கடன் என்பது வேறு ஒருவரின் சேமிப்பிலிருந்து வருவது. தனது வருவாயில் ஒரு பகுதியை செலவளிக்காமல் சேமித்து வைப்பதை இன்னொருவர் கடனாகப் பெற முடிகிறது. அப்படி கடனாக வாங்கியவர், உடனடி நுகர் பொருட்களில் அதைச் செலவிட்டால் முதலீடு எதுவும் உருவாகமல் கடனைத் திருப்ப வழியில்லாமல் போய் விடும்.
இதற்கு விதிவிலக்கு முதலீடு. வருமானம் பத்தாயிரம் ரூபாய். பத்தாயிரமும் வீட்டு செலவுக்குப் போய் விடுகிறது. இனிமேல் செலவு செய்ய வேண்டுமானால் கடன்தான் வாங்க வேண்டும்? இந்தக் கூடுதல் செலவு எதிர்காலத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்கக் கூடிய முதலீட்டுக்குப் பயன்பட்டால் கடன் வாங்கி கூட செலவு செய்யலாம்.
தனி நபர்கள், நிறுனங்கள், அரசுகள் வருவாயை மிஞ்சி செலவு செய்வது அடிப்படை ஒன்றேயானாலும் வெவ்வேறு முறையில் புரிந்து கொள்ளப்படுகின்றன.
- தனி நபர்கள் துண்டு நிதித் திட்டம் போடுவது, வங்கிக் கடன் அல்லது தனிப்பட்ட கடன்களை அடிப்படையாக வைத்து. கணக்கியலில் தனிநபரின் எல்லா வரவையும் கூட்டி, எல்லா செலவையும் அதிலிருந்து கழித்து அவரது சேமிப்பை கணக்கிடுவார்கள்.
- தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் புதிய திட்டங்களை செயல்படுத்த ஆரம்பிக்கும் போது கடன் வாங்கி செலவளிப்பார்கள். இதை முதலீடு என்று தனியாக கணக்கு வைத்து முழுச் செலவையும் அதே ஆண்டில் காட்டாமல் திட்டங்கள் பலன் கொடுக்க ஆரம்பிக்கும் ஆண்டுகளுக்கு செலவை பகிர்ந்தளித்து கொள்வார்கள்.
- அரசாங்கம் வருமானத்தை மிஞ்சி செலவு செய்யத் திட்டம் போடும் போது பற்றாக் குறை நிதிநிலை. குறையை ஈடு செய்ய கடன் பத்திரங்களை வங்கிகளுக்கு விற்பது மூலம் பொது மக்களின் சேமிப்பை அரசு கடனாக வாங்கிக் கொள்ளும். அரசின் பற்றாக்குறை கடன் வாங்கல் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு, தனி நபர்களுக்குக் கிடைக்கக் கூடிய வங்கிக் கடன் வசதிகள் குறைந்து விடும்.