இருந்த இடத்திலிருந்தே நிறுவனத்தின் உரிமையாளரும், உயர்நிலை மேலாளர்களும் தமக்குத் தேவையான விபரங்களைப் பெற முடிந்தால் பணம் மிச்சமடைவதுடன் புதிய வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.
இதை மனதில் கொண்டு
- தோல் விற்பவர்கள் அது தொடர்பான விபரங்களை இணையத்தில் இணைக்கப்பட்ட கணினி ஒன்றில் போட்டு வைக்க வேண்டும்.
- வாடிக்கையாளர் தனது இடத்திலிருந்து தனக்கு அளிக்கப்பட்ட அனுமதிக் கணக்கின் மூலம் தனக்கு அனுமதிக்கப்பட்ட விபரங்களை மட்டும் அணுக முடியும்.
- நிறுவனத்தின் வெவ்வேறு பகுதியில் இருக்கும் ஊழியர்கள் தமது கையில் உருவாகும் விபரங்களை உள்ளிட்டு விட்டால் உரிமையாளர் தலைமை அலுவலகத்திலிருந்த படியே அறிக்கைகளைப் பார்த்துக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்துடன் சென்னைக்கு வந்து ஒரு மென்பொருள் நிறுவனத்தில் இதற்குத் தேவையான மென்பொருளை உருவாக்கித் தரும்படிக் கேட்டேன். நிறுவனத்தின் பெயர், சின்னம் எல்லாம் முடிவு செய்தோம்.
இணையத்தில் சேவை அளிக்கும் ஒரு நிறுவனத்தின் இணைய வழங்கியில் சிறிது இடம் வாடகைக்கு எடுத்து (ஆண்டுக்கு 5000 ரூபாய்) இந்த பயன்பாட்டைப் போட்டு வைத்தோம்.
பயன்படுத்த வேண்டிய மென்பொருட்கள் திறமூல/பரிநிரல் மென்பொருட்களாக (Free Software) இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.
- இணையத்தில் சேர்க்கப்பட்டிருப்பதால் லினக்சு போன்ற இயங்குதளங்களின் உறுதியான பாதுகாப்பு நடைமுறைகளும், நச்சு நிரல்களை அனுமதிக்காத தீச்சுவர் வசதிகளும் முக்கியமாகப் பட்டன.
- இணைய பயன்பாடாக இருந்ததால் எந்த ஒரு இணைய உலாவி மூலமும் பயன்படும் வண்ணம், போஸ்ட்கிரஸ் என்ற தரவுத் தளத்தை அடிப்படையாகக் கொண்டு, பிஎச்பி என்று கணினி மொழியைப் பயன்படுத்தி உருவாக்கியிருந்தோம்.
ராணிப்பேட்டை போன்ற இடங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இணைய இணைப்பு படுமோசமாக இருந்தது. அங்கிருந்து இணைத்து சோதனை ஓட்டத்தைக் காண்பிப்பது கூட சோதனையாக இருந்தது.
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 1
மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள் - 2
2 comments:
தகவல்களை இணையத்தில் போட்டு பலரை அங்கு போய் விபரங்களை பெற்றுக்கொள்ளுதல் என்பது சரி.உதாரணத்துக்கு விலைப்பட்டியல் ஏற்ற இறக்கங்களை எப்படி பிடிப்பது?ஒரு குழுமமாக பல நாடுகள்/நிறுவனங்கள் செய்தால் தானே பலருக்கும் பயன் இருக்கும்? அல்லது தோல் வியாபாரத்தில் விலை ஏற்ற இறக்கம் அவ்வளவாக இருக்காதா?
//தகவல்களை இணையத்தில் போட்டு பலரை அங்கு போய் விபரங்களை பெற்றுக்கொள்ளுதல் என்பது சரி.//
இணையத்தில் என்றால் பொதுவில் இல்லை. அவரவர் மென்பொருள் பயன்பாட்டில் அவரவர் அனுமதி காட்டி நுழைந்து கொள்ளலாம்.
செய்ய நினைத்தது பொதுவிலான போர்ட்டல் போன்ற பயன்பாடு இல்லை.
//அல்லது தோல் வியாபாரத்தில் விலை ஏற்ற இறக்கம் அவ்வளவாக இருக்காதா?//
ஒவ்வொரு பருவத்துக்கும் விலை பேசி வாங்குபவரும் விற்பவரும் முடிவு செய்து கொள்வார்கள். (காலணி, பதப்படுத்தப்பட்ட தோல் போன்றவை). பச்சைத் தோலின் விலை ஏறி இறங்கும்.
அன்புடன்,
மா சிவகுமார்
Post a Comment