வங்கி, ரெயில்வேய்ஸ் எல்லாம் ஒரு சங்கிலித்தொடர் அமைப்பு, இதே போல டீக்கடையில் கணினி வைத்தால் வியாபாரம் கூடும் என்று சொல்ல முடியுமா?
//கணக்கு எழுத 3000 ரூபாய்கள் கொடுத்தா ஒரு ஆள் கிடைக்கும் அதுக்குப் போய் எதுக்கு கணினியும் கத்திரிக்காயும்' என்று ஒதுக்காமல், கணினி என்ற ஊழியனை, கருவியை நமது பணிகளில் ஈடுபடுத்தினால் கிடைக்கும் முன்னேற்றம் உன்னதமாக இருக்கும்.//
செய்யும் வர்த்தகம், அதன் புவியியல் ரீதியான இடங்கள் என இல்லாமல் எல்லாவற்றிற்கும் கணினி என்பது, சும்மா நாங்களும் கம்பியூட்டர் வச்சி இருக்கோம்ல என்று காட்டத்தான்!
ஒரு உள்ளூரில் மட்டும் வணிகம் செய்யும் சிறு நிறுவனத்திற்கு கணினித்தேவையே இல்லாத ஒன்று!
//அப்படி ஒரு அறிக்கையை மே மாதத்தில் எடுத்துப் பார்த்தால் முந்தைய ஆண்டு டிசம்பரில் (51வது வாரம்) போக வேண்டிய ஆர்டர் கூட இன்னும் முடிக்காமல் இருப்பது தெரிய வந்தது. அதற்கான பொருளும் உற்பத்திக்கு அனுப்பப்பட்டு விட்டிருக்கிறது. மற்ற அவசர ஆர்டர்களின் பின்னால் ஓடி இந்த ஆர்டரை கண்டு கொள்ளாமலேயே விட்டிருக்கிறார்கள்.//
இது இந்திய சூழலில் சாத்தியமே இல்லை, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பொருள் வரவில்லை எனில் , சம்பந்தப்பட்டவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள், தருவியா மாட்டியா? என சாமியாடிவிடுவார்கள்.
மேலும் பல சிறு நிறுவனங்களும் , மாதாந்திர உற்பத்தி என்று குறுகிய இலக்கை மனதில் வைத்தே செயல்படுவார்கள், அவர்களுக்கு கால் ஆண்டு, ஆண்டு உற்பத்தி, கணக்கு எல்லாம் பொருட்டே அல்ல!
அதாவது ஒரு வேலை ஒரு மாதத்தில் முடிய வேண்டும் என்றால் குறைந்த பட்சம் ஒன்றரை மாதத்திலாவது முடித்துவிடுவார்கள்!
வேலை முடிவது என்பது வேலைக்கொடுத்தவரின் பணம் தரும் போக்கை பொருத்ததே!
வேலையை முடித்தால் காசு உடனே வரும் என்றால் உடனே முடித்து தருவார்கள், காசு தர இழுத்தடிப்பவர் எனில் அவர் வந்து பணம் உடனே கிடைக்கும் முடிப்பா என சொன்னால் தான் நடக்கும்! இது தான் இந்திய சிறுத்தொழிலில் உள்ள நடைமுறை!
கணினி இருந்தால் தான் காரியம் ஆகும் என்பது எல்லாம் மிகப்பெரிய தொழில்களுக்கு வேண்டும் ஆனால் சொல்லலாம், எனக்கு தெரிந்து பல சிறு தொழிலதிபர்கள், சொந்தமாகவே யாருக்கு என்ன ஆர்டர், என்னிக்கு தரனும் என்று மனதிலே வைத்து செயல்படுகிறார்கள்!
எல்லாருக்குமே அந்த மாத நிலவரம் அத்துபடியாக தெரிந்து இருக்கிறது, யாரும் வந்து நினைவுறுத்த வேண்டிய அவசியமே இல்லை!
கணினி என்பது அடுத்தக்கட்ட நடவடிக்கை அல்லது ஒரு நவீன அமைப்பின் அங்கமாக காட்டிக்கொள்ளத்தான் சிறுத்தொழிலில் பயன்படுகிறது!
//செய்யும் வர்த்தகம், அதன் புவியியல் ரீதியான இடங்கள் என இல்லாமல் எல்லாவற்றிற்கும் கணினி என்பது, சும்மா நாங்களும் கம்பியூட்டர் வச்சி இருக்கோம்ல என்று காட்டத்தான்!
ஒரு உள்ளூரில் மட்டும் வணிகம் செய்யும் சிறு நிறுவனத்திற்கு கணினித்தேவையே இல்லாத ஒன்று!//
இல்லை வவ்வால்,
1. டீ கடைக்காரர் செல்பேசி வைத்திருக்கிறாரா? அதனால் பலன் இருக்கிறதா? 2. 1990களில் பொதுத் துறை வங்கி சங்கங்களும் இப்படி சொல்லித்தான் கணினி மயமாக்கத்தை எதிர்த்தார்கள். இப்போது நாம் எல்லோரும் பலனை கண்கூடாகப் பார்க்கிறோம். 3. சிறு வியாபாரிகளுக்குத் தேவையான பயன்பாடுகளே இல்லாமல் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு தொழிலாளியின் கையில் மேம்பட்ட தொழில்நுட்பம் கருவி கிடைக்கும் போது அவரது உற்பத்தித் திறன் அதிகமாகி, வருமானம் உயர்ந்து வாழ்க்கைத் தரம் உயரும். அது வெற்றிலைப் பாக்குக் கடைக்காரருக்கும் கிடைக்கும் படி செய்ய வேண்டும்.
டீ கடைக்கு கணினி வழி பயன்பாடுகள் எப்படி பயன்படும் என்று தனியாக எழுதுகிறேன்.
