Wednesday, February 13, 2008

படைப்பாளிகள்

நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 10 செகண்டுகளுக்குள் ஓடி முடித்து ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை வெல்லும் வீரர் அந்த பத்து விநாடிகள் மட்டும்தான் உழைத்தாரா?

பதினைந்து முதல் இருபது ஆண்டுகள் தினமும் மனம் குவித்து பயிற்சி செய்து, பொருத்தமான உணவு உண்டு, தூக்கத்தை மட்டுப்படுத்தி, மற்ற கேளிக்கைகளில் நேரம் செலவழிப்பதைக் குறைத்து செய்த முயற்சிகளின் விளைவுதான் இந்த பத்து விநாடிகளின் சாதனை.

ஒவ்வொரு துறையிலும் அது போன்ற உழைப்பும் சாதகமும் இருந்தால்தான் உலகை வெல்ல முடியும். ஒரு
ப சிதம்பரத்தையோ, மு கருணாநிதியையோ எளிதாக குறை கூறி விட்டுப் போய் விடுகிறோம். அவர்களுக்கு இருக்கும் பொறுப்பு எவ்வளவு பெரியது. பங்குச்சந்தையில் குறியீட்டு எண் மதிப்பு குறைந்து விட்டால் நிதியமைச்சருக்கு ஏன் பதறுகிறது என்று கேட்கிறோம்?

இன்ஃபோசிஸ் நிறுவனம் பெருமைப்படுத்தப்பட் கூலி வேலைதான் செய்கிறது என்று இடது கையால் ஒதுக்கித் தள்ள முயல்கிறோம். எத்தனை ஆண்டுகள் உழைப்பும் கருத்தும் கவனமும் உருவாக்கிய நிறுவனம் இத்தனை பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி உலகுக்கே சேவைப் பொருளாதாரம் என்று நம் ஊரில் வாய்ப்புகளை உருவாக்க முடிந்தது.

ஒரு அம்பானி/டாடா உருவாக்கிய நிறுவனம் போல, பில்கேட்சின் மைக்ரோசாப்டு போல, லினஸ் தோர்வால்ட்சின் லினக்சு போல உலகை உலுக்கும் ஆக்கங்களை எப்போது படைக்கப் போகிறோம்

இதற்குத் தேவை தனி மனித முயற்சியும் உழைப்பும், கூட்டாக சமூகத்தின் ஒருங்கிணைப்பும்.

ஜாம்ஷெட்பூர் என்ற ஒரு நகரையே உருவாக்கிக் காட்டிய டாடா போன்ற கனவு நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது. உலகத் தரத்தில் கட்ட வேண்டும் என்று உறுதியுடன் இருந்து, அரசு சட்டங்கள் வரும் முன்னரே தொழிலாளர்களை நிறுவனத்தின் சொத்துக்களாக மதித்து சம்பள விகிதம், பணி நேரம் போன்றவற்றை ஒழுங்கு படுத்திய டாடா போன்ற பெரிய படைப்பாளிகள் நம்மில் எப்போது வரப்போகிறார்கள்!

அதற்கு என்னென்ன தேவை?

12 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

Sivakumar, Ungal padhivugalai
Ellam padikkirane..ungaladhu samooga akkarai purigiradhu.
Paaraattugal

அமர பாரதி said...

என்ன மா.சி. அவர்களே, ஒரு பதிவில் ரிலையன்ஸை புறக்கனிப்போம் என்கிறீர்கள், இந்த பதிவில் அதே மாதிரியான நிறுவனங்களை புகழுகிறீர்கள். ஒன்னும் புரியலையே.

K.R.அதியமான் said...

the enterprising nature and drive found in entrepreuners like Jamshedji Tata, Bill Gates, Azim Premji, Hari NAnada (Escorts), Edison, Ford, etc are enabled and allowed to flourish to create wealth, capital, innovation and employment only in free marker capitalistic, democratic societies.
In a planned and collectivised economy like former USSR or pseudo-socialitic set up like India until 1991, such intiatives are neither possible nor permitted and these people are viewd as 'exploiting bourgeouise and class enimies of the workers.

