பாலபாரதியின் கணக்கிலிருந்து 1000 ரூபாய்கள் லக்கிலுக்கின் கணக்குக்கு மாற்ற வேண்டும்.
- முதல் படியாக பாலபாரதியின் கணக்கிலிருந்து 1000 ரூபாய் குறைக்கிறோம்.
- தொடர்ந்து லக்கிலுக்கின் கணக்கில் 1000 ரூபாய் சேர்க்கிறோம்.
கணினியில் இந்த பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று மின்தடைப் பட்டு கணினி நின்று போகிறது. அந்த நேரத்தில் இரண்டு படிகளும் நடந்திருந்தால்தான் பரிமாறலைக் கணக்கில் காட்ட வேண்டும். பாலபாரதியின் கணக்கில் குறைக்காமலேயே லக்கி லுக்கின் கணக்கில் சேர்த்து விடவோ அங்கு குறைத்து விட்டு இங்கு கூட்டாமல் இருந்து விடவோ கூடாது.
இந்த முழுமை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வெவ்வேறு உத்திகளைக் கையாளுகிறார்கள்.
இரண்டாவதாக ஒழுங்கு
'ஒருவரது கணக்கில் கையிருப்பு 100 ரூபாய்க்குக் கீழ் போகக் கூடாது' என்பது போன்ற விதிகள் அமைக்கும் வசதியும், அந்த விதிகள் மாறாமல் இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளும் ஒழுங்கும் இருக்க வேண்டும்.
500 ரூபாய் கையிருப்பு இருக்கும் கணக்கிலிருந்து 475 ரூபாய் மாற்ற முயன்றால் அதை மறுத்து விடும் ஒழுக்கம் தரவுத் தள மென்பொருளுக்கு வேண்டும்.
மூன்றாவதாக தனிமை
ஒரே நேரத்தில் இரண்டு பரிமாறல்கள் நடந்தால் ஒன்று செய்யும் மாறுதல்கள் மற்றதைப் பாதிக்கக் கூடாது.
நான்காவதாக உயிர்மை
மாற்றங்கள் தரவுத் தளத்தில் சேமிக்கப்பட்டு விட்ட பிறகு வெளிப் புறக் காரணங்களால் அது பாதிக்கப்பட்டு மறைந்து போய் விடக் கூடாது.
(இந்த நான்கையும் இணைத்து தமிழில் பொருத்தமான குறுஞ்சொல் ஒன்றை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். தேவைப்பட்டால் தமிழ்ப் பெயர்களை மாற்றவும் செய்யலாம்.)
10 comments:
ஒழுங்கு என்பதை கொடுக்கப்பட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டவையாக இருத்தல் என்று கொள்ளலாமல்லவா, அதனால் அதனை விதிகளை கொண்டு
'முழு-உ-த-வி' என்று குறுஞ்சொல் கொள்ளலாமா?
முழுமை - Atomicity
Consistency- ஒழுங்கு
Isolation- தனிமை
Durability - உயிர்மை
என்ற மொழிபெயர்ப்பே திருப்திகரமாக இல்லை சிவகுமார்..
Atomicity - என்றால், தனித்தனியாக செய்யக் கூடியது என்கிற மாதிரி பொருள்படும் அல்லவா? சின்னச்சின்ன அடிகளாக பிரிக்கக்கூடியது- atom ஆக்க இடம் தருவது atomicity - அணுக்கமுடைமை?
Consistency - ஒழுங்கு என்றால் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பது, செய்ய வேண்டியதைச் செய்வது என்று ஒரு முறை செய்யும் பொருள் தருகிறது. ஆனால், இந்த consistencyக்கு, மீண்டும் மீண்டும் செய்தாலும், ஒரே மாதிரி ஒழுங்கில் இயங்குவது என்று பொருள் வரும் அல்லவா? - say, நம்பகத்தன்மை?