//இது இந்திய சூழலில் சாத்தியமே இல்லை, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பொருள் வரவில்லை எனில் , சம்பந்தப்பட்டவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள், தருவியா மாட்டியா? என சாமியாடிவிடுவார்கள்.//
நான் குறிப்பிட்ட நிறுவனத்தில், ஒரே வாடிக்கையாளருக்கு தொடர்ச்சியாக நூற்றுக் கணக்கான ஆர்டர்களை செய்து கொடுக்கும் தொழில். ஒரே பொருளுக்கு நாலைந்து ஆர்டர்கள் இருப்பது வழக்கம். மிகவும் குழப்பமான கணக்கு வழக்குகள். அங்கு நடைமுறையில் பார்த்ததைத்தான் சொன்னேன்.
//கணினி என்பது அடுத்தக்கட்ட நடவடிக்கை அல்லது ஒரு நவீன அமைப்பின் அங்கமாக காட்டிக்கொள்ளத்தான் சிறுத்தொழிலில் பயன்படுகிறது!//
அதற்குக் காரணம் கணினி பயன்பாடுகள் சிறு தொழிலுக்கு ஏற்றவாறு இல்லை. அந்த நிலை மாற முயற்சிக்க வேண்டும்.
மா.சி, //1. டீ கடைக்காரர் செல்பேசி வைத்திருக்கிறாரா? அதனால் பலன் இருக்கிறதா?//
பலன் இருக்கா என்று தெரியவில்லை, ஆனால் எனக்கு தெரிந்து இல்லை, ஏன் எனில் எனக்கு தெரிந்த டீ கடைக்காரரின் நம்பரை கூப்பிட்டு எங்க ஆபிச்க்கு 5 டீ என்றால் அதை செல் போனில் சொல்லனுமா என்கிறார்!
அப்படி இருக்க அதனால் அவருக்கு நன்மை என்று சொன்னால் எப்படி, நீங்கள் வேண்டுமானால் உங்களுக்கு தெரிந்த டீ கடைக்காரரின் செல் போனில் கூப்பிட்டு டீ ஆர்டர் கொடுங்கள் தெரியும்!
வங்கிகள் ஒரே இடத்தில் இல்லை அவை சன்கிலித்தொடர் அமைப்பு என சொல்லிவிட்டேன் பின்னரும் வங்கிகளில் ஏற்பட்ட மாற்றம் காண் என்றால் எப்படி?
உள்ளூரில் மட்டும் செயல் படும் ஒரு நிறுவனத்திர்கு கணினியால் என்ன பயன்? அதுவும் சிறு தொழிலாக இருந்தால்?
உண்மையில் பலரும் கணினி வாங்க காரணம் நாங்களும் நவீனமான முறையில் செயல் படுகிறோம் என்று காட்டத்தான், மற்றப்படி சிறு தொழிலதிபர்களுக்கு கணினியே தேவை இல்லை!
//வங்கிகள் ஒரே இடத்தில் இல்லை அவை சன்கிலித்தொடர் அமைப்பு என சொல்லிவிட்டேன் பின்னரும் வங்கிகளில் ஏற்பட்ட மாற்றம் காண் என்றால் எப்படி?//
அப்படி வங்கிகளை இணைக்கும் பயன்பாடுகள் மேலை நாட்டில் உருவானதை பார்த்து நமது வங்கிகளுக்கும் கொண்டு வந்து விட்டோம்.
நம்ம டீக்கடை போன்று அந்த நாடுகளில் இல்லாததால் பயன்பாடுகளே இல்லை. அதனால் புதிய நுட்பம் அவர்களுக்கு வேண்டாம் என்று முடிவு செய்து விட முடியாது.
//உண்மையில் பலரும் கணினி வாங்க காரணம் நாங்களும் நவீனமான முறையில் செயல் படுகிறோம் என்று காட்டத்தான், மற்றப்படி சிறு தொழிலதிபர்களுக்கு கணினியே தேவை இல்லை!//
உண்மைதான் இன்றைய நிலைமையில். மேலே சொன்னது போல நம்ம ஊர் சூழலுக்கு ஏற்றவாறு நம்ம ஊர் தொழில்களுக்குப் பொருந்தும் பயன்பாடுகளை நம்ம ஊர் மென்பொருள் நிறுவனங்கள் உருவாக்கினால், நல்ல பலன் கிடைக்கும். சிறு தொழிலதிபர்களின், டீக்கடை காரர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்.
//மேலே சொன்னது போல நம்ம ஊர் சூழலுக்கு ஏற்றவாறு நம்ம ஊர் தொழில்களுக்குப் பொருந்தும் பயன்பாடுகளை நம்ம ஊர் மென்பொருள் நிறுவனங்கள் உருவாக்கினால், நல்ல பலன் கிடைக்கும். சிறு தொழிலதிபர்களின், டீக்கடை காரர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்.//
என்ன தான் மென்பொருளை உருவாக்கினாலும் இங்கே பலருக்கும் நுகர்வோரை திருப்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லை.அப்படி இருக்கும் போது கணினி மட்டும் என்ன மாற்றம் தந்துவிடும், மனிதர்கள் மாறாதவரை!
உதாரணமாக அஞ்சப்பர் செட்டி நாடு ஹோட்டல் காரர்கள் , இலவச டோர் டெலிவரி என்று விளம்பரம் தருகிறார்கள், அவர்களுக்கு போன் செய்து ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி சொன்னால் , 250 ரூபாய்க்கு மேல் ஆர்டர் தந்தால் தான் டோர் டெலிவரி அதுவும் 5 கி.மீ ரேடியஸ் என்கிறார்கள்.
விளம்பரத்தில் அதெல்லாம் சொல்லவில்லையே என்றால், 80 ரூபாய்க்கு ஆர்டர் தந்தால் அதை எடுத்து வர எங்களுக்கு 50 ரூபாய் செலவாகும், பெரிய ஆர்டர் தான் வீட்டுக்கு தருவோம், குறைந்த பட்சம் 250 ரூபாய் என்கிறான். நீங்கள் என்னடாவென்றால் டீக்கடைக்காரன் செல் போன் வாங்கினாலே தொழில் அபிவிருத்தி ஆகிவிடும் என்கிறீர்கள்.