Why couldn't such entrepreneuers like Azim Premzi, NArayanamurthy, Ambani, etc couldn't come up or flourish during Nehru's period and Indira's regin ? only old groups like Tatas and Birlas, etc alone were flourishing with no competition to their 'protected'
industries from both local and foreign companies !!

There is an important book called
'capitalism and freedom' by M.Friedman ; it describes the incompatibiltiy if socialism with basic democracy. In Chile, which was under the dictator Pinochet, the socilistic set up was diamanteled and the economic dynamics unleashed a new middle and entrepreuneral class which ultimately underminded the Pinochet's dictatoship and ulitmately ushered in democracy. Friedman was critised then for adiviing the Pinochet regime in economic matters. but his advice and directions helped Chile recover from terrible hyper-inflation and stagfaltion of the 60s and early 70s. now there is a vibrant democracy and economy there with no talk about 'revolutions' and US hegomony (as it was the norm in the 60s).

Economic freedom is as important as political and civil rights. they are all incompatible with socialisitc ideas. remeber the infamous MISA emergency by Indira Gandhi in 1975. She used the excuse of socialism to abolish basic rights and free speech, while the Russian communists supported her in the name of anti-capitalism. all mere mask..

Economic freedom leads to political freedom in the long run as proved by many nations like Chile and Indian experiance.
Now there is relatively more freedom here when compared to the heydays of socialistic raaj of Indira Gandhi regime, when crony caapitalism ruled, with the cronies and Congress leaders ganged up to prevent competition and threaten opposition and those who supported opposition. (like the oppression of industrialists and others who supported Rajaji's Swathanthra PArty in the 60s) .
The mere threat of cancellation of industrial license was enough to cow down industrialists. Selective Income tax raids and MRTP ACts were misuded to suppress opponents.
Pls read
Kuldip Nayyar's : India, the critical years ;
Rajinder Puri's 'Crisis of Conscience' ;

K.R.அதியமான் said...

பொருள் செய்ய விரும்பு என்று தலைப்பில், பேரசை பற்றிய விமர்சனம் முரண்பாடானாது. தொழில் முனைவோர் பேராசை படாவிட்டால் இவ்வளவு வளர்சி நடந்திருகுமா ? யாரையும் ஏமாற்றாமன், பித்தலாட்டம் செய்யாமல், பேராசை படுவது தவறல்ல. நெறி பிறழாமல் பொருள் ஈட்டுவதை பேராசை என்று குழப்பக்கூடாது.
உ.ம் : இன்போசிஸ் நாராயணமூர்த்தி, ஜெ.ஆர்.டி.டாட்டா...

மா சிவகுமார் said...

//Ungal padhivugalai Ellam padikkirane//

வாங்க ஐயா. நன்றி.

அமரபாரதி,

//ஒரு பதிவில் ரிலையன்ஸை புறக்கனிப்போம் என்கிறீர்கள், இந்த பதிவில் அதே மாதிரியான நிறுவனங்களை புகழுகிறீர்கள்//

'வச்சா குடுமி சிரைச்சா மொட்டை' என்று ஒரு அடாவடி செய்யும் நிறுவனத்தை புறக்கணித்தால் அதற்காக எல்லா தொழில் நிறுவனங்களையும் ஒதுக்க முடியுமா! ஆக்க பூர்வமாக, நெறிமுறைகளுக்கு உட்பட்டு தொழில் செய்யும் நிறுவனங்கள் புகழப்பட வேண்டியவைதானே.

ரிலையன்சு விதிகளை உடைப்பதே பழக்கமாக வைத்திருக்கிறது என்பது எனது ஆதங்கம்.