Isolation - தனியாக இயங்கும் தன்மை,
Durability - "புறக் காரணங்களால் அது பாதிக்கப்பட்டு மறைந்து போய் விடக் கூடாது." என்பது சரியாக பொருந்துகிறது.. ஆனால் இது எப்படி உயிர்மை ஆகும்? அது தான் புரியவில்லை.. இயல்பு திரியாமை.. என்கிறது போன்ற சொல் தான் பொருந்தும் இல்லையா?
இதை எப்படி ஆசிட் போல் சொல்வது?
சத்தியா,
scrabble விளையாட்டு நல்ல விளையாடுவீர்கள் போலிருக்கிறது. எழுத்துக்களை அழகாக இணைத்து பொருள் தரும் சொல் உருவாக்கி விட்டீர்கள்! நன்றி.
பொன்ஸ்,
1. Atom என்பதன் வேர்ச்சொல் பிரிக்க முடியாதது என்பது (http://en.wikipedia.org/wiki/Atom).
இங்கும் 'ஒரு பரிமாற்றம் முழுமையாக நடக்க வேண்டும், இல்லா விட்டால் நடக்காமலே போய் விட வேண்டும்' என்ற பொருளிலேயே வழங்குவதாக நினைக்கிறேன்.
தனித்தனியாகச் செய்யக் கூடியது என்பதுதான் isolation, இல்லையா?
2. Consistency - ஒழுங்கு என்று சொல்லாமல் நம்பகம் என்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.
3. Isolation - தனிமை
4. இயல்பு திரியாமை சரிதான். ஒற்றைச் சொல்லாக இருந்தால் நன்றாக இருக்கும்! நிலைத்தல் ?!
அப்படி ஒரே சொல்லாக குறுக்கம் கிடைக்கா விட்டால் அந்த வேலையை அப்புறம் தள்ளிப் போட்டு விட வேண்டியதுதான் :-)
அன்புடன்,
மா சிவகுமார்
integrity - கட்டுக்கோப்பு / கட்டுக்குலயாமை ?
அது என்னங்க முழு-உ-த-வி ACID மாதிரி தமிழுக்கான சுருக்கமா? முதலில் தமிழில் இப்படி - குறி போட்டோ எழுத்துகளைச் சேர்த்துப் போட்டோ சுருக்கங்கள் உருவாக்குவதில்லை. முழு.உ.த.வி என்று வரலாம். வி என்ன? ஒழுங்கு விட்டுப் போயிருக்கு.
அடுத்து integrity, durability, consistency எல்லாம் பல இடங்களில் வரும் சொற்கள். இவற்றுக்கு எல்லா இடத்துக்கும் பொருந்துமாறு சொல் ஆக்கும் இராம.கி அவர்களின் அணுகுமுறை தான் சரியாக இருக்கும்.
inconsistentஆக இருப்பது மாறிக் கொண்டே இருக்கும். இதைத் தடுமாற்றம் என்கிறோம். தடுமாறாமல் நிலையாக இருப்பதை consistent என்கிறோம். consistencyயில் ஏதோ ஒரு ஒழுங்கு இருக்கிறது என்பதை விட அது தொடர்ந்து மாறாமல் இருக்கிறது என்பது முக்கியம். இந்த வகையில் consistency = மாறின்மை என்று ஒரு சொல் சென்னைப் பல்கலைக் கழக அகராதியில் வருகிறது. பார்க்க அவிரோதம்
தடுமாற்றத்துக்கு inconsistency என்ற பொருள் இருப்பதையும் பார்க்கலாம்
consistancy = மாறாமை; மாறின்மை என்று சொன்னால் பொருந்துமா?