எனவே கம்பியூட்டர், இணையம் வழி சேவை செய்ய தயாராக இல்லாத தொழிலதிபர்கள் இருக்கும் இடத்தில் கம்பியூட்டர் வாங்கி வைத்தாலும் ஏதும் பலன் இல்லை என்பதே உண்மை.
உதாரணமாக ரெடிப் ஷாப்பிங்கில் ஒரு பொருளை 100 ரூபாய்க்கு வாங்கி பாருங்கள், டெலிவரி கட்டணம் 150 என்கிறார்கள். இது bazee.com என்று இருந்து ebay ஆக மாறிய வர்த்தக தளத்துக்கும் பொருந்தும்.
உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் இந்து பேப்பரில்(நீங்கள் இந்து படிப்பதை நிறுத்திவிட்டீர்கள் எனவே , தெரிந்து இருக்காது) அஞ்சப்பர் ஹோட்டல் விளம்பரம் வரும் அதில் வரும் எண்ணுக்கு போன் செய்து ஒரே ஒரு சிக்கன் பிரியாணி மட்டும் ஆர்டர் கொடுங்கள் , என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.
நாம பேப்பரில் வரும் சில ஆபர்களை விட மாட்டோம்ல .... அப்படியா செய்கிறானா பார்ப்போம் என்று போன் செய்து கலாய்த்து விடுவேன்.
//என்ன தான் மென்பொருளை உருவாக்கினாலும் இங்கே பலருக்கும் நுகர்வோரை திருப்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லை.அப்படி இருக்கும் போது கணினி மட்டும் என்ன மாற்றம் தந்துவிடும், மனிதர்கள் மாறாதவரை!//
//எனவே கம்பியூட்டர், இணையம் வழி சேவை செய்ய தயாராக இல்லாத தொழிலதிபர்கள் இருக்கும் இடத்தில் கம்பியூட்டர் வாங்கி வைத்தாலும் ஏதும் பலன் இல்லை என்பதே உண்மை.//
அதேதான். மனிதர்கள் மாற வேண்டும், கருவிகளும் பலன் தர ஆரம்பிக்கும்.
//நாம பேப்பரில் வரும் சில ஆபர்களை விட மாட்டோம்ல .... அப்படியா செய்கிறானா பார்ப்போம் என்று போன் செய்து கலாய்த்து விடுவேன்.//
வவ்வால் //இங்கே பலருக்கும் நுகர்வோரை திருப்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லை.//
இது மென்பொருள் சார்ந்த விசயமல்ல attitude சார்ந்தது.
பெரும்பாலன நம் மக்களுக்கு அது இல்லை என்பது உண்மை.
நல்ல சேவையை அடுத்தவரிடம் எதிர்பார்க்கும் ஒருவன், அவன் செய்யும் வேலையில் நல்ல சேவையை அடுத்தவனுக்கு வழங்குவது இல்லை.
பெற மட்டுமே விழைகிறான், கொடுக்க நினைப்பது இல்லை.
நாயிற்கு டை கட்டிவிட்டாலும் அது டை-கட்டப்பட்ட நாயாகவே இருக்குமே தவிர நாகரீக கனவானாக மாறாது.
என்னதான் பகட்டான விளம்பரங்கள் இருந்தாலும் பணம் இருந்தாலும் டி.நகர் அண்ணாச்சிகளின் கஸ்டமர் சேவை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
//நீங்கள் என்னடாவென்றால் டீக்கடைக்காரன் செல் போன் வாங்கினாலே தொழில் அபிவிருத்தி ஆகிவிடும் என்கிறீர்கள்.//
:-)))
**
//நாம பேப்பரில் வரும் சில ஆபர்களை ...//
*போட்டு நுண்ணிய எழுத்துகளில் வரும் விளக்கங்களையும் பார்ப்பது சில குப்பை ஆபர்களை ஒதுக்க உதவும். அப்படி டிஸ்கிளைமர் குறந்த பட்ச நுகர்வோர் நலன் சார்ந்த அறிவு வேண்டும். அஞ்சப்பர் செட்டி நாடு - வகையறாக்கள் அதையாவது செய்யலாம்.
***
அறிவியல் வளர்ச்சி என்பது வேறு நுகர்வோர் சார்ந்த attitude மற்றும் நல்ல பண்புகள் வேறு.
மா.சி, //அதேதான். மனிதர்கள் மாற வேண்டும், கருவிகளும் பலன் தர ஆரம்பிக்கும்.//
நீங்கள் சொல்வதுலாம் உடோப்பியன் எண்ணம். :-))
ஜாதி, மத துவேஷம் இல்லைனா கூட சந்தோஷமா, சுபிட்ஷமா நாடு இருக்கும் அதுக்கும் மனிதர்கள் மாறனும், மாறினாங்களா என்ன, அப்படியே தான் பல தலைமுறைக்கல்விக்கு பின்னரும் இருக்காங்க!
ஒரு அபார்ட்மெண்ட் கட்டி வரும் பில்டர். பிளாட் விற்பனைக்குனு என்று விளம்பரம் தந்திருந்தார். அங்கே போய் ஒரு நண்பர் கேட்டதுக்கு , நீங்க வெஜ்ஜிடேரியனா என்று கேட்டாராம், ஆமாம்னு சொன்னதுக்கு நீங்க அய்யரா, அய்யங்காரனு கேட்டராம், இல்லைனு சொன்னதும் , நான் கட்டி விற்கிற பிளாட் எல்லாம் , அய்யர், அய்யங்காருக்கு மட்டும் தான் விற்பேன். இல்லைனு சொல்லிட்டார்.
உங்களுக்கு அந்த பில்டர் முகவரி வேண்டும் எனில் நாளைக்கே கேட்டு வாங்கி தருகிறேன்.
இந்த லட்சணத்தில் தான் நம்ம நாட்டில் சேவை இருக்கு.
