Tuesday, February 13, 2007

செலவு செய்தலும் சேமித்தலும் (economics 43)

ஒருவரின் வருமானம் இரண்டாகப் பிரிகிறது. தேவையான அல்லது தேவையற்று பொருட்களை வாங்கச் செலவிடலாம் அல்லது சேமிப்பில் போடலாம்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் பெரும்பகுதி செலவில் போய் விடுகிறது. சில சமயம் வரவுக்கு மீறியும் செலவு செய்ய வேண்டி வந்து விடுகிறது. அதை மானியங்கள் மூலமாகவோ, கடன் வாங்குவது மூலமாகவோ சமாளிக்கிறோம்.

வருமானம் ஏற ஏற, செலவும் அதிகரிக்கிறது. ஆனால் அதிக வருமானத்தை முற்றிலும் செலவளித்து விடுவதில்லை. வசதி படைத்தவர்கள் தமது வருமானத்தில் கணிசமான பகுதியை சேமிக்க ஆரம்பிக்கிறார்கள்.

மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த ஒருவரின் வருமானம் ஆயிரம் ரூபாய்கள் அதிகமானால் என்ன செய்வார்? அது செலவு செய்யப் பயன்படுமா, சேமிப்பில் சேருமா? மாதம் ஐந்து லட்சம் சம்பாதிப்பவருக்கு ஆயிரம் ரூபாய் அதிகம் கிடைத்தால் செலவளிப்பாரா, சேமிப்பாரா?

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளினால் ஏழைகளின் வருமானம் அதிகமானால் மொத்தமாக வாங்கும் பொருட்களின் தேவை அதிகரிக்கும். பணக்காரர்களின் வருமானம் அதிகமானால் சேமிப்பு அதிகரிக்கும். என்பது பொதுவாகச் சொல்லக் கூடிய ஒன்று.

7 comments:

துளசி கோபால் said...

//மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த ஒருவரின் வருமானம் ஆயிரம் ரூபாய்கள் அதிகமானால் என்ன செய்வார்?
அது செலவு செய்யப் பயன்படுமா, சேமிப்பில் சேருமா//

அதுக்குள்ளெ ஏற்படும் விலைவாசி ஏற்றத்தால் அதுவும் செலவாயிரும்(-:

பத்மா அர்விந்த் said...

சிவகுமார்
ஐந்து இலட்சம் சம்பாதிப்பவரின் செலவுகள் ஒரு குறிப்பிட்ட வீதமே நடகும். பெரும்பாலானவை saturate ஆகி இருக்கும். எனவே அதிகமாக கிடைக்கும் 1000 ரூபாய் எந்த வித மாற்றத்தையும் தராது. ஆனால் குறைவாக சம்பளம் வாங்கும் ஒருவர் 100ஒ ரூபாய் அதிக கிடைத்தவுடன்செலவு செய்ய அது இன்னும் அதிகமாகவே வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் இவரின் டிச்போசபில் வருமானம் குறைவு. இன்னும் பூர்த்தி அடையாத செலவுகள் இருக்கும்.

வடுவூர் குமார் said...

இன்று காலை கண்மூடி உட்கார்ந்திருக்கும் போது ஒரு சிறு நினைவு..
மாச சம்பளம் 1000 ரூபாய்க்கு குறைந்தால் எப்படி சமாளிப்போம் என்று,இங்கு வந்து பார்த்தால் அதே மாதிரி தான் கேட்டிருக்கிறீர்கள்.

மா சிவகுமார் said...

வாங்க குமார்,

//மாச சம்பளம் 1000 ரூபாய்க்கு குறைந்தால் எப்படி சமாளிப்போம் என்று,//

அதை marginal propensity to consume/save என்று குறிப்பிடுகிறார்கள். கூடுதலாக அல்லது குறைவாக 1000 ரூபாய் கிடைக்கும் போது அது எங்கு போய் முடியும் என்பது அவரது முந்தைய வருமான அளவைப் பொறுத்தது. அதைத்தான் பத்மா அழகாக விளக்கி விட்டார். ஐந்து லட்சம் சம்பாதிப்பவருக்கு 1000 குறைந்தால் அவரது சேமிப்பில் 1000 குறையும், செலவு மாறாது. 5000 சம்பளக்காரருக்கு செலவில் துண்டு விழும்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் said...

//அதுக்குள்ளெ ஏற்படும் விலைவாசி ஏற்றத்தால் அதுவும் செலவாயிரும்(-://

அதேதான், ஆனால் அதே 1000 ரூபாய் ஐந்து லட்சம் வருமானக்காரருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது அல்லவா?

அன்புடன்,

மா சிவகுமார்

Anonymous said...

சேமிப்பு முதலீடாக அமையும்பால் அது மீண்டும் பெருகுகிறது. மூதலிடாக இருப்பதால் மற்றொருவருக்கும் வருமானம் வருகின்றது

மா சிவகுமார் said...

அதேதான் அனானி, சேமிப்பு என்று தலையணைக்கு அடியில் ஒழித்து வைத்தாலோ, நிலத்தில் முடக்குவதாலோ நாட்டுக்கு எந்த நன்மையும் கிடையாது. அது ஆக்கம் தரும் முயற்சிகளில் முதலீடு செய்யப்பட வேண்டும்.

அன்புடன்,

மா சிவகுமார்