durability என்பதில் இயல்பு மாறா தன்மையைக் காட்டிலும் நீடித்து நிலைத்து இருக்கும் தன்மையைக் காட்டும். ஏதாவது புதுசா வாங்கினால், "இது நிலைச்சிருக்குமா தம்பி"ன்னு வீட்டில் கேட்பது வழமை தானே? எனவே அகரமுதலியைப் புரட்டாமலே சொல்லலாம். durability = நிலைப்பு
isolation - தனிமை, சரி
atomicity - அணுமை-ன்னே எளிமையா சொல்லிட்டுப் போயிடலாமே? இதில் அணுவைப் போன்ற தகைமையை உடையதுன்னு புரிஞ்சுடும் தானே? புதுசா இடத்துக்கு இடம் ஒரு கலைச்சொல்லை நுழைக்கவும் வேண்டாம். atomicityயில் எல்லாம் முழுசா வரும் என்பதை விட அப்பணியை ஒன்றாகவே பார்க்க இயலும், பிரிக்க இயலாது என்ற கருத்து இருக்கிறது. ஆங்கில உரிச்சொற்களில் icity போட்டு வரும் பல இடங்களில் நாம "மை" சேர்த்துக்கிட்டாலே சரியாகிடும்னு நினைக்கிறேன்.
நன்றி பாலராஜன் கீதா, ரவி, பொன்ஸ்
Atomicity - அணுமை
Consistency - நம்பகம் / மாறின்மை (??)
Isolation - தனிமை
Durability - நிலைப்பு
இப்படி வைத்துக் கொள்ளலாமா?
அன்புடன்,
மா சிவகுமார்
நம்பகம் = reliability. ஆனா, இந்த இடத்தில் கூடுதல் பொருத்தம்னு நினைச்சா பயன்படுத்தலாம்.
இன்னொன்னு, நிவதி-னா என்னன்னு தலைப்பை மட்டும் பார்த்துட்டு ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்தேன். ஆங்கில எழுத்துக்களைப் போல் தமிழில் capital எழுத்துக்கள் இல்லாததால், abbreviationகளை தமிழில் எழுதும்போது இடையில் புள்ளி வைத்து எழுதுவது நல்லது. நி.வ.தி என்று எழுதி இருந்தால் பார்த்தவுடனே பெயர்ச்சுருக்கம் என்று புரிந்து இருக்கும்.
//நி.வ.தி என்று எழுதி இருந்தால் பார்த்தவுடனே பெயர்ச்சுருக்கம் என்று புரிந்து இருக்கும்.//
திமுக, அதிமுக, பாகச என்று எழுதுவது நடக்கத்தானே செய்கிறது.
அன்புடன்,
மா சிவகுமார்
திராவிட முன்னேற்றக் கழகம், தி.மு.க - இரண்டையும் தெரிந்தவர்களுக்கு திமுக என்று எழுதினாலும் புரியும். எனினும், தி.மு.க என்று எழுதுவது நல்ல formatஆக இருக்கும். எனினும், நிறுவன வளத் திட்டமிடல் என்ற சொல்லே அறிமுகமில்லாதவருக்கு நிவதி என்று எழுதினால் அது ஒரு பெயர்ச்சுருக்கம் என்று கண்டுகொள்வதற்கு வழி இல்லை என்று நினைக்கிறேன். முக்கிமாக, இந்தத் தொடரின் முதல் பாகத்தையும் படிக்காமல் நிறுவன வளத் திட்டமிடல் குறித்துத் தெரியாமலும் தொடணரினட் ஏதோ ஒரு பாகத்தை முதலில் பார்க்கும் வாசகரால் புரிந்து கொள்ள இயலுமா?
//இந்தத் தொடரின் முதல் பாகத்தையும் படிக்காமல் நிறுவன வளத் திட்டமிடல் குறித்துத் தெரியாமலும் தொடணரினட் ஏதோ ஒரு பாகத்தை முதலில் பார்க்கும் வாசகரால் புரிந்து கொள்ள இயலுமா?//
சரியான கருத்து! எல்லா பகுதிகளிலும் முழு விரிப்பையும் சேர்த்து விடுகிறேன். நன்றி ரவி.
அன்புடன்,
மா சிவகுமார்
Post a Comment