எனவே மனிதர்கள் மாறிய பின்னால் வேண்டுமானால் மென்பொருள், மற்ற தொழில்நுட்பம் சேவை, தொழிலில் உண்மையான முன்னேர்றம் கொண்டுவரும். -------------- கல்வெட்டு, //அறிவியல் வளர்ச்சி என்பது வேறு நுகர்வோர் சார்ந்த attitude மற்றும் நல்ல பண்புகள் வேறு.//
நல்லா சொன்னிங்க, அது மாறத நிலையில் ஒரு செல்போனோ, மென்பொருளோ என்ன மாற்றத்தை உண்டாக்கிவிடும் என்று கேட்கிறேன்.
மிகப்பெரிய வியாபார நிறுவனங்கள் மட்டுமே இதில் பலன் அடையும். சிறு நிருவனங்கள் எல்லாம் இன்னமும் மூட நம்பிக்கை, இத்துப்போன கொள்கை என்று தான் கட்டிக்கொண்டு மாறடிக்கின்றன.
இரட்டை தம்ளர் வைத்திருக்கும் ஒரு டீக்கடைக்காரர் கையில் செல் போன் இருப்பதால் என்ன பயன்?
மதுரைப்பக்கம் போனால் சிறிய அளவிலான ஹோட்டல்களில் சாப்பிட்ட இலையை எடுக்க சொல்கிறார்கள்.சென்னைப்பக்கம் இருந்து போய் இருந்த எனக்கு புதிய மோசமான அனுபவம்.எனவே தொழில்நுட்பங்கள் எல்லாம் சிறிய தொழிலில் பெரிய புரட்சியை உண்டாக்கி விடாது! அந்த மக்களுக்கு அது புரியாதவரையில்!
நான் இந்த "சிறு தொழில் நிறுவன வளத்துக்குக் கணினி பயன்பாடு உண்டா? இல்லையா?" என்ற சுவாரசியமான பட்டி மன்றத்துக்கு வர கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது! மன்னிக்கவும்.
சிறு நிறுவனங்களில் கூட வரவு செலவு கணக்கு போட்டு அறிக்கை தயாரிக்க மென்பொருள் செயல்படுத்தினால் பலன் கிடைக்கும் என்று மா சிவகுமார் அவர்கள் நடைமுறையில் பார்த்ததை வைத்து வாதாட,
இது இந்திய சூழலில் சாத்தியமே இல்லை என வவ்வால் அவர்கள் அவருக்கே உரித்தான தனிப்பட்ட கண்ணோட்டத்துடன் ('தலை கீழாய்' என்று நான் சொல்லவில்லை அவருடைய Profile சொல்கிறது :) ) அனல் பறக்க பிரதி வாதம் புரிய,
காலம் என்ற நடுவர் முடிவு அறிவித்து விட்டார்: http://mirror.tallysolutions.com/Downloads/Tallyinthenews/We%20Plan%20To%20Wipe%20The%20Competition%20Out%20-%20CRN.pdf
டாலி நிறுவன நிர்வாக இயக்குநர் பாரத் கோயங்கா சொல்கிறார், சட்டத்திற்கு புறம்பான மென்பொருள் பிரதிகளையும் சேர்த்து, மொத்தம் 32 லட்சம் பேர் டாலி கணக்கு வைப்பு மென்பொருள் உபயோகம் செய்கிறார்கள் என்று. இத்துடன் ஸ்பிரெட்ஷீட் உபயோகம் செய்கிறவர்களையும் (ஐந்து, பத்து மடங்கு?) சேர்த்தால் மிகச்சிறு தொழில் நிறுவனங்களும் கணினி பயன்பாடு செய்கிறார்கள் என்றே தெரிகிறது.
4 ஆண்டுகளில் கணினி பயன்பாடு அதிகரித்திருந்தாலும், அன்றாட பயன்பாடுகளுக்கு (ERP) கணினி பயன்படுத்துவது இன்னும் முழுமையாக வரவில்லை. accountsக்கு டேலி, மின்னஞ்சல், பயன்படுத்துவதோடு பெரும்பாலும் சிறு/குறு நிறுவனங்களின் கணினி பயன்பாடு நிற்கிறது.
இனி வரும் ஆண்டுகளில் மாறுதல் இன்னும் வரும் என்று எதிர்பார்ப்போம்.
நீங்கள் சிறு நிறுவனங்கள் உயர் மட்டத்தில் மென்பொருள் உபயோகத்தை செம்மையாக்கலாம் என்று சொல்கிறீர்கள். இப்பொழுது ERP-க்கு கட்டற்ற மென்பொருள் OpenBravo போன்று பல உள்ளன. நல்ல சிந்தனை.
நான் குறுந்தொழில் செய்வோர் விரிதாள் அல்லது கைக்கணக்கு எழுதாமல் நியூகாசு (GnuCash)உபயோகம் செய்ய இயலும் என்று நினைக்கிறேன். இது பற்றி உங்கள் கருத்து?
நான் எனது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்த முயற்சித்தது வரை நியூ கேசு (எனக்கு) ஒத்து வரவில்லை.
நிறுவனங்களில் ERP செயல்படுத்திய அனுபவங்களிலிருந்து பார்க்கும் போது, குறிப்பிட்ட துறைக்கு, நம்ம ஊர் நிறுவனங்கள் தொழில் செய்யும் முறைக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்ட மென்பொருட்களைத்தான் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.
ஐரோப்பிய, அமெரிக்க, அல்லது ஆசுதிரேலிய தேவைகளுக்கு வடிவமைக்கப்பட்ட மென்பொருட்கள் மேற்கத்திய பாணியில் செயல்படும் பெரு நிறுவனங்களுக்கு மட்டும் (அதுவும் சிலவற்றுக்கு மட்டும்) பொருந்தி வரலாம்.
இந்தத் தளத்தில் புதிய மென்பொருட்களை வடிவமைத்து சேவை அளிக்க, இந்திய மென்பொருள் தொழிலாளர்கள், முனைவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு காத்திருக்கிறது. எல்லோரும் அமெரிக்க டாலர்களுக்கு பின்புதான் ஓட வேண்டியிருப்பது வருந்தத்தக்க நிலைமை.
