ஒவ்வொரு ஊரிலும் இறைச்சிக்காக வெட்டப்படும் விலங்குகளின் தோல்களை சேகரித்து விற்கும் வியாபாரிகள் இருப்பார்கள். பெரிய இறைச்சி கிடங்குகள் இருக்கும் இடத்துக்கு அருகில் தோல் வாங்க விற்க சிறப்புச் சந்தையே இருக்கலாம். இந்த தோல்களின் எண்ணிக்கையும், தரமும் இடம், காலம் பொறுத்து பெரிதளவு மாறுபடும்.
- குளிர்காலத்தில் எடுக்கப்படும் தோல் வெப்பத்தால் சேதமடையாமல் இருக்கும். வெயில் காலத்தில் சேதம் அதிகமாக இருக்கும்.
- மழைக் காலத்தில் தோலில் பூச்சிக் கடிகள் இருப்பதால் தரம் குறையும்.
- தீபாவளி, பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் இறைச்சி உண்பது அதிகமாக இருப்பதால் கிடைக்கும் தோலின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
வாங்கிய தோலுக்குக் கொடுத்த விலை சரியானதுதானா என்று கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு தோலின் தரத்தை சரிவர நிர்ணயித்து பிரித்துப் பார்க்க வேண்டும். ஆயிரம் தோல்களில் எத்தனை முதல் தரம், எத்தனை இரண்டாவது தரம் என்று தரம் பிரித்துப் பார்த்தால்தான் வாங்கிய விலை நியாயமானதா என்று தெரியும்.
பச்சைத் தோலாக இருக்கும் போது மேற்பரப்பில் இருக்கும் காயங்கள், தழும்புகள், வெட்டுகள் தெளிவாகத் தெரியாது. பரப்பில் இருக்கும் முடியைத் தள்ளி, பிற தேவையில்லாத பகுதிகளையும் விலக்கிய பிறகுதான் தோலின் தரம் தெரிய வரும்.
4 comments:
மே தின வாழ்த்துக்கள்
மருதநாயகம்,
வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பதை உடைத்தெறிந்த மே தின இயக்கத்தின் செய்தி இன்னும் பரவலாக விருப்பத்துடனும் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகளுடனும்,
மா சிவகுமார்
முதலில் 12 யில் இருந்து 8 வரை வந்தேன்.ஏதோ தடுமாருவது போல் தோனவே இப்போது இங்கிருந்து.
நல்ல தகவல்கள்.
நன்றி வடுவூர்குமார்.
உங்கள் கட்டிடக் கலை தொடர் போல நானறிந்த துறை சார்ந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சி :-)
அன்புடன்,
மா சிவகுமார்
Post a Comment