பயன்பாட்டுக்குக் கிடைக்கும் தரவுத்தளங்களில் (relational databased) சில கீழே (முழுப் பட்டியல்):
வணிக முறைப் பயன்பாடுகள்:
- ஐபிஎம் நிறுவனத்தின் DB2
- ஆரக்கிள் நிறுவனத்தின் ஆரக்கிள் (Oracle Database)
- மைக்ரோசாப்டு நிறுவனத்தின் எஸ்கியூஎல் சர்வர் (MS SQL Server)
- மை எஸ்கியூஎல் (MySQL)
- போஸ்ட்க்ரெஸ் கியூஎல் (PostgreSQL)
நடைமுறையில் ஒவ்வொரு தரவுத்தள மென் பொருளும் தனிப்பட்ட சில சிறப்புகளை உருவாக்கியுள்ளன. அத்தகைய சிறப்புக் கூறுகளைப் பயன்படுத்தினால் மற்ற தரவுத்தளங்களில் பயன்படுத்த மென் பொருளில் பல மாறுதல்கள் செய்ய வேண்டியிருக்கும்.
ஒரு தரவுத் தளத்துக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளை ACID என்று குறுக்கிக் குறிப்பிடுகிறார்கள். முழுமை (Atomicity), Consistency (ஒழுங்கு), Isolation (தனிமை), Durability (உயிர்மை).
(இந்த நான்கையும் இணைத்து தமிழில் பொருத்தமான குறுஞ்சொல் ஒன்றை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். தேவைப்பட்டால் தமிழ்ப் பெயர்களை மாற்றவும் செய்யலாம்.)
4 comments:
இந்த தரவுத்தளங்களின் வேலை என்ன?
postgreSQL தளத்துக்குப்போய் பார்த்தால் எல்லா கணினி மொழி பற்றியும் ஏதோ போட்டு இருக்கிறார்கள்.புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமப்படுகிறேன்.
இந்த தரவுத்தளம் என்பது புரிந்தால் தானே அதோடு தொடர்பு உள்ள அனைத்தும் விளங்கும்?முடிந்தால் விளக்கவும்.
இந்த நான்கையும் இணைத்து தமிழில் பொருத்தமான குறுஞ்சொல்
"கடவுள்"- சும்மா தமாசுக்கு
நன்றி, சிவகுமார்!
போஸ்ட்க்ரெஸ் கியூஎல் (PostgreSQL)மென்பொருள் சிறந்ததென்று நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். உங்கள் அனுபவம் எப்படி?
["முழுப் பட்டியல்" சுட்டியை சரி செய்துவிடுங்கள்.]
வாங்க குமார்,
//இந்த தரவுத்தளங்களின் வேலை என்ன?//
தகவல்களைச் சேமித்து வைக்க உதவுபவை இந்த தரவுத் தளங்கள். தேவைப்படும் போது எடுக்கவும் வசதி இருக்க வேண்டும்.
விக்கிபீடியா சுட்டி
அன்புடன்,
மா சிவகுமார்
வணக்கம் தென்றல்,
//போஸ்ட்க்ரெஸ் கியூஎல் (PostgreSQL)மென்பொருள் சிறந்ததென்று நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். உங்கள் அனுபவம் எப்படி?//
உயர் தர பயன்பாடு, திறமையான உருவாக்கும் குழு, சிறந்த தொழில் நுட்ப உதவி - எல்லாமே காசு செலவில்லாமல்.
//முழுப் பட்டியல்" சுட்டியை சரி செய்துவிடுங்கள//
செய்து விட்டேன். நன்றி. :-)
அன்புடன்,
மா சிவகுமார்
Post a Comment