14 comments:
வங்கி, ரெயில்வேய்ஸ் எல்லாம் ஒரு சங்கிலித்தொடர் அமைப்பு, இதே போல டீக்கடையில் கணினி வைத்தால் வியாபாரம் கூடும் என்று சொல்ல முடியுமா?
//கணக்கு எழுத 3000 ரூபாய்கள் கொடுத்தா ஒரு ஆள் கிடைக்கும் அதுக்குப் போய் எதுக்கு கணினியும் கத்திரிக்காயும்' என்று ஒதுக்காமல், கணினி என்ற ஊழியனை, கருவியை நமது பணிகளில் ஈடுபடுத்தினால் கிடைக்கும் முன்னேற்றம் உன்னதமாக இருக்கும்.//
செய்யும் வர்த்தகம், அதன் புவியியல் ரீதியான இடங்கள் என இல்லாமல் எல்லாவற்றிற்கும் கணினி என்பது, சும்மா நாங்களும் கம்பியூட்டர் வச்சி இருக்கோம்ல என்று காட்டத்தான்!
ஒரு உள்ளூரில் மட்டும் வணிகம் செய்யும் சிறு நிறுவனத்திற்கு கணினித்தேவையே இல்லாத ஒன்று!
//அப்படி ஒரு அறிக்கையை மே மாதத்தில் எடுத்துப் பார்த்தால் முந்தைய ஆண்டு டிசம்பரில் (51வது வாரம்) போக வேண்டிய ஆர்டர் கூட இன்னும் முடிக்காமல் இருப்பது தெரிய வந்தது. அதற்கான பொருளும் உற்பத்திக்கு அனுப்பப்பட்டு விட்டிருக்கிறது. மற்ற அவசர ஆர்டர்களின் பின்னால் ஓடி இந்த ஆர்டரை கண்டு கொள்ளாமலேயே விட்டிருக்கிறார்கள்.//
இது இந்திய சூழலில் சாத்தியமே இல்லை, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பொருள் வரவில்லை எனில் , சம்பந்தப்பட்டவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள், தருவியா மாட்டியா? என சாமியாடிவிடுவார்கள்.
மேலும் பல சிறு நிறுவனங்களும் , மாதாந்திர உற்பத்தி என்று குறுகிய இலக்கை மனதில் வைத்தே செயல்படுவார்கள், அவர்களுக்கு கால் ஆண்டு, ஆண்டு உற்பத்தி, கணக்கு எல்லாம் பொருட்டே அல்ல!
அதாவது ஒரு வேலை ஒரு மாதத்தில் முடிய வேண்டும் என்றால் குறைந்த பட்சம் ஒன்றரை மாதத்திலாவது முடித்துவிடுவார்கள்!
வேலை முடிவது என்பது வேலைக்கொடுத்தவரின் பணம் தரும் போக்கை பொருத்ததே!
வேலையை முடித்தால் காசு உடனே வரும் என்றால் உடனே முடித்து தருவார்கள், காசு தர இழுத்தடிப்பவர் எனில் அவர் வந்து பணம் உடனே கிடைக்கும் முடிப்பா என சொன்னால் தான் நடக்கும்! இது தான் இந்திய சிறுத்தொழிலில் உள்ள நடைமுறை!
கணினி இருந்தால் தான் காரியம் ஆகும் என்பது எல்லாம் மிகப்பெரிய தொழில்களுக்கு வேண்டும் ஆனால் சொல்லலாம், எனக்கு தெரிந்து பல சிறு தொழிலதிபர்கள், சொந்தமாகவே யாருக்கு என்ன ஆர்டர், என்னிக்கு தரனும் என்று மனதிலே வைத்து செயல்படுகிறார்கள்!
எல்லாருக்குமே அந்த மாத நிலவரம் அத்துபடியாக தெரிந்து இருக்கிறது, யாரும் வந்து நினைவுறுத்த வேண்டிய அவசியமே இல்லை!
கணினி என்பது அடுத்தக்கட்ட நடவடிக்கை அல்லது ஒரு நவீன அமைப்பின் அங்கமாக காட்டிக்கொள்ளத்தான் சிறுத்தொழிலில் பயன்படுகிறது!
வாவ்! நீங்க இப்படி யோசித்தால், வவ்வால் டீகைடையை உதாரணம் காட்டுகிறார்.
//செய்யும் வர்த்தகம், அதன் புவியியல் ரீதியான இடங்கள் என இல்லாமல் எல்லாவற்றிற்கும் கணினி என்பது, சும்மா நாங்களும் கம்பியூட்டர் வச்சி இருக்கோம்ல என்று காட்டத்தான்!
ஒரு உள்ளூரில் மட்டும் வணிகம் செய்யும் சிறு நிறுவனத்திற்கு கணினித்தேவையே இல்லாத ஒன்று!//
இல்லை வவ்வால்,
1. டீ கடைக்காரர் செல்பேசி வைத்திருக்கிறாரா? அதனால் பலன் இருக்கிறதா?
2. 1990களில் பொதுத் துறை வங்கி சங்கங்களும் இப்படி சொல்லித்தான் கணினி மயமாக்கத்தை எதிர்த்தார்கள். இப்போது நாம் எல்லோரும் பலனை கண்கூடாகப் பார்க்கிறோம்.
3. சிறு வியாபாரிகளுக்குத் தேவையான பயன்பாடுகளே இல்லாமல் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு தொழிலாளியின் கையில் மேம்பட்ட தொழில்நுட்பம் கருவி கிடைக்கும் போது அவரது உற்பத்தித் திறன் அதிகமாகி, வருமானம் உயர்ந்து வாழ்க்கைத் தரம் உயரும். அது வெற்றிலைப் பாக்குக் கடைக்காரருக்கும் கிடைக்கும் படி செய்ய வேண்டும்.
டீ கடைக்கு கணினி வழி பயன்பாடுகள் எப்படி பயன்படும் என்று தனியாக எழுதுகிறேன்.
