத்துக்களை வளர்ப்பதில் ஆன்டி பெரும் பங்காற்றினார். அதை குறிப்பிடுவது எனது கடமையாகும்.
      நாங்கள் இருவரும் ஒரே ஆரம்பப் புள்ளியிலிருந்து தொடங்கினோம். ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களுடன் அடையாளப்படுத்திக் கொள்வது. உலகமயமாக்கம் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குறைந்த கூலி உழைப்பாளிகளிடமிருந்து யு.கே., யு.எஸ்., போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளுக்கும் தேசம் கடந்த தொழிற்கழகங்கள் லாபம் குவிப்பதற்கான வாய்ப்புகளை பெருக்குகிறது என்ற உணர்வு. ஒரே கோட்பாட்டு ரீதியான உணர்வு: மூலதனம் நூலில் மார்க்ஸ் ஆய்வு செய்த மூலதனத்தின் சமூக உறவுகளில் ஒரு பெரிய பரிணாம வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்போது தேவைப்படுவது முதலாளித்துவத்துக்கான கோட்பாடு அல்ல, அதன் ஏகாதிபத்திய வடிவத்துக்கான கோட்பாடு. அதை சாதிப்பதற்கு, ஆன்டி சொன்னது போல நாம் மார்க்ஸின் மூலதனத்தை லெனினின் ஏகாதிபத்தியம் என்ற கண்ணாடி வழியாக படிப்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்.
      இந்த முக்கியமான கண்ணோட்டங்கள், அவரது தாராளமான ஆதரவு, ஊக்கம் இவற்றுடன் இந்த ஆய்வறிக்கையில் நெய்யப்பட்டுள்ள பல கோட்பாட்டு ஆதாரங்களை எனக்கு அறிமுகம் செய்தார் ஆன்டி. அவற்றுள் மிக முக்கியமானது மாஸ்கோவில் 1960ல் பதிப்பிக்கப்பட்ட இவால்ட் இல்யங்கோவின் மகத்தான படைப்பான 'மார்க்சின் மூலதனத்தில் சாராம்சத்துக்கும் பருண்மைக்கும் இடையேயான இயங்கியல்'. மார்க்சின் இயங்கியல் உத்திகளையும் சொல் கையாளல்களையும் பற்றிய அவரது ஆழமான கண்ணோட்டங்கள் இந்த ஆய்வுரையின் வடிவமைப்பு மீதும் ஆய்வு முறையியல் மீதும் வெகுவாக தாக்கம் செலுத்தின.
      முதல் அத்தியாயத்தில் முன் வைக்கப்பட்டுள்ள அடிப்படை கருத்துக்களான, முதலாளித்துவத்திற்கும் தேசிய ஒடுக்குமுறைக்கும் இடையேயான உறவு, மூலதனத்தில் மார்க்ஸ் உருவாக்கிய உத்திகளை இப்போதைய ஏகாதிபத்திய உலக பொருளாதாரத்துக்கு ஏன் நேரடியாக பயன்படுத்த முடியாது, அதிதீவிர சுரண்டல் பற்றிய கோட்பாடு, மார்க்சின் மதிப்புக் கோட்பாட்டையும் லெனினின் ஏகாதிபத்தியம் பற்றிய கோட்பாட்டையும் புதிய இணைப்புக்கான முன்மொழிவை முன் வைத்தது ஆன்டி. அவரது ஆய்வுரைகளிலிருந்தும் தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களிலிருந்தும் தரப்பட்டுள்ள மேற்கோள்களில் அவை தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. முதல் அத்தியாயத்தில் முன் வைக்கப்பட்ட வடிவில் அவற்றிற்கு உருக் கொடுத்து வளர்த்தெடுத்தது என்னுடைய பணி. பின்வரும் ஆறு அத்தியாயங்களில் இந்த ஆய்வுத் திட்டப்பணியை வழிநடத்துவதற்கான நடைமுறைப்படுத்தலும் என்னுடைய பணி.
  • இறுதியாக இந்த ஆய்வறிக்கை புரட்சிகர கியூபாவின் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அவர்களது அசாதாரண சர்வதேசியவாதம், சாத்தியமற்றதாகத் தோன்றும் சூழ்நிலைகளில் எதிர்த்து நிற்பதற்கான ஆற்றல், மனித வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க சாதனைகள் இவை யாவும் பெருமை, ஊக்கம் மற்றும் நம்பிக்கைக்கான காரணிகளாக விளங்குகின்றன. இவை இல்லாமல், மிக முக்கிய காரணிகளான இவை இன்றி, இந்த ஆய்வறிக்கை ஒரு போதும் எழுதப்பட்டிருக்காது. 

ஆதாரம் : சர்வதேச நிதி அமைப்பு, உலக பொருளாதார நிலைமை தரவுத் தளம், ஏப்ரல் 2007

http://www.imf.org/external/pubs/ft/weo/2007/01/data/index.aspx

“உலக வரைபடத்துக்கான" விளக்கம்
ஒரு நபருக்கு சராசரி GDP (உள்நாட்டு உற்பத்தி மதிப்பின்) அடிப்படையில் 179 நாடுகள் இடமிருந்து வலமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இடது கோடியில் உலகிலேயே ஏழையான நாடு யேமனும், வலது கோடியில் அமெரிக்காவுக்கு வலது புறம் உலகிலேயே பணக்கார நாடான நார்வேயும் காட்டப்பட்டுள்ளன. x-அச்சு மொத்த மக்கள் தொகையை குறிக்கிறது. ஒவ்வொரு புள்ளியும் ஒரு நாட்டை குறிக்கிறது. அவற்றுக்கிடையேயான இடைவெளி நாட்டின் மக்கள் தொகையை குறிக்கிறது. முதல் அகலமான இடைவெளி இந்தியாவையும், அடுத்த பெரிய இடைவெளி சீனாவையும் குறிப்பிடுகின்றன.

உலகின் பாதி உற்பத்தி (வாங்கும் திறன் சமன்பாடு அடிப்படையில் கணக்கிடப்பட்டது) செங்குத்து கோட்டுக்கு இடது புறம் உள்ள 146 நாடுகளில் உற்பத்தியாகின்றது. இந்த நாடுகளில் 560 கோடி மக்கள் வசிக்கிறார்கள், உலக மக்கள் தொகையில் 85%. மறு பாதி செங்குத்து கோட்டுக்கு வலது புறம் உள்ள 33 நாடுகளில் உற்பத்தியாகிறது. இவற்றில் 100 கோடி மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் 15% வாழ்கின்றனர்.

ஒருவருக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி $11,000க்கும் $33,000க்கும் இடையிலான மாறிச்செல்லும் பிராந்தியத்தில் உள்ள 40 நாடுகளில் உலகின் 10% மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பாதிபேர் $11,000க்கும் $15,000க்கும் இடையே உள்ளனர். வரைபடத்தின் மிகவும் செங்குத்தான பகுதியான $15,000க்கும் $30,000க்கும் இடைப்பட்ட பகுதியில் உலக மக்கள் தொகையில் 5.2% கொண்ட 32 சிறிய நாடுகள் உள்ளன. அவற்றின் தென் கொரியா மிகப் பெரியது.

  1. நம் நாட்டு உழைப்பின் பங்களிப்பை திரை போட்டு மறைக்கும் ஜி.டி.பி

  2. ஏகாதிபத்திய உலகமயமாதலில் மூன்றாம் உலக உழைப்பின் பாத்திரம்

No comments: