Thursday, May 24, 2007

எதுக்காக எல்லாம்.... (நிவதி (ERP) - 2)

http://kaniporul.blogspot.com/2010/08/erp_1535.html

11 comments:

நாமக்கல் சிபி said...

நன்றாகச் செல்கிறது! பாராட்டுக்கள் மா.சி.

நாமக்கல் சிபி said...

//எப்படிப்பட்ட விபரங்களை உள்வாங்க வேண்டும் என்பதற்கான படிவங்களின் மாதிரிகள் (form templates),//

முதலில் நம்மிடம் இருக்கும் அதாவது நம்முடைய மென்பொருளில் உள்ள படிவங்களின் மாதிரிகளைக் காட்டி அவர்களுக்குத் தேவையான தகவல்கள் அப்படிவத்தில் பெறப்படுகின்றனவா என்று உறுதிப் படுத்திக் கொள்ளலாம். மேலும் தேவையானவற்றை நாம் குறித்துக் கொண்டு அவர்களுக்கென்று உருவாக்கும் மென்பொருளில் அவற்றைச் சேர்க்கலாம்!

இம்மாதிரி பயன்படுத்தும் நபர்களிடம் இருந்து தகவல்கள்/தேவைகள் பற்றி அறிந்து ஆவணப்படுத்தும் கட்டம்தான் யூசர் ரெக்யூர்மெண்ட் ஸ்டடி எனப்படும்!

Unknown said...

Masi,

Pls give some more explanation on document templates.

நாமக்கல் சிபி said...

//document templates//

Document Templates என்பது அந்நிறுவனத்தின் அச்செடுக்கப் பட வேண்டிய ஆவணங்கள் என்று பொருள் படும்.

அதாவது பர்சேஸ் ஆர்டர், இன்வாய்ஸ், டெலிவரி சல்லான் போன்றவை சில அச்செடுக்கப் படவேண்டிய ஆவணங்கள் ஆகும். இவற்றிற்கான தமிழ் சொற்களை மாசி பின்னர் கூறுவார்.

இவற்றிற்கான நம்மிடம் உள்ள(நமது மென்பொருளில் உள்ள) மாதிரிகளையும் காட்டி வாடிக்கையாளரின் நிறுவனத்தில் உள்ளீடு செய்யப்படும் அனைத்து தரவுகளும் காட்டப்பட்டுள்ளனவா என்று உறுதி செய்து கொண்டு, எவையேனும் விடுபட்டிருப்பின் அவற்றையும் உள்ளீடு செய்வதற்குத் தேவையான மாற்றங்களை படிவங்களிலும்(ஃபார்ம்ஸ்), அல்லது கணக்கீடுகளை நமது நிரல்கள் வாயிலாகவும் ஏற்படுத்தித் தரவேண்டும்.

தென்றல் said...

நல்ல, (இனிமேல்) வழக்கத்தில் பயன்படுத்தகூடிய தமிழ் வார்த்தைகளையும் சேர்த்தே தெரிந்து கொள்ள முடிகிறது.

வாழ்த்துக்கள், சிவகுமார்!

நாமக்கல் சிபி said...

//இவற்றிற்கான தமிழ் சொற்களை மாசி பின்னர் கூறுவார்//

இங்கு மாசி என்று நான் குறிப்பிட்டது மாதம் அல்ல!

மா.சிவகுமார் என்பதையே மாசி என்று குறிப்பிட்டுள்ளேன்!

:)

மா சிவகுமார் said...

நாமக்கல் சிபி,

//படிவங்களின் மாதிரிகளைக் காட்டி அவர்களுக்குத் தேவையான தகவல்கள் அப்படிவத்தில் பெறப்படுகின்றனவா என்று உறுதிப் படுத்திக் கொள்ளலாம்.//

சரியாகச் சொன்னீர்கள். ஏற்கனவே மாதிரி இருந்தால் அதைக் காட்டலாம். முதல் முறை செய்யும் போது மாதிரிதான் முதல் படி.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் said...

//Pls give some more explanation on document templates.//

தேவ்,

நாமக்கல் சிபி சொன்னது போல, என்னதான் கணினி மயமானாலும் ஒரு அச்சடித்த தாள் இருந்தால்தான் பல இடங்களில் வேலை முடிகிறது. வங்கி தானியங்கி பண இயந்திரங்களில் கூட கடைசியில் ஒரு தாள் வெளி வந்தால்தான் திருப்தி வருகிறது.

அப்படி தேவைப்படும் ஆவணங்களை தகவல் உள்ளிட்ட கணினி பய்ன்பாட்டிலிருந்தே உருவாக்க வேண்டும். சிபி சொன்னது போல, ஏதாவது தகவல் நமது மாதிரியில் விட்டுப் போயிருந்தால் அதையும் சேர்ந்த்து வடிவமைக்க வசதியாக இருக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் said...

//நல்ல, (இனிமேல்) வழக்கத்தில் பயன்படுத்தகூடிய தமிழ் வார்த்தைகளையும் சேர்த்தே தெரிந்து கொள்ள முடிகிறது.//

நன்றி தென்றல், பயனர், இணையம், வலைப்பதிவு என்ப்து போல் இந்தச் சொற்களும் நாப்பழக்கத்தில் வழக்கத்தில் வந்து விடும் என்று நம்புவோம்.

//அதாவது பர்சேஸ் ஆர்டர், இன்வாய்ஸ், டெலிவரி சல்லான் போன்றவை சில அச்செடுக்கப் படவேண்டிய ஆவணங்கள் ஆகும். இவற்றிற்கான தமிழ் சொற்களை மாசி பின்னர் கூறுவார்.//

ஆகா, நாமக்கல் சிபி! நானே இவற்றை எல்லாம் சாய்சில் விட்டு விடலாம் என்று இருந்தேன், மாட்டி விட்டு விட்டீர்களே!

கீழே இருப்பது எனது சொந்த மொழிபெயர்ப்புகள். அரசு துறைகளில் நல்ல சொற்கள் புழங்கி வரும் என்று நினைக்கிறேன். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

ப்ர்சேஸ் ஆர்டர் = வாங்கல் ஆணை
இன்வாய்ஸ் = விற்பனை பட்டி
டெலிவரி செல்லான் = வழங்கல் பட்டி

அன்புடன்,

மா சிவகுமார்

பத்மா அர்விந்த் said...

விரும்பிப்படிக்கிறேன். நன்றி. இங்கேயும் அரசு நிறுவனங்களில் பல படிவங்களில் நீல மையினால் ஆன கையொப்பம் தேவை. பல படிவங்களில் கார்பன் வைத்து படிவெடுப்போம். நீங்கல் சொல்வதுபோல என்னதான் கணீணி மயமானாலும் கூட முதலுக்கும் படிவத்துக்கும் வேருபாடு காட்ட இன்னமும் தாள்தேவையாய் இருக்கிறது

மா சிவகுமார் said...

வாங்க பத்மா,

அரசு அலுவலகங்கள்தான் பழையன சீக்கிரம் கழிந்து விடாமல் பாதுகாக்கும் அற்புதங்கள் :-).

எல்லோருக்கும் கணினிகள் பழகிப் போய் விட்டால் தாள்களையும் விட்டு விடலாம்.

இணையம் மூலமாக வங்கிக் கணக்குகளை இயக்கும் போது எந்த அச்சிட்ட தாளும் இல்லாமல் இருப்பதை ஏற்றுக் கொள்கிறோம். பங்கு வணிகத்திலும், கணினிக் கணக்குகளில் எண்களை மாற்றுவது மூலமே வாங்கி விற்று விடுகிறார்கள்.

இது எல்லா இடங்களிலும் பரவ பல காலம் பிடிக்கலாம், சில இடங்களில் பரவாமலேயே போய் விடலாம். மனித மனங்களின் போக்கை யாரும் திட்டமிட்டு மாற்றி விட முடியாதுதான்!

அன்புடன்,

மா சிவகுமார்