//இது இந்திய சூழலில் சாத்தியமே இல்லை, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பொருள் வரவில்லை எனில் , சம்பந்தப்பட்டவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள், தருவியா மாட்டியா? என சாமியாடிவிடுவார்கள்.//
நான் குறிப்பிட்ட நிறுவனத்தில், ஒரே வாடிக்கையாளருக்கு தொடர்ச்சியாக நூற்றுக் கணக்கான ஆர்டர்களை செய்து கொடுக்கும் தொழில். ஒரே பொருளுக்கு நாலைந்து ஆர்டர்கள் இருப்பது வழக்கம். மிகவும் குழப்பமான கணக்கு வழக்குகள். அங்கு நடைமுறையில் பார்த்ததைத்தான் சொன்னேன்.
//கணினி என்பது அடுத்தக்கட்ட நடவடிக்கை அல்லது ஒரு நவீன அமைப்பின் அங்கமாக காட்டிக்கொள்ளத்தான் சிறுத்தொழிலில் பயன்படுகிறது!//
அதற்குக் காரணம் கணினி பயன்பாடுகள் சிறு தொழிலுக்கு ஏற்றவாறு இல்லை. அந்த நிலை மாற முயற்சிக்க வேண்டும்.
வாங்க குமார்
//நீங்க இப்படி யோசித்தால், வவ்வால் டீகைடையை உதாரணம் காட்டுகிறார்.//
:-)
அன்புடன்,
மா சிவகுமார்
மா.சி,
//1. டீ கடைக்காரர் செல்பேசி வைத்திருக்கிறாரா? அதனால் பலன் இருக்கிறதா?//
பலன் இருக்கா என்று தெரியவில்லை, ஆனால் எனக்கு தெரிந்து இல்லை, ஏன் எனில் எனக்கு தெரிந்த டீ கடைக்காரரின் நம்பரை கூப்பிட்டு எங்க ஆபிச்க்கு 5 டீ என்றால் அதை செல் போனில் சொல்லனுமா என்கிறார்!
அப்படி இருக்க அதனால் அவருக்கு நன்மை என்று சொன்னால் எப்படி, நீங்கள் வேண்டுமானால் உங்களுக்கு தெரிந்த டீ கடைக்காரரின் செல் போனில் கூப்பிட்டு டீ ஆர்டர் கொடுங்கள் தெரியும்!
வங்கிகள் ஒரே இடத்தில் இல்லை அவை சன்கிலித்தொடர் அமைப்பு என சொல்லிவிட்டேன் பின்னரும் வங்கிகளில் ஏற்பட்ட மாற்றம் காண் என்றால் எப்படி?
உள்ளூரில் மட்டும் செயல் படும் ஒரு நிறுவனத்திர்கு கணினியால் என்ன பயன்? அதுவும் சிறு தொழிலாக இருந்தால்?
உண்மையில் பலரும் கணினி வாங்க காரணம் நாங்களும் நவீனமான முறையில் செயல் படுகிறோம் என்று காட்டத்தான், மற்றப்படி சிறு தொழிலதிபர்களுக்கு கணினியே தேவை இல்லை!
//வங்கிகள் ஒரே இடத்தில் இல்லை அவை சன்கிலித்தொடர் அமைப்பு என சொல்லிவிட்டேன் பின்னரும் வங்கிகளில் ஏற்பட்ட மாற்றம் காண் என்றால் எப்படி?//
அப்படி வங்கிகளை இணைக்கும் பயன்பாடுகள் மேலை நாட்டில் உருவானதை பார்த்து நமது வங்கிகளுக்கும் கொண்டு வந்து விட்டோம்.
நம்ம டீக்கடை போன்று அந்த நாடுகளில் இல்லாததால் பயன்பாடுகளே இல்லை. அதனால் புதிய நுட்பம் அவர்களுக்கு வேண்டாம் என்று முடிவு செய்து விட முடியாது.
//உண்மையில் பலரும் கணினி வாங்க காரணம் நாங்களும் நவீனமான முறையில் செயல் படுகிறோம் என்று காட்டத்தான், மற்றப்படி சிறு தொழிலதிபர்களுக்கு கணினியே தேவை இல்லை!//
உண்மைதான் இன்றைய நிலைமையில். மேலே சொன்னது போல நம்ம ஊர் சூழலுக்கு ஏற்றவாறு நம்ம ஊர் தொழில்களுக்குப் பொருந்தும் பயன்பாடுகளை நம்ம ஊர் மென்பொருள் நிறுவனங்கள் உருவாக்கினால், நல்ல பலன் கிடைக்கும். சிறு தொழிலதிபர்களின், டீக்கடை காரர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்.
அன்புடன்,
மா சிவகுமார்
மா.சி,
//மேலே சொன்னது போல நம்ம ஊர் சூழலுக்கு ஏற்றவாறு நம்ம ஊர் தொழில்களுக்குப் பொருந்தும் பயன்பாடுகளை நம்ம ஊர் மென்பொருள் நிறுவனங்கள் உருவாக்கினால், நல்ல பலன் கிடைக்கும். சிறு தொழிலதிபர்களின், டீக்கடை காரர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்.//
என்ன தான் மென்பொருளை உருவாக்கினாலும் இங்கே பலருக்கும் நுகர்வோரை திருப்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லை.அப்படி இருக்கும் போது கணினி மட்டும் என்ன மாற்றம் தந்துவிடும், மனிதர்கள் மாறாதவரை!
உதாரணமாக அஞ்சப்பர் செட்டி நாடு ஹோட்டல் காரர்கள் , இலவச டோர் டெலிவரி என்று விளம்பரம் தருகிறார்கள், அவர்களுக்கு போன் செய்து ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி சொன்னால் , 250 ரூபாய்க்கு மேல் ஆர்டர் தந்தால் தான் டோர் டெலிவரி அதுவும் 5 கி.மீ ரேடியஸ் என்கிறார்கள்.
விளம்பரத்தில் அதெல்லாம் சொல்லவில்லையே என்றால், 80 ரூபாய்க்கு ஆர்டர் தந்தால் அதை எடுத்து வர எங்களுக்கு 50 ரூபாய் செலவாகும், பெரிய ஆர்டர் தான் வீட்டுக்கு தருவோம், குறைந்த பட்சம் 250 ரூபாய் என்கிறான். நீங்கள் என்னடாவென்றால் டீக்கடைக்காரன் செல் போன் வாங்கினாலே தொழில் அபிவிருத்தி ஆகிவிடும் என்கிறீர்கள்.
எனவே கம்பியூட்டர், இணையம் வழி சேவை செய்ய தயாராக இல்லாத தொழிலதிபர்கள் இருக்கும் இடத்தில் கம்பியூட்டர் வாங்கி வைத்தாலும் ஏதும் பலன் இல்லை என்பதே உண்மை.
உதாரணமாக ரெடிப் ஷாப்பிங்கில் ஒரு பொருளை 100 ரூபாய்க்கு வாங்கி பாருங்கள், டெலிவரி கட்டணம் 150 என்கிறார்கள். இது bazee.com என்று இருந்து ebay ஆக மாறிய வர்த்தக தளத்துக்கும் பொருந்தும்.
உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் இந்து பேப்பரில்(நீங்கள் இந்து படிப்பதை நிறுத்திவிட்டீர்கள் எனவே , தெரிந்து இருக்காது) அஞ்சப்பர் ஹோட்டல் விளம்பரம் வரும் அதில் வரும் எண்ணுக்கு போன் செய்து ஒரே ஒரு சிக்கன் பிரியாணி மட்டும் ஆர்டர் கொடுங்கள் , என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.
நாம பேப்பரில் வரும் சில ஆபர்களை விட மாட்டோம்ல .... அப்படியா செய்கிறானா பார்ப்போம் என்று போன் செய்து கலாய்த்து விடுவேன்.
//என்ன தான் மென்பொருளை உருவாக்கினாலும் இங்கே பலருக்கும் நுகர்வோரை திருப்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லை.அப்படி இருக்கும் போது கணினி மட்டும் என்ன மாற்றம் தந்துவிடும், மனிதர்கள் மாறாதவரை!//
//எனவே கம்பியூட்டர், இணையம் வழி சேவை செய்ய தயாராக இல்லாத தொழிலதிபர்கள் இருக்கும் இடத்தில் கம்பியூட்டர் வாங்கி வைத்தாலும் ஏதும் பலன் இல்லை என்பதே உண்மை.//
அதேதான். மனிதர்கள் மாற வேண்டும், கருவிகளும் பலன் தர ஆரம்பிக்கும்.
//நாம பேப்பரில் வரும் சில ஆபர்களை விட மாட்டோம்ல .... அப்படியா செய்கிறானா பார்ப்போம் என்று போன் செய்து கலாய்த்து விடுவேன்.//
:-)
அன்புடன்,
மா சிவகுமார்
வவ்வால்
//இங்கே பலருக்கும் நுகர்வோரை திருப்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லை.//
இது மென்பொருள் சார்ந்த விசயமல்ல attitude சார்ந்தது.
பெரும்பாலன நம் மக்களுக்கு அது இல்லை என்பது உண்மை.
நல்ல சேவையை அடுத்தவரிடம் எதிர்பார்க்கும் ஒருவன், அவன் செய்யும் வேலையில் நல்ல சேவையை அடுத்தவனுக்கு வழங்குவது இல்லை.
பெற மட்டுமே விழைகிறான், கொடுக்க நினைப்பது இல்லை.
நாயிற்கு டை கட்டிவிட்டாலும் அது டை-கட்டப்பட்ட நாயாகவே இருக்குமே தவிர நாகரீக கனவானாக மாறாது.
என்னதான் பகட்டான விளம்பரங்கள் இருந்தாலும் பணம் இருந்தாலும் டி.நகர் அண்ணாச்சிகளின் கஸ்டமர் சேவை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
//நீங்கள் என்னடாவென்றால் டீக்கடைக்காரன் செல் போன் வாங்கினாலே தொழில் அபிவிருத்தி ஆகிவிடும் என்கிறீர்கள்.//
:-)))
**
//நாம பேப்பரில் வரும் சில ஆபர்களை ...//
*போட்டு நுண்ணிய எழுத்துகளில் வரும் விளக்கங்களையும் பார்ப்பது சில குப்பை ஆபர்களை ஒதுக்க உதவும். அப்படி டிஸ்கிளைமர் குறந்த பட்ச நுகர்வோர் நலன் சார்ந்த அறிவு வேண்டும். அஞ்சப்பர் செட்டி நாடு - வகையறாக்கள் அதையாவது செய்யலாம்.
***
அறிவியல் வளர்ச்சி என்பது வேறு நுகர்வோர் சார்ந்த attitude மற்றும் நல்ல பண்புகள் வேறு.
மா.சி,
//அதேதான். மனிதர்கள் மாற வேண்டும், கருவிகளும் பலன் தர ஆரம்பிக்கும்.//
நீங்கள் சொல்வதுலாம் உடோப்பியன் எண்ணம். :-))
ஜாதி, மத துவேஷம் இல்லைனா கூட சந்தோஷமா, சுபிட்ஷமா நாடு இருக்கும் அதுக்கும் மனிதர்கள் மாறனும், மாறினாங்களா என்ன, அப்படியே தான் பல தலைமுறைக்கல்விக்கு பின்னரும் இருக்காங்க!
ஒரு அபார்ட்மெண்ட் கட்டி வரும் பில்டர். பிளாட் விற்பனைக்குனு என்று விளம்பரம் தந்திருந்தார். அங்கே போய் ஒரு நண்பர் கேட்டதுக்கு , நீங்க வெஜ்ஜிடேரியனா என்று கேட்டாராம், ஆமாம்னு சொன்னதுக்கு நீங்க அய்யரா, அய்யங்காரனு கேட்டராம், இல்லைனு சொன்னதும் , நான் கட்டி விற்கிற பிளாட் எல்லாம் , அய்யர், அய்யங்காருக்கு மட்டும் தான் விற்பேன். இல்லைனு சொல்லிட்டார்.
