Thursday, September 6, 2007

சொந்தத் தொழில் செய்வதில் என்ன சிறப்பு?

'சொந்தமா தொழில் செய்றதுக்கும் இன்னொரு நிறுவனத்தில் வேலை செய்வதற்கும் என்ன வித்தியாசம்' என்று கேட்டேன்.

'சின்ன வயசில படிக்கும் போது எல்லாரும் சேர்ந்து சீட்டாடிக் கொண்டிருக்கும் போது ஒருத்தன் டாக்டர் ஆவேண்ணான், இன்னொருத்தன் எஞ்சினீயர்ணான். எம்முறை வந்ததும் நான் உங்களை எல்லாம் வேலைக்கு வச்சுப்பேன்டான்னு சொன்னேன்'

'இப்ப யோசிக்கிறது போல காரணங்கள் எல்லாம் யோசிச்சது இல்லை. மாத்திச் சொல்லணும்னு கூடச் சொல்லியிருக்கலாம், என்னவோ அப்ப இருந்தே அப்படித்தேன் புத்தி போனது'

அவர்கள் வணிகக் குடும்பம். அவர் அப்பா தொழில் செய்து கொண்டிருந்தவர். அதனால் அவருக்கு அது இயல்பான மனப்போக்குதான்.

'சொந்தமா தொழில் செஞ்சா விருப்பப்படி நம்ம திறமை எல்லாம் பயன்படுத்தலாம். இன்னொரு இடத்தில வேலை பார்த்தா அவங்க கொடுக்கிற வேலையத்தானச் செய்ய முடியும்' என்று சொல்லி முடித்துக் கொண்டார். இந்தக் கேள்வியை மனதில் அலசி அடுத்த முறை பார்க்கும் போது ஏதாவது வடிவில் பதில் கொடுத்து விடுவார்.

முன்பொரு தடவை. 'ஒருத்தன் திடீரென்னு நாலு நாள் வேலைக்கு வரல. வந்த பிறகு ஒடம்பு சரியில்லாம போயிட்டு சார்னு சொல்றான். ஒரு போனாவது போட்டு தகவல் சொல்லியிருக்கக் கூடாதான்னு கேட்டால் ஏதோ சாக்கு போக்கு. அவன்ட்ட கேட்டேன்...'

'ரெண்டு நாள் முன்னால எனக்குக் காய்ச்சல். அப்படியே இங்க வந்து நாற்காலிலயே உட்கார்ந்து கையில தலையச் சாய்ச்சு இருப்பதைப் பார்த்து ஒவ்வொருத்தரா வந்து ஒன்னும் பிரச்சனை இல்லையே என்று கேட்டுட்டுப் போனாங்க. நான் அவ்வளவு முடியாமலும் இங்க வந்து செய்ய வேண்டிய வேலைகளைப் பார்த்தேன். நீ நாலு நாள் சொல்லாம கொள்ளாம வராமல் இருந்தே, ஏன்னு சொல்லு'

'ஏன்னா, மாசம் பொறந்தா உங்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்கணும்னு பொறுப்பு எனக்கு இருக்கு. உனக்குத் தெரியும் நாலு நாள் லீவு எடுத்தாலும் ஒண்ணாம் தேதி கையில் சம்பளம் வந்துரும். நாலு நாளைக்கு காசைப் பிடித்தாலும், உடம்பு முடியாமத் தானே வராம இருந்தேன்னு சொன்னால் அதையும் கொடுத்து விடுவோம்னு ஒரு நம்பிக்கையும் உண்டு.'

'நான் வேலைக்கு வந்து நடக்க வேண்டியதைப் பார்த்தால்தான் காசு வந்து ஒண்ணாம் தேதி சம்பளம் போட முடியும்னு எனக்குத் தெரியும். அதான் நான் காய்ச்சல் அடிச்சாலும் இங்க வந்து உட்கார்ந்துக்கறேன். உனக்கு நாலு நாள் சொகுசு கேக்குது'

சின்னச் சின்ன நிகழ்வுகளில் உண்மைகளைச் சொல்லி விடும் திறமை அவருக்கு.

8 comments:

Thekkikattan|தெகா said...

உண்மையோ உண்மை :-)

மா சிவகுமார் said...

தெகா,

அனுபவ வேகம் தெரிகிறது உங்கள் பின்னூட்டத்தில் :-)

அன்புடன்,
மா சிவகுமார்

வவ்வால் said...

மா.சி,
உங்க சொந்த அனுபவத்தையே வேற ஒருவர் பேர சொல்லி போடுறிங்க போல இருக்கே :-))

நீங்களும் இப்படி தான் இருப்பீர்கள் என உங்கள் பதிவுகளிலேயே தெரிகிறதே , உடல் நிலை சரி இல்லை என்றாலும் அலுவலகம் போய் வருகிறீர்கள் என்பது!

வடுவூர் குமார் said...

உடம்பு சரியில்லை என்றால் இங்கு அலுவலகம் வரமுடியாது.
தன் தொழில் என்னும் போது "தலையே" வராவிட்டால் எப்படி?இது தான் சொந்த தொழில் செய்வதில் உள்ள சிறப்பு. :-))

Anonymous said...

When work is a pleasure, life is a joy! When work is a duty, life is slavery.

மா சிவகுமார் said...

வவ்வால்,

இது என் அனுபவம் இல்லை. எங்க வாடிக்கையாளர் ஒருவர் சொன்னது :-)

எனக்கு உடல்நிலை பொதுவாக மக்கர் செய்வதில்லை. முடியாவிட்டால் படுத்து விடுவேன்!

//இது தான் சொந்த தொழில் செய்வதில் உள்ள சிறப்பு. :-))//

சிறப்பும் பொறுப்பும் !

//When work is a pleasure, life is a joy! When work is a duty, life is slavery.//

முற்றிலும் ஒத்துப் போகிறேன். கடனே என்று எட்டு மணி நேரம் வேலை பார்த்து விட்டு அதில் ஈட்டிய பொருளை மாலையிலும் விடுமுறையிலும் மகிழ்ச்சிக்காக செலவிடுவது அடிமைத்தனம்.

பணியே மகிழ்ச்சியாக நினைத்து செயல்படுவது வாழ்க்கையையே ஒளி மயமாக ஆக்கி விடும்.

இப்படித்தானே சொல்கிறார் கார்க்கி ;-)

அன்புடன்,
மா சிவகுமார்

Unknown said...

got a good message

மா சிவகுமார் said...

கருத்துக்கு நன்றி தியாகராஜன். என்ன message என்று சொல்லுங்களேன்!

அன்புடன்,
மா சிவகுமார்