அதியமான்,
//உ.ம் : இன்போசிஸ் நாராயணமூர்த்தி, ஜெ.ஆர்.டி.டாட்டா...//
நாராயணமூர்த்தியும், ஜே ஆர் டி டாட்டாவையும் குறிப்பிட்ட நீங்கள் ஏன் அதை வரிசையில் இன்னும் சில தொழிலதிபர்களை சேர்க்கவில்லை? தொழில் முனைவுக்கும் பேராசைக்கும் வேறுபாடு நிறையவே உண்டு.

அன்புடன்,
மா சிவகுமார்

உண்மைத்தமிழன் said...

மா.சி. உங்களது இந்த பதிவு குழப்பமாகவே உள்ளது..

ரிலையன்ஸ் நிறுவனத்தை நீங்கள் புறக்கணிக்கச் சொன்னது அது மற்றைய நிறுவனங்களை அழித்துவிட்டு வளர்ந்தவை என்றீர்கள்..

இப்போது நீங்கள் உதாரணம் காட்டும்போது அம்பானியை உதாரணப்படுத்ததுகிறீர்கள்.

ஆக அப்படியாவது.. அதாவது அராஜகம் செய்தாவது முதலிடத்திற்கு வாருங்கள் என்று அழைக்கிறீர்கள்.. அப்படித்தானே..

இதென்ன புதுமையான கருத்தாக இருக்கிறது.

நீங்களே ஒருவரை ரவுடி என்கிறீர்கள். பின்பு அவனையே நல்லவன் என்றும் சொல்கிறீர்கள். குழப்பம்தான் மிஞ்சுகிறது மா.சி..

//'வச்சா குடுமி சிரைச்சா மொட்டை' என்று ஒரு அடாவடி செய்யும் நிறுவனத்தை புறக்கணித்தால் அதற்காக எல்லா தொழில் நிறுவனங்களையும் ஒதுக்க முடியுமா! ஆக்க பூர்வமாக, நெறிமுறைகளுக்கு உட்பட்டு தொழில் செய்யும் நிறுவனங்கள் புகழப்பட வேண்டியவைதானே.//

இப்படித்தான் அமரபாரதி அவர்களுக்கு பதில் சொல்லியிருக்கிறீர்கள்.. இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன? ரிலையன்ஸ் நிறுவனம் நேர்மையான நிறுவனம் என்றா..?

சென்ஷி said...

நான் இன்னும் மத்த பகுதிகளை படிக்கல...

எல்லாத்தையும் படிச்சுட்டு வந்து ஒழுங்கா பின்னூட்டம் போடறேன் :))

//பதினைந்து முதல் இருபது ஆண்டுகள் தினமும் மனம் குவித்து பயிற்சி செய்து, பொருத்தமான உணவு உண்டு, தூக்கத்தை மட்டுப்படுத்தி, மற்ற கேளிக்கைகளில் நேரம் செலவழிப்பதைக் குறைத்து செய்த முயற்சிகளின் விளைவுதான் இந்த பத்து விநாடிகளின் சாதனை.//

இது பிடிச்சுருக்குது :))

K.R.அதியமான் said...

///தொழில் முனைவுக்கும் பேராசைக்கும் வேறுபாடு நிறையவே உண்டு.////

pls explain how ? for e.g the mega projects of a large corp. is it greedy to dream big ?

KARTHIK said...

அரசு சட்டங்கள் வரும் முன்னரே தொழிலாளர்களை நிறுவனத்தின் சொத்துக்களாக மதித்து சம்பள விகிதம், பணி நேரம் போன்றவற்றை ஒழுங்கு படுத்திய டாடா போன்ற பெரிய படைப்பாளிகள் நம்மில் எப்போது வரப்போகிறார்கள்!

இது கொஞ்சம் சிரமம் தான்

மா சிவகுமார் said...