உங்களுக்கு அந்த பில்டர் முகவரி வேண்டும் எனில் நாளைக்கே கேட்டு வாங்கி தருகிறேன்.
இந்த லட்சணத்தில் தான் நம்ம நாட்டில் சேவை இருக்கு.
எனவே மனிதர்கள் மாறிய பின்னால் வேண்டுமானால் மென்பொருள், மற்ற தொழில்நுட்பம் சேவை, தொழிலில் உண்மையான முன்னேர்றம் கொண்டுவரும்.
--------------
கல்வெட்டு,
//அறிவியல் வளர்ச்சி என்பது வேறு நுகர்வோர் சார்ந்த attitude மற்றும் நல்ல பண்புகள் வேறு.//
நல்லா சொன்னிங்க, அது மாறத நிலையில் ஒரு செல்போனோ, மென்பொருளோ என்ன மாற்றத்தை உண்டாக்கிவிடும் என்று கேட்கிறேன்.
மிகப்பெரிய வியாபார நிறுவனங்கள் மட்டுமே இதில் பலன் அடையும். சிறு நிருவனங்கள் எல்லாம் இன்னமும் மூட நம்பிக்கை, இத்துப்போன கொள்கை என்று தான் கட்டிக்கொண்டு மாறடிக்கின்றன.
இரட்டை தம்ளர் வைத்திருக்கும் ஒரு டீக்கடைக்காரர் கையில் செல் போன் இருப்பதால் என்ன பயன்?
மதுரைப்பக்கம் போனால் சிறிய அளவிலான ஹோட்டல்களில் சாப்பிட்ட இலையை எடுக்க சொல்கிறார்கள்.சென்னைப்பக்கம் இருந்து போய் இருந்த எனக்கு புதிய மோசமான அனுபவம்.எனவே தொழில்நுட்பங்கள் எல்லாம் சிறிய தொழிலில் பெரிய புரட்சியை உண்டாக்கி விடாது! அந்த மக்களுக்கு அது புரியாதவரையில்!
வவ்வால்,
// உங்களுக்கு அந்த பில்டர் முகவரி வேண்டும் எனில் நாளைக்கே கேட்டு வாங்கி தருகிறேன்//
அதெல்லாம் வேண்டாம் :-))
இப்படி ஒரு குரூப்பே இருக்கு
Exclusive Brahmin colony near Hyderabad
http://www.dnaindia.com/report.asp?newsid=1136302
http://www.dhanwantri.org/
நான் இந்த "சிறு தொழில் நிறுவன வளத்துக்குக் கணினி பயன்பாடு உண்டா? இல்லையா?" என்ற சுவாரசியமான பட்டி மன்றத்துக்கு வர கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது! மன்னிக்கவும்.
சிறு நிறுவனங்களில் கூட வரவு செலவு கணக்கு போட்டு அறிக்கை தயாரிக்க மென்பொருள் செயல்படுத்தினால் பலன் கிடைக்கும் என்று மா சிவகுமார் அவர்கள் நடைமுறையில் பார்த்ததை வைத்து வாதாட,
இது இந்திய சூழலில் சாத்தியமே இல்லை என வவ்வால் அவர்கள் அவருக்கே உரித்தான தனிப்பட்ட கண்ணோட்டத்துடன் ('தலை கீழாய்' என்று நான் சொல்லவில்லை அவருடைய Profile சொல்கிறது :) ) அனல் பறக்க பிரதி வாதம் புரிய,
காலம் என்ற நடுவர் முடிவு அறிவித்து விட்டார்:
http://mirror.tallysolutions.com/Downloads/Tallyinthenews/We%20Plan%20To%20Wipe%20The%20Competition%20Out%20-%20CRN.pdf
டாலி நிறுவன நிர்வாக இயக்குநர் பாரத் கோயங்கா சொல்கிறார், சட்டத்திற்கு புறம்பான மென்பொருள் பிரதிகளையும் சேர்த்து, மொத்தம் 32 லட்சம் பேர் டாலி கணக்கு வைப்பு மென்பொருள் உபயோகம் செய்கிறார்கள் என்று. இத்துடன் ஸ்பிரெட்ஷீட் உபயோகம் செய்கிறவர்களையும் (ஐந்து, பத்து மடங்கு?) சேர்த்தால் மிகச்சிறு தொழில் நிறுவனங்களும் கணினி பயன்பாடு செய்கிறார்கள் என்றே தெரிகிறது.
வணக்கம் அசோகன்,
4 ஆண்டுகளில் கணினி பயன்பாடு அதிகரித்திருந்தாலும், அன்றாட பயன்பாடுகளுக்கு (ERP) கணினி பயன்படுத்துவது இன்னும் முழுமையாக வரவில்லை. accountsக்கு டேலி, மின்னஞ்சல், பயன்படுத்துவதோடு பெரும்பாலும் சிறு/குறு நிறுவனங்களின் கணினி பயன்பாடு நிற்கிறது.
இனி வரும் ஆண்டுகளில் மாறுதல் இன்னும் வரும் என்று எதிர்பார்ப்போம்.
அன்புடன்,
மா சிவகுமார்
வணக்கம் சிவகுமார்,
நீங்கள் சிறு நிறுவனங்கள் உயர் மட்டத்தில் மென்பொருள் உபயோகத்தை செம்மையாக்கலாம் என்று சொல்கிறீர்கள். இப்பொழுது ERP-க்கு கட்டற்ற மென்பொருள் OpenBravo போன்று பல உள்ளன. நல்ல சிந்தனை.
நான் குறுந்தொழில் செய்வோர் விரிதாள் அல்லது கைக்கணக்கு எழுதாமல் நியூகாசு (GnuCash)உபயோகம் செய்ய இயலும் என்று நினைக்கிறேன். இது பற்றி உங்கள் கருத்து?
அன்புடன்,
இரா. அசோகன்

Post a Comment