உண்மைத் தமிழன்,

//அதாவது அராஜகம் செய்தாவது முதலிடத்திற்கு வாருங்கள் என்று அழைக்கிறீர்கள//
//ரிலையன்ஸ் நிறுவனம் நேர்மையான நிறுவனம் என்றா..?//

மேலே அமரபாரதிக்கு சொன்னது போல, ஒரு நிறுவனத்தை உருவாக்குவதற்கான உழைப்பையும் தொலைநோக்கையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அது ரிலையன்சு அம்பானியிடமும் இருந்தது. அவர்களது நடவடிக்கைகள் தவறாக இருப்பதும் நடக்கிறது.

மரியன் ஜோன்ஸ் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டார் என்று அவரது பதக்கங்களை பறித்து விட்டார்கள். ஆனால், அவர் உழைப்பாலும் திறமையாலும்தான் முன்னணி வீராங்கனை ஆனார் என்பது மாறி விடவில்லைதானே!

(பட்டியலில் அம்பானி பேரை சேர்க்காமல் விட்டிருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்காதுதான்!)

சென்ஷி, நன்றி.

//the mega projects of a large corp. is it greedy to dream big ?//

இல்லை அதியமான். பெரிய திட்டத்தின் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள், பல கோடி வாடிக்கையாளருக்கு சேவை என்று கனவு காண்பது பேராசை இல்லை.

இத்தனை நூறு கோடி ரூபாயில் வீடு கட்டிக் கொள்ள வேண்டும். ஒரு திருமண விழாவுக்கு பல கோடிகளை வாரி இறைக்க வேண்டும் என்று நடந்து கொள்வது பேராசை.

வீடு கட்டினாலும் வேலை வாய்ப்பு உருவாகும் என்று சொல்லப் போகிறீர்கள் என்றால், அதற்கு முன் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அலசி ஆராய்ந்து விட்டு விளக்குங்கள்

அன்புடன்,
மா சிவகுமார்

K.R.அதியமான் said...

///இத்தனை நூறு கோடி ரூபாயில் வீடு கட்டிக் கொள்ள வேண்டும். ஒரு திருமண
விழாவுக்கு பல கோடிகளை வாரி இறைக்க வேண்டும் என்று நடந்து கொள்வது
பேராசை.

வீடு கட்டினாலும் வேலை வாய்ப்பு உருவாகும் என்று சொல்லப் போகிறீர்கள்
என்றால், அதற்கு முன் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அலசி
ஆராய்ந்து விட்டு விளக்குங்கள்///

MaSi,

Motive power is what drives aby entrepreuner. What if Ambani's motive
to intiate mega projects and build an empire is to own jet planes and
200 crore houses. he may consider them to be his 'remuneration' for
his hard work. Suppose if the govt or someone prevents him in spending
HIS money as he wishes, then he may loose the motive or intiative to
build empires.

People own and live in 6 crore houses in Chennai and elsewhere, own
luxury cars worth crores (Benz, Bentley); aren't they luxury ? who can
fix the parameters for luxury ?

we have tried all these ideas in the past and in China too with
negative results.

Personally not everyone can be a
ascetic person like you Shiva. you may not spend like that even if you
earn 1000 crores (or may be you too ? :))) ) ;
but can't expect a winning entrepreuner to live like Buddha.
it is neither practical and may be counter-productive in de-moralising
him / her.

and finally, yes, the spendings do trickle down. or where is the
spending goes to finally ? to heaven and God ?

மா சிவகுமார் said...

அதியமான்,

தொழில் முனைவின் அடிப்படை உந்துதல் புதிதாக உருவாக்கும் முனைப்பு. அடுத்தவருக்கு சேவை செய்யும் நோக்கம் என்று நான் கருதுகிறேன்.

எது ஆடம்பரம் என்பது ஒவ்வொருவரும் தீர்மானித்துக் கொள்ள வேண்டியது.

அன்புடன்,
மா சிவகுமார்